இராமன் என்னுமோர் மர்யதா புருஷோத்தமன்  – பாகம் 1

இராமர் சீதையின் இனிய இல்லறம்

இராமர் சீதையின் இனிய இல்லறம்
இராமர் சீதையின் இனிய இல்லறம்

வேத வியாசங்களின் படி ஒரு ஆணும் பெண்ணும் மேற்கொள்ள வேண்டிய இல்லற வாழ்க்கை முறைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராமபிரானும் சீதா பிராட்டியும் ஆவர்.

அயோத்தி மண்ணில் நான் முதல் முறையாகக்கால் வைத்த போது நான் தசரத மகாராஜாவின் ராஜ சபைக்கு நாட்டு மக்கள் நடந்து சென்ற பாதைகளில் நடக்கிறேன் என்ற எண்ணம் எனக்குள் பரவசம் ஊட்டியது.  என் மனக்கண்ணில் இராமாயணத்தின் தொடக்கத்தில் இராமச்சந்திர மூர்த்தியும் இலக்ஷ்மணனும் விளையாடிய திடல் இங்கே அருகில்தான் இருக்கும்; அவர்கள் வாழ்ந்த இந்நகர் அழகாக வடிவமைக்கப்பட்டது. மராமரங்களின் நிழல் நிறைந்த இவ்வூரில் வீடுகளும் அரண்மனைகளும் அம்மரங்களாலேயே கட்டப்பட்டிருந்தன.

அயோத்தி மாநகரம் இராமாயணத்தில் வருணித்தபடி கோதுமை வயல்களும் நவரத்தின சுரங்கங்களும் மிகுந்த அழகான வலிமை மிகுந்த தலைநகராக அதிக காலம் இருக்கவில்லை. இந்தியாவின் முக்கிய நகரமாக இருந்திருக்க வேண்டிய அயோத்தி இன்று அப்படி இல்லை. முன்னேற்றங்களும் மேம்பாடுகளும் அயோத்தி நகரை விட்டுக் கடந்து போய்விட்டன.

இன்னும் அயோத்தியில் ஓர் அழகான சுற்றுச்சுழல் நிலவுகிறது. இராமனுக்கும் கணேசனுக்கும் அனுமனுக்கும் ஆங்காங்கே அழகான கோயில்கள் உள்ளன. இங்கு இந்து மதம் பின்பற்றப்படுகிறது. மத சம்பிரதாயங்கள் உயிர்ப்புடன் செயல்படுகின்றன. இருந்தாலும் அதன் பழம்பெருமையை இந்நகர் இன்னும் அடையவில்லையே என்ற ஆதங்கம் நம்முள் தோன்றுகிறது. இராம ஜென்ம பூமியான ராம்கோட்டை போய் பார்க்க ஆசைப்பட்டேன். மனித கடவுளான இராமருக்கு விரைவில் அங்கு நல்லதோரு கோயில் எழுப்பப்படும்.  இராமர் கோயில் கட்டுவதற்காக கொண்டு வந்து ஊரோரத்தில்குவிக்கப்பட்டுள்ள கற்கள் ஒரு நாள் கோயில் மதில்களாக சுவர்களாக உருமாறி திருக்கோயிலை எழுப்பும்.

2016ஆம் ஆண்டில் அயோத்தியில் மந்திர ஒலிகளும் கோயில் மணி ஓசையும் நகரை நிறைத்திருந்தது. ஆனாலும் யாத்ரீகர்களுக்கு அசௌகரியம் குறைவாக இருந்தது. விஷ்ணுவின் அவதாரமான இராமனை தரிசிக்க ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு கூண்டுக்குளேயே நடந்து செல்ல வேண்டும். அங்கு போய் ஒரு கூடாரத்துக்குள் இருக்கும் விக்கிரகத்தை தரிசித்து வணங்கி விடை பெற வேண்டும். ஒரு பக்தருக்கு இது தினமும் ஓட்டமும் நடையுமான அனுபவம் ஆகும். மானுட வடிவில் வந்த தெய்வத்தை வணங்க தினமும்ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். கூடாரத்துக்குள் போகும் கூட்டம் வரிசையாகவும் பக்தி உணர்வோடும் போகின்றது. ஆனால் இக்கூட்டத்தை  காவலர்கள் விரைவுபடுத்தும்போது பக்தி உணர்வு விலகி விடுகிறது. விரைவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. அங்கிருக்கும் குரங்குகள் நமக்கு குறைந்த பட்சம் அனுமனை நினைவூட்டி நமக்கு  பக்தி பூர்வமான உணர்வை ஏற்படுத்துகின்றன. சிலர் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கூட வருகிறார்கள். சில வெகு தொலைவில் இருந்து வந்து  வணங்கி செல்கின்றனர்.

