முதல் பாகம்Part 1 , இரண்டாம் பாகம் Part 2 மற்றும் மூன்றாம் பாகங்களை Part 3 இங்கு நீங்கள் வாசிக்கலாம். இது நான்காம் பாகம்.
அயோத்தி மாநகரின் வரலாறு மிக நீண்டது என்பதை யாரும் மறுக்க இயலாது. இந்திய அரசியல் உரிமைச் சட்டத்தின் மூன்றாம் பாகத்தில் அடிப்படை உரிமைகள் என்ற பகுதியில் வங்காளி ஓவியர் நந்தலால் போஸ் வரைந்த ஓர் ஓவியம் இடம் பெற்றுள்ளது. அந்த ஓவியத்தில் இராமபிரான் தன் மனைவி சீதாபிராட்டி மற்றும் இளவல் இலக்குமணனுடன் அயோத்தி மாநகருக்கு திரும்பும் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் அயோத்தி மாநகரின் சிறப்பை இன்றும் நமக்குப் பறை சாற்றுகிறது.
நான் 2016இல் இந்தியாவுக்கு வந்து பேராசிரியர் லோகேஷ் சந்திரா அவர்களைச் சந்தித்து ‘இராமரின் அடிச்சுவட்டில் என்ற பெயரில் ஒரு ஆவணப் படத்தை அவரிடம் காண்பித்தேன்.இந்த சிந்தனை தோன்றுவதற்குக் காரணமாக இருந்த சுப்பிரமணியன் சுவாமி அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். பேராசிரியர் சந்திரா இக்ஷவாகு அரசுக்கும் இராமருக்கும் இருக்கும் தொடர்பு பற்றி ஓர் ஆய்வு கட்டுரையை என்னிடம் வ்ழங்கினார். இக்க்ஷவாகு வம்சத்தைச் சேர்ந்த அயோத்தியின் இளவரசி ஒருத்தியை கொரியா நாட்டின் இளவரசன் சுரோவாங்க் மணந்து கொண்டு தன் நாட்டுக்கு அழைத்து சென்றான். இந்தியாவுக்கும் புத்த சமயத்துக்கும் இடையிலான ஏராளமான தொடர்புகளில் இந்த திருமணத் தொடர்பும் ஒன்றாகும். பேரா. சந்திரா அற்புதமான மனிதர். அவரிடம் இந்தியாவின் வரலாறு, மரபு, பண்பாடு பற்றிய ஏராளமான விஷயங்கள் உண்டு. அவர் தினமும் தன் வீட்டு வில்வமரத்தின் பழங்களை உண்பார். அதனால் இன்றும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். அவருடைய வயது 91 என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். வில்வ மரம் என்பது சிவபெருமானின் மூவிலைச்சூலம் போன்றும் சிவனின் முக்கண் போன்றும் இலைகளைக் கொண்டது. சிவனும் பார்வதியும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர் என்ற ஒப்பற்ற உயர் தத்துவத்தை விளக்கும் வகையில் முக்கூட்டு இலைகளைக் கொண்டதாக வில்வம் விளங்குகிறது. வில்வ இலை சிவ பூஜைகளில் பயன்படுகிறது. இந்த வில்வத்துக்கு நிறைய மருத்துவப் பண்புகளும் உண்டு.
சரி. நாம் இப்போது மீண்டும் அயோத்திக்கு வருவோம். இந்நகர் கோசலப் பேரரசின் தலை நகர் ஆகும். ரவி நைமிஷ் என்பவர் [அவருடைய பூர்வீகம் பற்றி தெரியவில்லை] எங்களின் வழிகாட்டியாக இருந்தார். அம்பாவதி நகரில் [தற்காலத்தில் அது உஜ்ஜயின் நகர்] இருந்து விக்கிரமாதித்த மன்னன் அயோத்தியை தேடி புறப்பட்டான். சரயு நதிக்கரையில் புனித தீர்த்தங்களின் அரசனான பிரயாகாவை சந்தித்தான். பிரயாகா தனது பாவங்களை கழுவ சரயு நதிக்கு வந்திருந்தான். அப்போது அவன் விக்கிரமாதித்தனிடம் ‘’மாட்டுச் சாணத்தை பார்த்துக்கொண்டே போ அது உனக்கு அயோத்தி மாநகரில் சுற்று எல்லையைக் காட்டும்.’’,என்றான். அது போல விக்கிரமாதித்தன் சுற்று எல்லையை குறித்துக் கொண்டே வரும் வேளையில் ஒரு இடத்தில் பசுவின் மடியில் இருந்து தானாக பால் சுரந்ததைக் கண்டு அந்த இடமே ராமர் பிறந்த இடம் என்பதை உணர்ந்து கொண்டான்.

