காற்றாலை, சூரிய மின்சாரம் கொண்டு இந்தியாவின் மின் தேவையை எந்த அளவில் பூர்த்தி செய்ய முடியும்?

காற்றாலை, சூரிகாற்றாலை, சூரிய மின்சாரம் கொண்டு இந்தியாவின் மின் தேவையை எந்த அளவில் பூர்த்தி செய்ய முடியும்?

0
3109
மின்சாரம் காற்றாலை, சூரிய மின்சாரத்தில் மோடி அரசின் சாதனைகள்
மின்சாரம் காற்றாலை, சூரிய மின்சாரத்தில் மோடி அரசின் சாதனைகள்

மத்திய அரசு, இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு மற்றும் பெட்ரோல், டீசலின் தேவையை குறைக்க வேண்டியதின் அவசியத்தை குறித்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய குறைப்பு சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுக்கவும், இறக்குமதியை குறைக்கவும்; அவசியமாகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாரீஸில் நடந்த உலக சுற்றுப்புற சூழல் மாநாட்டில, காற்றாலை, சூரிய சக்தி போன்றவற்றை கொண்டு 175,000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறனை ஏற்படுத்தும் என உறுதி அறிவித்துள்ளது. உலகில் பல நாடுகள் மோடி அரசின் இத்தகைய தீர்மானத்தை, சுற்றுப்புற சூழலை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று கூறி வெகுவாக பாராட்டின.

மின்சாரம் காற்றாலை, சூரிய மின்சாரத்தில் மோடி அரசின் சாதனைகள்

காற்றாலை மற்றும் சூரிய சக்தி கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு மத்திய அரசு பெரிதும் ஆதரவும், ஊக்கமும் அளித்து வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மோடி அரசு பதவி ஏற்றபோது இந்தியாவின் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் சுமார் 1500 மெகா வாட் என்ற நிலையில் இருந்தது. தற்போது நாலரை வருடங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் 25,000 மெகா வாட் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதே போல், காற்றாலை சார்ந்த மின் திறனும் கணிசமாக உயர்ந்து தற்போது 32,500 மெகா வாட் என்ற அளவை எட்டியுள்ளது.

இந்த அளவு காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி உற்;பத்தி திறன் நாலரை ஆண்டுகளில் கூட்டியிருப்பது மகத்தான சாதனை. கடந்த 60 வருடங்களில் இத்தகைய முன்னேற்றமான வேகம் காணப்பட்டதே இல்லை.

காற்றாலை, சூரிய சக்தி மின்சாரம் எந்த அளவில் உதவும்?

இருப்பினும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் திறன் இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் தேவையை போதுமான அளவு குறைக்காது.

தற்போது, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறன் 3,45,000 மெகா வாட். நாட்டின் மின்சார தேவை சுமார் 1,71,000 மெகா வாட். இந்தியாவின் 80 சதவீதம் மின் உற்பத்திக்கு நிலக்கரி, இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் எரி பொருளாக உபயோகிக்கப்படுகிறது.

நாட்டின் மின் தேவை ஆண்டொன்றிற்கு சுமார் 6.5 சதவீதம் கூடி வருகிறது. இத்தகைய கூடுதலான தேவை வருங்காலத்தில் தொடரும்.

இந்தியாவின் மின் உற்பத்தி கணிசமான அளவு நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவை எரி பொருளாக கொண்டு செய்யப்படுவதாலும், போக்குவரத்து, தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் பெருமளவில் தேவைப்படுவதாலும், கடந்த ஆண்டு சுமார் 220 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால்,இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆண்டொன்றிற்கு சுமார் 32 மில்லியன் டன் தான்.

இந்தியாவில் கடந்த வருடம் சுமார் 25000 மில்லியன் க்யூபிக் மீட்டர் (cubic metre) இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இந்தியாவின் இயற்கை எரி வாயு உற்பத்தி ஆண்;டொன்றிற்கு சுமார் 32000 மில்லியன் க்யூபிக் மீட்டர் என்ற அளவே உள்ளது.

