சபரிமலையில் கேரளா போலிசாரின் அக்கிரமம்

கேரளா போலிசார் சபரிமலையில் என்ன செய்தார்கள்?

0
1771
கேரளா போலிசார் சபரிமலையில் என்ன செய்தார்கள்?
கேரளா போலிசார் சபரிமலையில் என்ன செய்தார்கள்?

செவ்வாய்க்கிழமை காலையில் சபரி மலையில் ஐயப்பன் சந்நிதானத்துக்குள் பக்தர்களை வர விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் கேரள அரசும் அதன் ஏவல் துறையான காவல் துறையும் Democratic Youth Federation of India (DYFI)அமைப்பும் மேற்கொண்டன.  முதல்வர் பினரயி விஜயனின் உத்தரவின் பேரில் போலிஸ் ஐ ஜி சபரி மலைக்கு வந்து பக்தர்களின் வரவைத் தவிர்க்க கழிப்பறைகள் அனைத்தும் மூடும்படி உத்தரவிட்டார்.

முதலமைச்சர் பினரயி  விஜயன் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அதிக தொல்லை கொடுத்து எந்த வசதியும் செய்து தராமல அவர்களை தவிக்க விட்டு இனி இங்கு வர விடாமல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஐ ஜி நேரில் வந்து அனைத்து தங்கும் விடுதிகளையும் மூடி ‘சீல்’ வைத்துவிட்டார். வெளியூர் பக்தர்கள் யாரும் சபரி மலைக்கு வந்து தங்கக் கூடாது என்ற நோக்கத்தில் இவ்வாறு லாட்ஜ்கள் மூடப்பட்டன. குடி நீர் வழங்கல் திங்கட்கிழமை மாலையில் இருந்தே நிறுத்தப்பட்டு விட்டது.  இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் குடிக்க தண்ணீர் இன்றி தாகத்தில் நா வறண்டு தவித்தனர். குறிப்பாக சிறு குழந்தைகள் உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி தவித்தது மிகவும் பரிதாபமாக இருந்தது.

அரசும் அதன் ஏவல் துறையான காவல் துறையும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சிரமப்பட வைத்து இனி இங்கு வரவே கூடாது என்ற முடிவுடன் திருப்பி அனுப்ப வேன்டும் என்ற முனைப்பில் இவ்வாறு ஹோட்டல்களையும் கழிப்பறையையும் பூட்டி வைத்து அடிப்படை வசதிகளை செய்யாமல் அவர்களைத் தவிக்க விடுகின்றனர்.  இதையும் மீறி வரும் பக்தர்களை போலிசார் விசாரணை என்ற பெயரின் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர். இங்கு ஏன் வருகிறீர்கள்? இங்கு உங்களை யார் வரச் சொன்னார்கள்? உங்களுக்கு எவ்வளவு நாளாக இந்த ஐயப்பனை தெரியும்? என்று பல கேள்விகளை கேட்டு அவர்களை நிம்மதியாக சாமி கும்பிட விடாமல் இம்சிக்கின்றனர்.  இந்த விவரங்களை அங்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற கண்ணூரை சேர்ந்த ராஜேந்திரன் என்ற பக்தர் நம்மிடம் தெரிவித்தார்.

இன்னும் ஒரு கேவலமான வழீமுறையை போலிசார் பின்பற்றினர். அங்கு நடுவயது பெண்களை போலிசாக பாதுகாப்பு பணிக்கு வரவழைத்து அவர்களை இறுக்கமான உடைகளை உடுத்தி வரச் செய்து கோயிலுக்கு வரும் இளைஞர்களை பார்த்து கண்ணடிக்கவும் காமப் பார்வை பார்க்கவும் வைத்தனர். இந்தத் திட்டமும் தவிடுபொடியாகி விட்டது.

