2019 தேர்தலுக்கான பாதையில் பி. ஜே. பியின் முயற்சிகள்

ஊழல் எதிர்ப்பு, இந்துத்துவம், அரசு நிர்வாக மேம்பாடு ஆகிய முக்கூட்டு முயற்சி 2019 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை வழங்கும்

ஊழல் எதிர்ப்பு, இந்துத்துவம், அரசு நிர்வாக மேம்பாடு ஆகிய முக்கூட்டு முயற்சி 2019 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை வழங்கும்
ஊழல் எதிர்ப்பு, இந்துத்துவம், அரசு நிர்வாக மேம்பாடு ஆகிய முக்கூட்டு முயற்சி 2019 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை வழங்கும்
சு ரு க் க ம்
 

  • ஊழலை எதிர்க்கும் உறுதிப்பாடும்  நீதியும் தழைக்க வேண்டும்
  • இந்துக்களின் தொகை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்
  • நமது பொருளாதாரம் எதிர்கால  நோக்கங்களுக்குடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

 

ஊழலை எதிர்க்கவும் இந்துத்துவத்தில் உறுதி கொள்ளவும் தீவிரமான முயற்சி எடுத்து மக்களின் நம்பிக்கையைப் பெற இதுவே நல்ல தருணம் ஆகும்.

நல்ல நிர்வாகமும் மேம்பாடும் மட்டுமே தேர்தல் வெற்றிக்கு போதாது.

ஊழல் எதிர்ப்பு, இந்துத்துவம், நிர்வாக மேம்பாடு ஆகிய முக்கூட்டு முயற்சி 2019 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற வழி வகுக்கும்.

நாட்டின் மேம்பாடு ஒன்றையே தனது  நோக்கமாகக் கொண்டு  அரசு  கடந்து வந்த பாதையில் அதன் செயல்பாடு சிறப்பானதாகவே இருந்தாலும்  அது தேர்தலில் கவிழ்த்துவிடும்.

1991-96 களில் பி. வி. நரசிம்ம ராவ் காலம் தொட்டு [அவர் பல மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர்], 1999 – 2004 வரை ஆட்சி செய்த அடல் பிஹாரி வாஜ்பேயி  [அவர் காலத்தில் இந்தியா நிரந்தரமான பொருளாதார வளர்ச்சியை சந்தித்தது], ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோதும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, கர்நாடகாவில் எஸ். எம் கிருஷ்ணா ஆகிபேர் முதலமைச்சர்ளாக இருந்த காலத்திலும் அவர்கள் நல்லாட்சி தந்தாலும் தேர்தலில் தோற்று போயினர். ஆக நல்லாட்சி மட்டுமே தேர்தலில் வெற்றியை தந்து விடாது.

டாக்டர் சு. சுவாமியிடம் இருந்து வந்திருக்கும் மற்றொரு தகவலாவது இந்த பி. ஜே. பி. அரசில் ப சிதமபரம் போன்றவர்களை  ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்ற பலர் உதவுகின்றனர்.

அது போல முந்தைய ஆட்சியில் நடந்த பல ஊழல் வழக்குகளை மூடி மறைத்து விடும் முயற்சிகளும் நடக்கின்றன. அமைச்சகத்தின் அதிகாரிகள் இந்த ஊழல் விஷயங்களை மூடி மறைத்து விட உதவுகின்றனர்.

பிஜேபி/ முந்தைய காங்கிரஸ் கூட்டணி/ அரசியல்வாதிகள்/ அதிகாரிகள்/ வக்கீல்கள் என அனைவரும் கை கோர்த்து வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பாதுகாக்கின்றனர்.  இதனால் பிஜேபியின் ஊழல் எதிர்ப்பு பணிகள் சுணங்குகின்றன.

போன அரசில் புலனாய்வு அமைப்புகளிலும் அரசு இயந்திரங்களிலும்  துதிபாடிகளாக இருந்தவர்கள் இந்த அரசில் மூத்த அதிகாரிகளாக இருக்கின்றனர். இதனால் ஊழலுக்காக பழைய ஆட்கள் எவரும் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்று கூட்டுச் சேர்ந்து உணமைகளை மூடி மறைக்கின்றனர்.

புலனாய்வு பணிகள் தொய்வடைகின்றன, ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன, நேர்மையான அதிகாரிகளுக்கு தொல்லை கொடுக்கின்றனர், அவர்களை இடமாற்றம் செய்கின்றனர், வக்கீல்களை வாதாடவிடாமல் தடுக்கின்றனர், அல்லது பலவீனமான வாதங்களை முன்வைக்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.  இறுதியில் குற்றவாளிகள் நோகாமல் தப்பிவிடுகின்றனர். 2ஜி வழக்கில் இது தான் நடந்தது. நாம் ஊழலுக்கு எதிரானவர்கள் அதனால் ஊழலை எதிர்த்து நீதியை நிலைநாட்ட வேண்டும்

இந்துக்களுக்கான ஆதரவு சமூகத்தில் அதிகரிக்க வேண்டும். அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவது இன்னும் கோடிக்கணக்கான் இந்துக்களுக்குக் கனவாவே இருக்கிறது. அரசு இதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்த வழக்குக்கான தீர்ப்பை விரைவாக பெறுவதில் எந்த ஒரு தனிநபருக்கும் பெயர் வந்துவிடக் கூடாது அதனால்  அவரது செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்று பிஜேபி கட்சிக்குள்ளேயே பலர் இந்த வழக்கை தாமதப்படுத்துகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவான PDP கட்சியினாலும் பொது சிவில் சட்டம் இல்லாததாலும் சட்டப் பிரிவு 370 இன்னும் நீக்கப்படாததினாலும்   ஜம்முவில் வாழும்  இந்துக்கள் பிஜேபியில் இருந்து அந்நியப்பட்டுப் போகின்றனர்.

பொருளாதாரப் போக்கு திருப்திகரமாக தெரிகிறது; ஆனால் உண்மையில் கதை வேறுவிதமாக நடந்துகொண்டு இருக்கிறது. நிறைய விஷயங்களில் திருத்தம் தேவைப்படுகிறது.

வெளிநாட்டு வங்கிகளில் இருந்து பணத்தை மீட்டு எடுப்போம் என்று சொன்னது சரி. பண மதிப்பு நீக்கம் நல்ல முயற்சியாக இருந்தாலும் சரியான முன் தயாரிப்பின்றி அதை நடைமுறைப்படுத்தியதால் அதன் பெருமை தெரியாமலேயே போய்விட்டது. ஜி எஸ் டி வரி விதிப்பு தவறான முறையில் தொடங்கப்பட்டதால் அடிக்கடி அதில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் வங்கிகள் வாராக்கடன்களால்  தடுமாறுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு ஆகியன மக்களைத் துயரக்கடலுள் ஆழ்த்தியுள்ளன.  மோடி சர்க்காரிடம் இருந்து நாம் இதை எதிர்பார்க்கவில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here