தேவை கூடிவருவதால் இந்தியாவின் கச்சாஎண்ணெய், இயற்கை எரி வாயுவின் இறக்குமதி ஆண்டிற்கு 6 சதவீதம் அளவு கூடி வருகிறது. இத்தகைய கூடுதல் வரும்காலத்தில் தொடரும்.

தற்போது, இந்தியா ஈட்டும் அந்நிய செலவாணியில் 70 சதவீதம், கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு இறக்குமதி செய்யவே செலவிடப்படுகிறது. மேலும் இறக்குமதி கூடும் நிலையில், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு நிலை மிகவும் பாதிக்கப்படும்.இந்தியாவின் பொருளாதாரமே சிக்கலான நிலையை சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படக் கூடும். இவ்வாறு ஏற்படக்கூடிய இக்கட்டான நிலையை காற்றாலை, சூரிய மின்சக்தியை மேலும் கூட்டுவதனால் தவிர்க்க முடியுமா என்பதே கேள்வி.

குறைவாக காற்றாலை, சூரிய மின்சக்தி உற்பத்தி

பிரச்சினை என்னவென்றால் சூரிய மின்சக்தி உற்பத்தி திறனில்,சுமார் 15 சதவீதம் அளவே மின் சக்தி உற்பத்தி செய்யக் கூடும். காற்றாலை மின் சக்தியில், சுமார் 30 சதவீதம் அளவே மின் சக்தி உற்பத்தி செய்யக் கூடும். இத்தகைய குறைவான மின் உற்பத்திக்கு காரணம், சூரிய ஒளி 24 மணி நேரமும் கிடைக்காது என்பதும், காற்று வருடத்திற்கு சுமார் 4 மாதமே தேவையான வேகத்தில் வீசும் என்பதும், சூரிய ஒளியை ஒரளவே மின் சக்தியாக மாற்ற முடியும் என்பதே.

அதாவது 25000 மெகா வாட் சூரிய மின் சக்தி திறனுள்ள நிலையில் மின் சக்தி உற்பத்தி அளவு 3750 மெகா வாட் அளவே கிடைக்கக்கூடும்.

அதாவது, இந்தியா 1,75,000 மெகா வாட் சூரிய மின் சக்தி, காற்றாலை மின் சக்தி மற்றும் நீh மின் சக்தி போன்றவற்றால் உற்பத்தி திறன் கூட்டினாலும், கிடைக்கக்கூடிய மின்சாரம் சுமார் 35000 மெகா வாட் என்றே நிலையே காணப்படும்.

மின்சாரத்தில் இயங்கும் கார், ரயில்

மோடி அரசு மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்து வாகனங்கள் உற்பத்திக்கும்;, உபயோகத்திற்கும் பெரிதளவில் ஊக்கம் அளித்துவருகிறது. இந்தியா முழுவதும் மின்சாரம் கொண்டே ரயில் எஞ்சின்களை இயக்க தேவையான ஆயத்த பணிகளை செய்து வருகிறது.

மின்சாரம் கொண்டு இயங்கும் வாகன ஊர்திகள், மற்றும் மின்சார ரயில் இயங்க பாட்டரிகள் தேவை. இந்த பாட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவை. இந்த மின்சாரம் டீசலையோ, இயற்கை எரி வாயுவையோ கொண்டு தயாரிக்கப்பட்டால், நாட்டின் டீசல், இயற்கை எரிவாயுவின் தேவையும், இறக்குமதியும் குறையாது.

மாற்று நடவடிக்கை

சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி பெரிதளவில் அதிகரிக்கப்பட்டாலும், இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவின் தேவை ஒரளவே குறையும். கணிசமான அளவு குறையாது.

இத்தகைய நிலையில், கடல்பாசி கொண்டு எரிபொருள் தயாரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டும்.

