காங்கிரஸ் கட்சி கர்னாடகாவை இழந்தது எப்படி?

செய்தியிலும் அமைப்பிலும் காங்கிரசுக்கு மாற்றம் தேவை

0
1884
சோசலிசம் பேசுவதை காங்கிரச் விட்டுவிட வேன்டும்
காங்கிரஸ் கட்சி

சோசலிசம் பேசுவதை காங்கிரஸ் விட்டுவிட வேன்டும் தன்னுடைய மரபுக்கூறில் இருந்து தனக்கென்றொரு அடையாளம் தேடும் முறையையும் அகற்ற வேண்டும்

மாநில அரசின் உளவு துறை அறிக்கை நாற்பது எம். எல். ஏக்களுக்கும் அதிகமானோர் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தது. முதலமைச்சர் சித்தராமைய்யா மீதும் காங்கிரஸ் அரசின் மீதும் வெறுப்பு இல்லாவிட்டாலும் கூட அதன் செயல்பாடுகள் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

அன்னபாக்யா [ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி] என்ற  திட்டம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்காக அறிவிக்கப்பட்டது, சித்தராமையா ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் இருந்தே காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக நம்பபடும் அஹிந்தா சமூகத்தினருக்காக பல்வேறு பாக்யா திட்டங்களை அறிமுகப்படுத்தினார். 2013இல் இவர்களால் தான் தனக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்ததாக அக்கட்சி நம்பியது.

மேலும் சித்தராமையாவின் பலவகையான நிர்வாகக் குளறுபடிகள்  பல்வேறு சாதியை சேர்ந்த மக்களிடையே எரிச்சலை வரவழைத்தன .  பழைய மைசூர் பகுதிகளில் குருபா இனத்தை சேர்ந்தவர்களுக்கு உயர்பதவிகள் அளித்தால் ஒக்கலிக சாதியினரின் கோபத்துக்கு ஆளானார் லிங்காயத்துகளுக்கு தனி சம்ய அந்தஸ்து அளிக்க பரிந்துரை செய்ததால் வீர சைவ இனத்தாருக்கு பகையை பெற்றார்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் தலித்துகளின் வாழ்வில் எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படாதால் அவர்களும் மகிழ்ச்சியாக இல்லை, சிறுபான்மையினரும் இந்த காங்கிரஸ் ஆட்சியில் தங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று எதிர் நிலை எடுத்திருந்தனர்.

2018இல் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் முதன் முறையாக இளைஞர்கள் தேர்தலில் நல்ல முடிவெடுத்திருந்தனர். அடையாளம் கோரும் காங்கிரசின்  அரசியலை இளைஞர்கள் எதிர்த்தனர். இதனால் காங்கிரசு கட்சி இளைஞர்களின் ஆதரவை மொத்தமாக இழந்தது. இதன் தோல்விக்கு மற்ற சில சமூகத்தினரும் காரணமாக இருந்தனர்.

தேர்தலுக்கு முன்பு கடைசி வாரத்தில் பிரதமர் மோடியின் சூறாவளி சுற்றுப்பயணம் காங்கிரசை இன்னொரு கொள்கை குளறுபடிக்கு தூண்டியது. சமூக ஊடகங்களின் கேள்விகளால் துளைக்கப்பட்டு அக்கட்சி 2019இல் நடைபெறப் போகும் தெர்தலில் யார் ஜனாதிபதி யார் பிரதமர் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவைத்தது. பிரதமர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சித்தராமையாவும் ராகுலும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் முரண்பட்ட பதில்களை அளித்து வந்த நிலையில் முக்கிய குறிக்கோளை கைவிட்டுவிட்டனர். தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இருவரும் தங்களின் முயற்சிகள் வீணாக போவதை அறிந்தனர். உடனே சித்த்ராமையா நான் பிரதமருடன் போட்டி போடவில்லை எடியூரப்பாவை பதினைந்து நிமிடம் விவாதத்துக்கு அழைக்கிறேன் என்று பிரதமர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் நழுவினார். இந்த முன்னாள் இந்நாள் முதலமைச்சர்களுக்கு இடையிலான விவாதங்களும் வீண் பேச்சுக்களும் மக்களுக்கு எரிச்சலூட்டின.

இந்த தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சி நல்ல முறையில் தயாராக இருந்து. 2008இல் ஆட்சியில் இருந்த போது சில தவறுகள் செய்து மக்களின் அதிருப்திக்கு ஆளாகியிருந்தவர்களை விடுத்து பிரதமரையும் அமித் ஷாவையும் பிரச்சாரக் களத்தில் இறக்கியது. இளைஞர்களை குறி வைத்து, வீரசைவ – லிங்காயத்து சமூகத்தினரின் மீது பி.ஜெ..பி கட்சிக்குள்ள கரிசனம், பரிவு ஆகியவ்ற்றை வலியுறுத்தி, எந்த கட்சிக்கு ஓட்டு போடுவது என்று தெரியாமல் இருக்கும் கட்சி சார்பில்லாத வாக்காளர்களின் ஆதரவை பெறுகின்ற வகையில் பிரதமரின் பிரச்சார முறைகள் வடிவமைக்கப்பட்டன.