ஆயிரக் கணக்கானோர் சபரி மலைக்கு வந்திருந்தும் கடைகள அனைத்தையும் போலிசார் பூட்டும்படி உத்தரவிட்டதால் அந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் போலவே தோன்றியது. அன்று முழுக்க ஜனம் டிவியில் வரும் நிகழ்ச்சிகளை பினரயி விஜயன் பார்த்துக்கொண்டே இருந்தார். ஏஷியா நெட், மனோரமா, மாத்ருபூமி, கைராளி போன்ற மற்ற டிவிகள் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தின் உத்தரவுகளின் படி நிகழ்ச்சிகளைக் காட்டி வந்தன. எனவே அவர் அவற்றை பார்ப்பதில் ஆர்வம் காட்டாமல் சுதந்திரமாக இயங்கும் ஜனம் டிவியை மட்டும் பார்த்தார்.

முதலமைச்சர் பினரயி  விஜயன் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அதிக தொல்லை கொடுத்து எந்த வசதியும் செய்து தராமல அவர்களை தவிக்க விட்டு இனி இங்கு வர விடாமல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பத்து வயது முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களை உள்ளே அனுமதிக்கவும் ஆவன செய்து வருவதாகவும் அங்குள்ள சிறப்பு கிளையின் போலிஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். .

திங்களன்று மாலை ஒரு முப்பது வயதுடைய இளம் பெண் கோயிலுக்குள் வர முயற்சி செய்தார். ஆனால் ஐயப்ப பக்தர்கள் அவரை கோயிலுக்குள் விடாமல் தடுத்துவிட்டனர். இந்த பெண்ணின் பெயர் விஜி சேர்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் கணவர் சி பி ஐ [எம்] கட்சி பிரமுகர்; இவர் பேரில் பல கொலை வழக்குகள் உள்ளன. ‘’நீ கோயிலுக்குள் வர சம்மதித்தால் உன் கணவர் பேரில் உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்’’ என்று விஜியிடம் போலிசார் ஆசை வார்த்தைகளை கூறி அப்பெண்ணை கோயிலுக்குள் அழைத்து வர அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டனர். அந்த பெண் ஐயப்ப பக்தை இல்லாவிட்டாலும் கோயிலுக்குள் உள்ளே வரத் தயங்கி இருக்கிறார். அதன் பிறகு போலிசார் அவளை மிரட்டத் தொடங்கினர். அந்தப் பெண்ணின்  கணவனை வைத்து மிரட்டி கோயிலுக்குள் வரவைக்க திட்டமிட்டனர்.

சென்னையில் மஹாபலிபுரத்தில் உள்ள ஓர் ஐயப்பன் கோயிலில் இருந்து ஆண்டுதோறும் 300 பேர் இருமுடி கட்டி சபரிமலைக்குப் போவார்கள்.  ஆனால் இந்த தீர்ப்பின் விளைவால் இந்த ஆன்டு வெறும் 18 பேர் தான் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றனர். என்று அந்தக் கோயிலின் அதிகாரி அசோக் தெரிவித்தார்.

மார்க்சிசம் மற்றும் மாவோயிசம் சார்ந்த ஊடகவியலார் திருக்கோயில் வளாகத்தில் இருந்து பொய் செய்திகளை உலவ விடுகின்றனர். சிலர் பக்தர்கள் என்ற போர்வையில் உண்மையான பக்தர்களுக்குள் புகுந்து அவர்களுக்கு பல சௌகரியங்களை ஏற்படுத்தி ‘இனி இங்கு வரவே கூடாது’ என்ற முடிவுக்கு வரும்படி செய்ய முனைகின்றனர். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தினைச் சேர்ந்த ஆர். கிரண் பாபு என்பவரே இந்த மார்க்சீயப் பத்திரிகையாளர்களின் தலைவர் ஆவார். இவர்கள் அனைவரும் சேர்ந்து இந்துத்துவத்தை எதிர்த்து சமூக வலை தளங்களில் பதிவுகளை ஏற்றுகின்றனர். பத்திரிகைகளில் செய்தி வெளியிடுகின்றனர்.

இந்த செய்தி வெளியான போது போலிஸ் பம்பை – சபரிமலை வழி தடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கோயில் தந்திரியிடம் விசாரனை நடத்தி வருகிறது. ஐயப்ப சரண கோஷம் சொல்வதாக இருந்தாலும் போலிசாரின் உத்தரவுப்படியே நடக்க வேண்டும் என்று கோயில் தந்திரியை போலிசார் காட்டாயப் படுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here