இருப்பினும், இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் கடல்பாசியை எரிபொருளாக உபயோகிக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை பற்றி ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை.

சமீப காலங்களில் வளர்ந்த நாடுகளில், கடல்பாசியிலிருந்து எரிபொருள், மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் கடற்பாசியை குறித்த ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகளில், கடல்பாசியிலிருந்து எரி பொருள் தற்போது வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படுகின்றது.

கடல்பாசி விவசாயம் செய்ய தேவையானது சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்ஸைடு தான். கழிவு நீர் கூட தண்ணீராக உபயோகிக்கலாம். இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு கடல்பாசி விவசாயம் மிகவும் ஏற்றது. கடல்பாசி விவசாயம் அறுவடை செய்ய 30 முதல் 40 நாட்கள் தான் தேவை. கடல்பாசியில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை எண்ணெய் காணப்படும்.

இந்தியாவில் சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்ஸைடும் தேவையான அளவு கிடைக்கின்றன.

கடல்பாசியிலிருந்து எரி பொருளாக உபயோகிக்கக்கூடிய எண்ணெயை பிரித்து எடுத்துவிட்டு மீதமுள்ள சக்கையிலிருநது எத்தனால் தயாரிக்கலாம்.

கடல்பாசியை கடல்புறங்களிலும், தரிசு நிலங்களிலும் விவசாயம் செய்து, அவற்றிலிருந்து எரிபொருள் மற்றும் வேதிப்பொருட்களை தயாரிக்கும் திட்டத்தை அமல்படுத்தினால், எரிபொருள் கிடைப்பது மாத்திரமல்லாமல் விவசாயம், தொழில்துறைக்கு மிகுந்த நன்மை ஏற்படும். வேலை வாய்ப்புகள் பெருகும்.

இந்தியா முழுவதும்; நூறு தொழிற்சாலைகளுக்குமேல் அமைத்து கடல்பாசியிலிருந்து எரிபொருளை தயாரிக்க சாத்திய கூறுகள் உள்ளன.ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சுமார் ரூபாய் 150 கோடி முதலீடு தேவைப்படும். உடனடி தேவைக்கு வளர்ந்த நாடுகளிலிருந்து தொழில்நுட்பம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தை அவசரமாக மோடி அரசு அமல்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

மத்திய அரசு, இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு மற்றும் பெட்ரோல், டீசலின் தேவையை குறைக்க வேண்டியதின் அவசியத்தை குறித்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய குறைப்பு சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுக்கவும், இறக்குமதியை குறைக்கவும்; அவசியமாகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாரீஸில் நடந்த உலக சுற்றுப்புற சூழல் மாநாட்டில,; காற்றாலை, சூரிய சக்தி போன்றவற்றை கொண்டு 175000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறனை ஏற்படுத்தும் என உறுதி அறிவித்துள்ளது. உலகில் பல நாடுகள் மோடி அரசின் இத்தகைய தீர்மானத்தை, சுற்றுப்புற சூழலை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று கூறி வெகுவாக பாராட்டின.

காற்றாலை, சூரிய மின்சாரத்தில் மோடி அரசின் சாதனைகள்

காற்றாலை மற்றும் சூரிய சக்தி கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு மத்திய அரசு பெரிதும் ஆதரவும், ஊக்கமும் அளித்து வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மோடி அரசு பதவி ஏற்றபோது இந்தியாவின் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் சுமார் 1500 மெகா வாட் என்ற நிலையில் இருந்தது. தற்போது நாலரை வருடங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் 25000 மெகா வாட் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதே போல், காற்றாலை சார்ந்;த மின் திறனும் கணிசமாக உயர்ந்து தற்போது 32500 மெகா வாட் என்ற அளவை எட்டியுள்ளது.

