வரி ஏய்ப்பு, பத்திரிகைச் சுதந்திரம், அல்லது பி எம் சி ஃபின்கார்ப் – ராகவ் பால் நீங்கள் எதையோ மறைக்கப் பார்க்கிறீர்கள்

ராகவ் பால் பி எம் சி ஃபின் கார்ப் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கும் பின்பு திடீரென வெளியேறியதற்கும் காரணத்தை தெரிவிக்க வேண்டும்

0
1886
ராகவ் பால் பி எம் சி ஃபின் கார்ப் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கும் பின்பு திடீரென வெளியேறியதற்கும் காரணத்தை தெரிவிக்க வேண்டும்
ராகவ் பால் பி எம் சி ஃபின் கார்ப் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கும் பின்பு திடீரென வெளியேறியதற்கும் காரணத்தை தெரிவிக்க வேண்டும்

ராகவ் பால் தோற்றுப் போகும் விஷயத்தையே திரும்ப திரும்பச் செய்கிறார். பிரணாய் ராய், அருண் ஷோரி மற்றும் ஃபாலி நாரிமன் ஆகியோருடன் பிரஸ் கிளப் ஆஃப் இன்டியாவில் மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது என்று திரும்ப திரும்ப பேசி வருகிறார். ராகவ் பாலும் பிரணாய் ராயை பின்பற்றி அதே தவறை செய்கிறார். ஆனால் நடந்தது என்ன?

பத்திரிகையாளரான ராகவ்பால் கார்ப்பரேட் உலகிற்கு ஆதரவானவர்

நெட் ஒர்க் 18 இல் சேரும் வரை ராகவ்பாலும் பிரணாய் ராயை போல ஒரு சாதாரண பத்திரிகையாளர் மட்டுமே. நெட் ஒர்க் 18, என்ற நிறுவனம் சி என் பி சி இன்டியா, சி என் என் – ஐ பி என், சி என் பி சி அவாஸ், மணி கன்ட்ரோல் டாட் காம், ஃபர்ஸ்ட் போஸ்ட் டாட் காம்  [CNBC India, CNN-IBN, CNBC Awaaz, websites Moneycontrol.com, FirstPost.com] மற்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை என பல செய்தி ஊடகங்களைக் கொண்டுள்ளது. முன்பு ராகவ் பால் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலமாகி இருந்தார்.  பங்கு சந்தை மற்றும் பங்குகளின் மதிப்பு  குறித்து அவருக்கு ஆழமான அறிவு இருந்ததால் அவரது நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பு பெற்றன. ரிலையனஸ் நிறுவனம் 2014ஆம் ஆண்டு மே மாதம் நெட் ஒர்க் 18 நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியதால் ராகவ் பாலும் அவரது மனைவியும் வெளியேற்றப்பட்டனர்.

ராகவ் பால் வீட்டில் வருமான வரி சோதனை ஏன்?

ராகவ் பாலும் அவரது மனைவி ரிது கபூரும் கணக்கு காட்டாமல் 180 கோடி ரூபாய் வைத்திருந்ததாகவும்  அதனால் அவர் வீடு மற்றும் அவரது கிவின்டில்லியன் குழுமத்தின் அலுவலகத்துக்கு வருமான வரி துறையினர் வந்து சோதனை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. நீண்ட கால முதலீட்டு இலாபம்  [Long Term Capital Gains (LTCG)] என்ற அடிப்படையில் இவர்கள் ஊழல் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.  அவர்களின் பணப் பரிவர்த்தனைகள் பற்றி நீண்ட தகவல்கள் ஏராளமாக வந்தாலும் ஒரு சில முக்கியமான தகவல்கள் உள் நோக்கத்துடன் விடுபட்டிருந்தன.

பி எம் சி ஃபின் கார்ப் பங்கு மதிப்பின் உயர்வும் சரிவும்

கான்பூரில் இருந்த பி எம் சி ஃபின் கார்ப் நிறுவனம் முதலில் பிரித்தி மெர்கன்டைல் கம்பெனி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 2013 மார்ச் முதல் 2014 மார்ச் வரை பங்குச் சந்தையில் இதன் மதிப்பு 1122% உயர்ந்து அதி உச்சத்தை தொட்டது. முன்பு இருந்ததை விட பங்குகளி மதிப்பு12 மடங்கு உயர்ந்தன. ஏன் இப்படி உயர்ந்தது ? இதனால் பங்குச் சந்தையின்  மதிப்பு படு பாதாளத்தில் வீழ்ந்தது. பிரிதி மெர்கன்டைல் கம்பெனியின் 2012 -13 நிதி ஆண்டுக்கான ஆண்டறிக்கை இந்நிறுவனம் நிதி சார்ந்த முதலீடுகள்,  சேவை மற்றும் பங்கு வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தது.