கொரியர்கள் வந்து தங்கவும் அவர்கள் அயோத்தியைச் சுற்றி பார்க்கவும் அயோத்திக்கும் தமக்குமான தொடர்பை புரிந்துகொள்ளவும் ஒரு அருங்காட்சியகம் அமைக்கவும் இடம் ஒதுக்கப்பட்டதாகவும் ஆனால் அங்கு ஒரு வேலையும் இது வரை நடைபெறவில்லை என்றும் ரவி என்னிடம் தெரிவித்தார். அயோத்தி மாநகரம் இன்று தன் சோபை இழந்து தூசி படிந்து உள்ளது. மிகப்பழைய நகரமாகவே காட்சி அளீக்கிறது. அங்கு இன்னும் அடி பம்புகளில் அடித்து தான் மக்கள் தண்ணீர் பிடிக்கிறார்கள். தலைக்கு மேல் கேபிள் வயர்கள் போகின்றன. நாங்கள் அங்கு போயிருந்த போது சாலையில் ஒரு மரம் வெட்டப்பட்டு கிடந்தது. சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பொருட்களில் தூசு படர்ந்திருந்தது.
அயோத்தியில் இன்னும் ராம பஜனைகளும் பூஜை புனஸ்காரங்களும் சடங்கு சம்பிரதாயங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. தெருக்கள்தோறும் கோயில்கள் ஏராளமாக உள்ளன. அயோத்தியா நகரம் எங்கும் மீன் இலச்சினைகள் காணப்படுகின்றன. மீன் என்பது விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தை குறிக்கின்றது. இந்தியா விடுதலை அடைந்த பிறகு இங்கு ஏதாவது மாற்றங்கள் வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யப்படவில்லை. பக்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், வெளிநாட்டினர் ஆகியோர் இந்நகருக்கு வந்தால் இங்கு தங்குவதற்கு நல்ல விடுதி கூட கிடையாது. அயோத்தி நகரின் இன்றைய நிலை எனக்கு மிகுந்த குழப்பத்தைத் தருகிறது. ஏன் இப்படி இந்த ஊரை வைத்திருக்கிறார்கள்? இதன் பெருமையை இவர்கள் யாரும் உணரவில்லையா? அயோத்தி நகர் வாழ் மக்கள் அடித்தள மக்களாக இருக்கின்றனரே என்பதை அரசியல்வாதிகள் ஏன் உணரவில்லை. அயோத்தி நவீன நகரமாக இருக்க வேண்டும். டில்லி சென்னை போன்ற மாநகரங்களில் இருப்பவர்களுக்கு கிடைப்பது போன்ற அதிவேக இன்டேர்னெட் வசதி இங்கும் கிடைக்க வேண்டும்; சாலை வசதிகள் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். உள்கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட வேண்டும். சுற்றுசுப்புற சுகாதாரம் மேம்பாடு அடைய வேண்டும். பழங்காலத்திய கட்டிடங்களை புனரமைத்து பராமரித்து பாதுகாக்க வேண்டும்; அவ்வாறு செய்தால் பக்தர்கள் யாத்ரீகர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதும் அதிகரிக்கும். இந்நகரை இந்தியாவின் ஆன்மீகச் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்; அறிவிக்கவும் வேண்டும்.