இந்த அளவு காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி உற்;பத்தி திறன் நாலரை ஆண்டுகளில்; கூட்டியிருப்பது மகத்தான சாதனை. கடந்த 60 வருடங்களில் இத்தகைய முன்னேற்றமான வேகம் காணப்பட்டதே இல்லை.

காற்றாலை, சூரிய சக்தி மின்சாரம் எந்த அளவில் உதவும்?

இருப்பினும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் திறன் இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் தேவையை போதுமான அளவு குறைக்காது.

தற்போது, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறன் 3,45,000 மெகா வாட். நாட்டின் மின்சார தேவை சுமார் 1,71,000 மெகா வாட். இந்தியாவின் 80 சதவீதம் மின் உற்பத்திக்கு . நிலக்கரி, இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் எரி பொருளாக உபயோகிக்கப்படுகிறது.

நாட்டின் மின் தேவை ஆண்டொன்றிற்கு சுமார் 6.5 சதவீதம் கூடி வருகிறது. இத்தகைய கூடுதலான தேவை வருங்காலத்தில் தொடரும்.

இந்தியாவின் மின் உற்பத்தி கணிசமான அளவு நிலக்கரி,கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவை எரி பொருளாக கொண்டு செய்யப்படுவதாலும், போக்குவரத்து, தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் பெருமளவில் தேவைப்படுவதாலும், கடந்த ஆண்டு சுமார் 220 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால்,இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆண்டொன்றிற்கு சுமார் 32 மில்லியன் டன் தான்.

இந்தியாவில் கடந்த வருடம் சுமார் 25000 மில்லியன் க்யூபிக் மீட்டர் (cubic metre) இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இந்தியாவின் இயற்கை எரி வாயு உற்பத்தி ஆண்டொன்றிற்கு சுமார் 32000 மில்லியன் க்யூபிக் மீட்டர் என்ற அளவே உள்ளது.

தேவை கூடிவருவதால் இந்தியாவின் கச்சாஎண்ணெய், இயற்கை எரி வாயுவின் இறக்குமதி ஆண்டிற்கு 6 சதவீதம் அளவு கூடி வருகிறது. இத்தகைய கூடுதல் வரும்காலத்தில் தொடரும்.

தற்போது, இந்தியா ஈட்டும் அந்நிய செலவாணியில் 70 சதவீதம், கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு இறக்குமதி செய்யவே செலவிடப்படுகிறது. மேலும் இறக்குமதி கூடும் நிலையில், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு நிலை மிகவும் பாதிக்கப்படும். இந்தியாவின் பொருளாதாரமே சிக்கலான நிலையை சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படக் கூடும். இவ்வாறு ஏற்படக்கூடிய இக்கட்டான நிலையை காற்றாலை, சூரிய மின்சக்தியை மேலும் கூட்டுவதனால் தவிர்க்க முடியுமா என்பதே கேள்வி.

குறைவாக காற்றாலை, சூரிய மின்சக்தி உற்பத்தி

பிரச்சினை என்னவென்றால் சூரிய மின்சக்தி உற்பத்தி திறனில்,சுமார் 15 சதவீதம் அளவே மின் சக்தி உற்பத்தி செய்யக் கூடும். காற்றாலை மின் சக்தியில், சுமார் 30 சதவீதம் அளவே மின் சக்தி உற்பத்தி செய்யக் கூடும். இத்தகைய குறைவான மின் உற்பத்திக்கு காரணம், சூரிய ஒளி 24 மணி நேரமும் கிடைக்காது என்பதும், காற்று வருடத்திற்கு சுமார் 4 மாதமே தேவையான வேகத்தில் வீசும் என்பதும், சூரிய ஒளியை ஒரளவே மின் சக்தியாக மாற்ற முடியும் என்பதே.

அதாவது 25000 மெகா வாட் சூரிய மின் சக்தி திறனுள்ள நிலையில் மின் சக்தி உற்பத்தி அளவு 3750 மெகா வாட் அளவே கிடைக்கக்கூடும்.