நான் இந்தியாவுக்கு கடந்த 35 ஆண்டுகளாக வந்து செல்கிறேன். எனக்கு இந்து மதம் பற்றி அதிகமாகத் தெரியாது. வேறு மதங்கள் குறித்தும் தெரியாது. இங்கிருக்கும் இந்தியப் பாரம்பரியங்களை ரசிக்கிறேன். இந்தியரின் மனங்கள்  என்னை வெகுவாகக்  கவர்ந்துள்ளன.  நான் போகும் பாதையில் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அவை என்னையறியாமல் நடந்திருக்கும்.  அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இராமனை நான் புரிந்துகொண்ட விதம்

சில ஆண்டுகளாக இந்து மதத் தெய்வங்கள்  குறித்து படித்து வருகிறேன். மதம், கடவுள், ஆன்மீக சக்தி பற்றி அறிய இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. இராமரிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.  ஒரு வேளை அழியப் போகும் மனிதனின் குற்றம் குறைகளை நான் இராமரிடம் காணாததாக இருக்கலாம்.. இராமர் விளைவுகளை பற்றி நன்கு தெரிந்திருந்தவர் என்பதால் அதற்கேற்ப செயல்பட்டார் என்ற எனது நம்பிக்கையால் அவர் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகியிருக்கலாம் அல்லது கிருஷ்ணன் ராதையின் காதலை போல இராமர் சீதையின் காதல் வாழ்வும் எனக்கு இனித்திருக்கலாம். 2013இன் தொடக்கத்தில் இராமர் கோயிலோடு நம்மை இணைத்து பார்ப்பது பிரச்சனைக்குரியதாக இருந்திருக்கலாம் ஆனால் நான் இராமர் பற்றி அதற்கு பிறகுதான் நிறைய தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

இராமயணம் பற்ற் பெரியவர்களுக்கான நூல்கள் நிறைய இருந்தாலும் நான் விரும்பியது சிறுவர்களுக்கான நூல்களைத் தான். சூரிய சந்திரரை விட பிரகாசமாக தோன்றும் இராமர் இந்திய மக்களை இராவணன் மற்றும்சாவை விடக்  கொடிய விதியிடமிருந்து  காக்க அவதரித்தார். இந்த மனிதக் கடவுள் அவரது  நேர்மையான தம்பி, ஞானமுள்ள மனைவி ஆகியோர் தர்மத்தின் வழியில் வாழ்ந்த வாழ்க்கை பற்றி நான் நினைத்து கொண்டே இருந்தேன். நல்ல மரியாதையான செயல்களைச் செய்ய அவர்கள் காட்டிய தூமையையும் கட்டுப்பாட்டையும் எண்ணி வியந்தேன். இந்த இருபண்புகளும் கடந்த காலத்தில் காணப்பட்டாலும்  இன்றைக்கும் பொருந்தக் கூடியதாகவும் ஏற்புடையதாகவும் உள்ளன.. இத கருத்தியல் குறித்து எனது மேலை நாட்டு நண்பர்களுடன் விவாதித்தேன். ஆனால் அவர்களுக்கு இந்த கருத்தியல் பிடிபடவில்லை. ஆனால் என் இந்திய நண்பர்களுடன் விவாதிக்கும் போது என் கருத்துக்களோடு அவர்க்ள் இணைந்து வருவது புரிந்தது.

பக்தி, அறம்,, மதிப்பு, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான முரண், உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான முரண்பாடு, மனிதரின் சொல் புரட்டுகளை புரிந்துகொள்ளுதல், துணிவும் தலைமைத்துவப் பண்பும் ஒரு தத்துவத்தை உருவாக்குகின்றன. இத்துடன் அழியாத காதலும் சேரும் போது ஒரு நித்யகாதல் காவியம் ஆகிறது.  இந்தக் கதையில் எனக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டுள்ளது.  மற்ற காதல் கதைகள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக முடிவதில்லை. பல சோகமாக முடிவடைகின்றன. ஆனால் அதனால் அவற்றை காதல் கதைகள் என்று சொல்லிவிட இயலாது.

2013இல் ஒரு ஆவணப்படத்தில் நான் இராமனின் பயணத்தை மறுபடியும் அடியொற்றி போய் பார்க்க முயன்றேன்.. இந்தப்படம் இராமன் தன்னை மீட்க வருவான் என்று சீதை அவன் மீது கொண்டிருந்த  நம்பிக்கையை காட்டியது.  இத் குறித்து நான் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். இன்னும் இந்த கோட்பாட்டில் ஒட்டும் உறவும் உள்ளவளாக இருக்கிறேன். இராமர் கதைக்கான கருத்துவிளக்கத்தை ஒரு வெள்ளைக்காரப் பெண் சொல்லும் போது அதை யாரும் கேட்க தயாராக இல்லை.  என் மீதான சந்தேகம் நீங்கி ஒரு நாள் என்னை நம்பி என் கருத்துக்கு செவி கொடுப்பர் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