பி எம் சி ஃபின்கார்ப் நிறுவனத்துக்கும் ராகவ் பாலுக்கும் என்ன தொடர்பு

1988இல்  இந்த பி எம் சியிடம் ஒரு வர்த்தகப் பொருளோ பங்கோ கிடையாது. ஆனால் 2013இல் இதன் பங்கு மதிப்பு2013 மார்ச் முதல் 2014 மார்ச் வரை 1122% உயர்ந்து விட்டது. [படம் பார்த்து தெளிவு பெறுக]

Figure 1. 12X rise in PMC Fincorp stock - graphics courtesy MOneyLife
Figure 1. 12X rise in PMC Fincorp stock

கீழே உள்ள இரண்டாம் படம் 2011 -2015 ஆம் ஆண்டுகளுக்குரிய பங்கு வரலாற்றை தெளிவாகக் காண்பிக்கிறது. பங்குகளின் மதிப்பு குறையாமலேயே இருந்திருக்கிறது என்பதை கவனித்து பாருங்கள்.  இதனை [உயர்த்தி  விட்டு திணித்தல்] Pump and Dump.என்று ஆங்கிலத்தில் அழைப்பதுண்டு.  இந்த அட்டவணை பங்கின் மதிப்பு ரூ 800ஐ தொட்டதைக் காட்டவில்லை. அந்தக் கால்கட்டத்தில்  பங்கின் மதிப்பு  10:1 என்று பிரிக்கப்படும்.

2012ஆம் ஆண்டு செப்டமபர் மாதம் ராகவ் பாலும் அவரது மனைவி ரிது கபூரும் இந்த நிறுவனத்தில் ஆளுக்கு 4.93% பங்குகளை வைத்திருந்தனர். அப்போது ஒரு பங்கின் விலை ஏறத்தாழ 15 ரூபாய். நன்றாக நினைவில் கொள்ளுங்கள் வாஸ்கர்களே! ராகவ் பால் ஒன்றும் பங்கு சந்தை பற்றி அறியாத அம்மாஞ்சி அல்ல; சும்மா பேருக்கு ஒரு பங்கை வாங்கிவைப்பதற்கு; இவர் இத்துறையில் அனுபவமுள்ள பலரோடு விவாதித்து ஆலோசித்து இந்த பங்குகளின் வருங்கால நிலை குறித்து ஊகித்துணர்ந்து இவற்றை வாங்கி இருந்தார். இவ்வாறு பங்குகளை குறைத்த விலைக்கு வாங்கி பின் அதீத உச்சத்துக்கு கொண்டுபோகும் வித்தை தெரிந்தவர் இவர். இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடும் சந்தேகத்துக்குரிய சிலரை அண்மைக் காலமாக ‘செபி’கண்டுபிடித்து  அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது. வருமான வரி துறையும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

Figure 2. PMC Fincorp Stock performance
Figure 2. PMC Fincorp Stock performance

2014ஆம் ஆண்டு பங்கு விவரங்களை காணும் போது ராகவ் பால் 1.6% பங்குகளையும் அவரது மனைவி 2.4% பங்குகளையும் விற்றிருப்பது தெரிகிறது [படம் 4]. இந்த பங்குகள் அப்போது 10:1 என்ற கணக்கில் பிரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் படத்தில் காணலாம்.

Figure 3. PMC Shareholding pattern Sep 2012
Figure 3. PMC Shareholding pattern Sep 2012

2015 செப்டம்பரிம் பால் மொத்தத்தையும் விற்றுவிட்டார்
Figure 4. PMC shareholding in Sep 2014
Figure 4. PMC shareholding in Sep 2014

2015 ஆம் ஆண்டின் பங்கு சந்தை விவரத்தை நாம் ஆராய்ந்தால் அப்போது ராகவ் பால் மற்றும் அவர் மனைவிக்கு பங்குகளே இல்லை என்பது தெரிய வரும் . அதற்குள் அவர்கள் இருவரும் மொத்தப் பங்குகளையும் விற்றுவிட்டனர்.
Figure 5. PMC shareholding in Sep 2015
Figure 5. PMC shareholding in Sep 2015

அறிக்கை படம்

விடை தெரியாத வினாக்கள்

  1. திரு பால் அவர்களே உங்களுடைய இந்த நீண்ட அறிக்கையில் உங்களது பி எம் சி ஃபின் கார்ப் நிறுவனத்தில் உங்களுக்கு பங்குகளே இல்லை என்பது தெரிய வரும். நீங்கள் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறும் முன்பே 660000 >< 830 என்ற கணக்கில் சுமார் ரூ. 54.8 கோடி வருமானம் சேர்த்துவிட்டீர்கள் உங்கள் மனைவியும் அப்படித்தான் சேர்த்திருக்கிறார். இது பற்றிதான் வருமானவரி துறை அறிய விரும்புகிறது. சோதனை செய்கிறது. உங்கள் பணம் சட்டத்துக்கு புறம்பான முறைகளில் பரிவத்தனை செய்யப்பட்டுள்ளதா என்பது புலனாய்வுக்கு உள்ளாகி அப்போது அமலாக்கத் துறையினர் கறுப்புப்பணத் தடைச் சட்டத்தின் கீழ் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா?
  2. பி எம் சி ஃபின்கார்ப் நிறுவனத்தாருடன் சேர்ந்து பங்கு சந்தை விவரங்கள் குறித்து அறிந்திருக்கும் மற்றவர்களும் இதற்கான பதிலை தெரிந்து வைத்திருப்பார்கள். ஏன் உங்கள் நிறுவனத்தின் பங்கு  மதிப்பு திடீரென் உச்ச நிலைக்கு உயர்த்தப்பட்டது? என்பது பங்கு சந்தையில் முறைகேடுகளை நடத்துவோருக்கு நன்றாக தெரிந்திருக்கும். இனி இது வருமானவரி துறையினருக்கும் தெரிய வரும். அப்போது உங்கள் நிலை என்னவாகும்?  நீங்கள் செய்திருக்கும் வருமான வரி ஊழல் அப்போது ஊருக்கே அம்பலமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here