இராமர் காலத்தில் தலைநகராக செழிப்புற்றிருந்த அயோத்தி மாநகரை போல இந்த 21ஆம் நூற்றாண்டு அயோத்தியும் இருந்தால் மக்கள் நல்ல உடல்நலத்துடம் இருப்பார்கள் அனைவருக்கும் நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பாதித்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். [கொடுப்பார் இல்லை கொள்வார் இன்மையால் என்று கம்பன் வருணித்ததைப் போல தன்னிறைவு பெற்ற நகரமாகத் திகழும் அன்றோ] .இந்நகரை சுற்றுப்புற சூழல் அழகு அமைந்த நகரமாக உருவாக்கி இங்கு அழகிய தோரண வாயில்கள், மதில் சுவர் கோட்டை கொத்தளங்கள், நகர் திட்டமிடல் அகன்ற வீதிகள், பொது பூங்காக்கள், யோகா, சமஸ்கிருதம், ஜோதிடம் வானவியல் போன்றவை படிக்க பெரிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கினால் இந்து கல்வியின் இருப்பிடமாக திகழ்வது உறுதி. [பௌத்த மதத்துக்கு ஒரு நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது போல, இந்துக்களுக்கு ஒரு உலகப் பல்கலைக்கழகம் அயோத்தியில் அமைக்கப்பட வேண்டும்]

டில்லியில் இருந்து அயோத்திக்கு ஒரு விரைவு ரயில் விடப்பட வேண்டும். இந்நகரில் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இங்கு நல்ல திரையரங்குகளும் நாடக அரங்குகளும் அருங்காட்சியகமும் இருக்க வேண்டும். அப்போது தான் இந்து சமயம் பற்றிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவதற்கு வசதியாக இருக்கும். இராமாயணத்தில் சொல்லியிருப்பது போல 36 மைல் நீளமும் 9 மைல் அகலமும் உள்ள அயோத்தி நகரை நாம் திரும்பவும் மீட்டெடுக்க வேண்டும். ஆன்மீக விஷயங்கள் நிரம்பியதாக அயோத்தியை உருவாக்க வேண்டுமே தவிர பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஒரு நகரமாக நவீனப்படுத்தி விடக்கூடாது.
இராமரும் சீதையும் இலக்ஷ்மணனும் மேற்கொண்ட நீண்ட பயணத்தை இந்தியக் கலை வடிவங்களும் படைப்புகளும் மிகுந்த மரியாதையுடன் விளக்குகின்றன. இராமர் தர்மத்துக்காக நடத்திய வாழ்க்கை போராட்டம் அவருக்கு நீண்ட செல்வாக்கை பெற்றுத்தந்துள்ளது. நாங்கள் அக்டோபர் மாதத்தில் அயோத்திக்கு வந்து அந்நகரை பார்த்தபோது இங்கு பெரியளவில் பக்தி நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும் மக்கள் அனைவரும் இராமர் மீது நீங்காத பற்று வைத்திருப்பது தெள்ளத் தெளிவாயிற்று.
அயோத்தியை மீட்டெடுப்பது ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை என்பது புலனாகிறது. ஏனென்றால் போன வருடம் மார்ச் மாதம் பி ஜே பி யின் மகேஷ் ஷர்மா 150 கோடியில் இங்கு ஓர் இராம இராவண அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார். இந்த அருங்காட்சியகம் அயோத்தி நகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படும். போன வருடம் ஜூலை மாதம் சுரேஷ் பாபு இராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு ஷ்ரத்தா சேது என்ற பெயரில் தனி ரயில் விடப்படும் என்றார். [அந்த ரயில் ஓட தொடங்கிவிட்டது அல்லவா?]போன வாரம் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி நடக்கும் தீபத் திருவிழாவுக்கு தென் கொரியாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாக இண்டியன் ஐடியாஸ் காங்கிலேவில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார். நவம்பர் ஆறாம் தேதி அன்று இராணி சூரி ரத்னா நினைவகத்துக்கு தென் கொரியாவின் முதல் பெண்மணி அதிபரின் மனைவி கிம் ஜுங்க் சூக் அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி இளவரசி மீது தென் கொரியாவில் உள்ளவர்கள் மிகுந்த பற்றுள்ளவர்களாக இருப்பதால் நிறைய பேர் இந்த விழாவுக்கு வருகை தர இருக்கின்றனர்.
நான் ஸ்ரீலங்காவுக்கு போய் வந்ததும் இந்த கட்டுரை தொடரின் ஐந்தாம் பாகத்தை எழுதுவேன். அதுவரை காத்திருங்கள்…