அதாவது, இந்தியா 1,75,000 மெகா வாட் சூரிய மின் சக்தி, காற்றாலை மின் சக்தி மற்றும் நீh மின் சக்தி போன்றவற்றால் உற்பத்தி திறன் கூட்டினாலும், கிடைக்கக்கூடிய மின்சாரம் சுமார் 35000 மெகா வாட் என்றே நிலையே காணப்படும்.

மின்சாரத்தில் இயங்கும் கார், ரயில்

மோடி அரசு மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்து வாகனங்கள் உற்பத்திக்கும்;, உபயோகத்திற்கும் பெரிதளவில் ஊக்கம் அளித்துவருகிறது. இந்தியா முழுவதும் மின்சாரம் கொண்டே ரயில் எஞ்சின்களை இயக்க தேவையான ஆயத்த பணிகளை செய்து வருகிறது.

மின்சாரம் கொண்டு இயங்கும் வாகன ஊர்திகள், மற்றும் மின்சார ரயில் இயங்க பாட்டரிகள் தேவை. இந்த பாட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவை. இந்த மின்சாரம் டீசலையோ, இயற்கை எரி வாயுவையோ கொண்டு தயாரிக்கப்பட்டால், நாட்டின் டீசல், இயற்கை எரிவாயுவின் தேவையும், இறக்குமதியும் குறையாது.

மாற்று நடவடிக்கை

சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி பெரிதளவில் அதிகரிக்கப்பட்டாலும், இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவின் தேவை ஒரளவே குறையும். கணிசமான அளவு குறையாது.

இத்தகைய நிலையில், கடல்பாசி கொண்டு எரிபொருள் தயாரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டும்.

இருப்பினும், இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் கடல்பாசியை எரிபொருளாக உபயோகிக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை பற்றி ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை.

சமீப காலங்களில் வளர்ந்த நாடுகளில், கடல்பாசியிலிருந்து எரிபொருள், மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் கடற்பாசியை குறித்த ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகளில், கடல்பாசியிலிருந்து எரி பொருள் தற்போது வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படுகின்றது.

கடல்பாசி விவசாயம் செய்ய தேவையானது சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்ஸைடு தான். கழிவு நீர் கூட தண்ணீராக உபயோகிக்கலாம். இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு கடல்பாசி விவசாயம் மிகவும் ஏற்றது. கடல்பாசி விவசாயம் அறுவடை செய்ய 30 முதல் 40 நாட்கள் தான் தேவை. கடல்பாசியில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை எண்ணெய் காணப்படும்.

இந்தியாவில் சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்ஸைடும் தேவையான அளவு கிடைக்கின்றன.

கடல்பாசியிலிருந்து எரி பொருளாக உபயோகிக்கக்கூடிய எண்ணெயை பிரித்து எடுத்துவிட்டு மீதமுள்ள சக்கையிலிருநது எத்தனால் தயாரிக்கலாம்.

கடல்பாசியை கடல்புறங்களிலும், தரிசு நிலங்களிலும் விவசாயம் செய்து, அவற்றிலிருந்து எரிபொருள் மற்றும் வேதிப்பொருட்களை தயாரிக்கும் திட்டத்தை அமல்படுத்தினால், எரிபொருள் கிடைப்பது மாத்திரமல்லாமல் விவசாயம், தொழில்துறைக்கு மிகுந்த நன்மை ஏற்படும். வேலை வாய்ப்புகள் பெருகும்.

இந்தியா முழுவதும் நூறு தொழிற்சாலைகளுக்குமேல் அமைத்து கடல்பாசியிலிருந்து எரிபொருளை தயாரிக்க சாத்திய கூறுகள் உள்ளன.ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சுமார் ரூபாய் 150 கோடி முதலீடு தேவைப்படும். உடனடி தேவைக்கு வளர்ந்த நாடுகளிலிருந்து தொழில்நுட்பம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தை அவசரமாக மோடி அரசு அமல்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here