கடற்கரை பகுதிகளில் வெற்றி நிச்சயம் என்று உள்ளூர் கட்சி தலைவர்கள் தெரிவித்ததால்அந்த பகுதிகளில் பி.ஜெ பி தன் பிரச்சாரத்தை தீவிரமாக்கியது. பழைய மைசூர் பகுதிகளில் பி.ஜெ.பிக்கு ஆதரவு குறைந்திருப்பதால் இங்கு  இந்த முறை அதிகம் உழைக்கவில்லை. இங்கு பிரதமர் பிரச்சாரம் செய்தாலும் பெரிய அளவில் வாக்குகள் வரப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது

அனைத்து பிரச்சார கூட்டங்களிலும் பிரதமர் வளர்ச்சிக்கான மந்திரத்தை எடுத்துக்கூறினார். அடுத்தபடியாக காங்கிரசின் தலைவர்களை தாக்கில் பேசி அவர்களின் இயலாமையை வலியுறுத்தினார்.  பழைய தலைவர்கள் ஊழலை ஒழித்து அரசு இயந்திரத்தை சரி செய்து இளைஞர்களுக்கு அரசு பணிகளில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக பேசி வந்த போது பிரதமரோ இளைஞர்களிடம்  நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி குறித்து பேசி அவர்களைக் கவர்ந்தார். பிரதமரின் பேச்சு இளைஞர்களை பெரிதும் ஈர்த்தது. மாநிலத்தில் இருக்கும் ஊழல் தலைவர்களை கண்டு வெறுத்து போயிருந்த மக்களுக்கு பிரதமரின் வாக்குறுதிகள் மிகுந்த நம்பிக்கை அளித்தன.

ஜனதா தளம் கட்சி மீண்டும் ஐம்பது இடங்களை கூட பெறவில்லை. 21% வாக்காளர்கள் பொதுவில்  நின்று இதற்கு வாக்களித்துள்ளனர். 2013இல் குமாரசாமியை அதிகளவில் நம்பி இந்தக் கட்சி இருந்தது போல இந்த முறை இருக்க இயலவில்லை. இக்கட்சி கிராமப்புற வாக்குகளை அதிக அளவில் நம்பியதால் இளைஞர்களை கவர தவறிவிட்டது, அவர்களுக்கான வாக்குறுதிகள் எதுவும் கவர்ச்சிகரமாக இல்லை. ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் விவசாய கடங்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்களித்திருந்து. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும் முதியவர்களுக்கும் உதவி தொகை வழங்க போவதாகவும் வாக்குறுதியில் குறிப்பிட்டுருந்தது. இவற்றிற்கு விவசாயிகள் மற்றும் முதியவர்கள் தவிர ஏனையோரிடம் வரவேற்பு காணப்படவில்லை. இளைஞர்கள் இந்தக் கட்சியின் மீது அதிருப்தியாக இருந்ததால் இக்கட்சியை புறக்கணித்தனர். சி வோட்டர்  நடத்திய தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில் முஸ்லீம்கள் ஜனதா தளத்தை விட பாரதீய ஜனதா கட்சிக்கே அதிகளவில் வாக்களித்திருந்தனர் என்பது தெரிய வந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டும் தலித் வாக்குகளை பெற்று தரவில்லை.

இந்த கர்னாடகா தேர்தல் அடுத்து 2019இல் நடக்கும் பாராளுமன்ற தேர்தலை பற்றி நமக்கு முன்கூட்டி என்ன தகவலைத் தெரிவிக்கிறது? பிரதமரின் மீதான ஈர்ப்பும் நம்பகத்தன்மையும் குறையவில்லை, வேறு எந்த இந்திய தலைவரை காட்டிலும் இளைஞர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு அதிக அளவில் இருக்கிறது வேறெவரும் இவரை போல அவர்களை கவர்ந்து இல்லை என்று உறுதியாக கூறலாம்

இன்னோரு புறம் காங்கிரசுக்கு அமைப்பு ரீதியாகவும் அவர்கள் மக்களுக்கு அளிக்கும் செய்தியிலும் மாற்றம் தேவை என்பதை இந்த தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்தக் கட்சி இன்னும் தனி அடையாளம் கோரும் முயற்சிகளில் காலத்தை வீணடிக்க கூடாது, தங்களின்  பழைய வறட்டு வாதமான சோசலிசக் கொள்கைகளை பேசிக்கொண்டிருக்க கூடாது. வெளியில் உள்ள அமைப்புகளையும் சங்கங்களையும் வாக்குகளுக்காக எதிர்பார்த்திருக்காமல் தன்னுடைய கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்து னாட்டின் நலனுக்காக உழைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இப்போது இருக்கும் அக்கட்சி தலைவர் வரும் 2019இல் பி.ஜெ.பிக்கு நல்ல சவாலாக இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here