இராமன்  நிறைவானவன்; குற்றம் ஒன்றும் இல்லாத மனிதன் என்று நான் கருதி வந்த வேளையில் சிலர் சீதையை புறக்கணித்ததற்காக இராமனை வெறுப்பதை கண்டேன்.  ஆனால் நான் புரிந்துகொண்ட படி இராமனும் சீதையும் வேத விதிகளின் படி பார்த்தால் மிகச் சரியான உதாரண மனிதர்கள் ஆவர். இருவரும் பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து பின்னர் பிரிந்த பின்பு  மீண்டும் ஒன்றிணைவோம் என்ற நம்பிக்கை இருவரிடமும் இருந்தது. அவர்களுக்கு இடையிலான காதல் மிகவும் பக்குவப்பட்டதாகும். காட்டில் இராமனும் சீதையும் மகிழ்ச்சியாக இருந்த போதும் துன்பப்பட்ட போதும் அதனைத் தொடர்ந்து சீதை ராவணனிடம் சிறைப்பட்டு அவதிப்பட்டு கிடந்து பின்னர் இராமனால் மீட்கப்பட்ட போதும் அவர்கள் இருவருக்கு இடையிலும் ஆத்மார்த்தமான புரிதல் இருந்தது. அவர்கள் ஈருடல் ஓருயிராக விளங்கினர்.  கடைசியாக சீதையும் இராமரும் பிரிந்த போது அவர்களுக்குள் அது தாங்க முடியாத வேதனையாக இருந்திருக்கும்.  சீதையின் மீது இராமனுக்கிருந்த அளவற்ற காதலை விட மக்களைக் காக்க அவன் தர்மத்தின் வழியே செல்ல வேண்டிய கடமை இருந்ததால் இராமன் அந்த வழியைத் தெரிவு செய்தான்.. இராமன் அரசனாக தன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைக்கு முன்னுரிமை கொடுத்தான். அவன் ஒரு தந்தைக்கு ம்கனாக தன் கடமையைச் செய்து முடித்தான், சீதை இராமனின் மக்கள் காக்கும் பணியில் அவனுக்கு ஒத்துழைத்தாள். தன் சுகத்தை பொருட்படுத்தாமல் இரமனுக்கு மக்கள் நலப்பணியில் உதவினாள்.  இதனை சாதாரண மனிதர்களால் செய்ய இயலாது ஆனால் சீதை இதனை செய்வதற்கு இராமன் மீதிருந்த அளவற்ற காதல் தான் காரணம் ஆயிற்று  மனித நேயம் காப்பதில் மிகச் சிறந்த ஜோடி இராமனும் சீதையும் ஆவர்.

கிருஷ்ணரை பிரிந்து ராதையும் வருந்தினாள். ஒரு நற்செயலுக்காக ஏற்படும் பிரிவும் அப்பிரிவினால் ஏற்படும் துயரும் அவனுக்காகக்  காத்திருக்கும் பொறுமையும் சிறந்த குணவதிகளுக்கு தவிர்க்க இயலாததாகும்.  நீங்கள் ஒரு கடவுளை நேசிக்கும்போது அவரை மனித குலத்தின் மேன்மைக்காக மன்னிக்கவும் வேண்டும். அன்பு உங்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தினாலும் அதுவே உங்களுக்கு கிடைத்த பரிசாகும். மேலும் இராமர் துர்வாச முனிவரால தசரதனுக்கு தரப்பட்ட வாக்கை நிறைவேற்ற தானே காட்டுக்கு வந்தார்.  பிருகுவின் மனைவியை விஷ்ணு கொன்றதால் மனித பிறப்பெடுத்து தன் காதல் மனைவியை பிரிந்து பிருகுவை போல பிரிவுத் துயரில் மூழ்க வேண்டும் என்பது விஷ்ணுவுக்கு இடப்பட்ட  சாபம்.  தசரதனுக்கு சூரியனே மகனாக வந்து அவதரிப்பார் என்ற வரமும் கிடைத்தது. இதுவும் விஷ்ணுவின் சாபமும் இணைந்து இராமவதாரம் நிகழ்ந்தது.  இராமர் தன் வாழ்நாள் முழுக்க நல்லவராக இருந்து மனிதகுல மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். சீதையை அவர் தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இழந்து தவித்து அவளது தங்கச் சிலையை தன் நெஞ்சில் தாங்கி வாழ்ந்திருக்கலாம். சீதை பூமித்தாயின் மடிக்குள் புகுந்த போது இராமனால் துன்பத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தன் தவறுக்கு பிராயச்சித்தமாக ஆயிரக்கணக்கான சடங்கு சம்பிரதாயங்களை செய்கிறார்.  கர்ம விதிகளின் படி வாழ்ந்த அவர்கள் சுவர்க்கத்தில் மீண்டும் இணைந்து நித்ய ஆனந்தத்தை அடையலாம்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here