அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று உரை நிகழ்த்திய போது அமெரிக்க தேர்தலின் போது ருஷ்யா நடத்திய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டைப் போல சீனாவும் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
தன்னுடைய செல்வாக்கை பெருக்க சுய இலாபத்துக்காக அமெரிக்காவின் அரசியல், பொருளாதார இராணுவ விஷ்யங்களை சீனா தவறாகப் பயன்படுத்தி வருகிறது என துணை அதிபர் மைக் பென்ஸ் குற்றம் சாட்டினார்.
அமெரிக்கப் பலக்லைக்கழகங்களில் படிக்கும் தன் நாட்டு மாணவர்களை கூட சீனா வேவு பார்க்கிறது. சிலருக்கு கல்விக்கான உதவித்தொகையை வழங்குகிறது. சிலருக்கு அவர்கள் என்ன செய்கிரார்கள் என்ன ஆய்வுக்கட்டுரை எழுதுகிறார்கள் என்பதை கவனித்து அவர்களுக்கு மறுத்து விடுகிறது.
சீனாவின் கொள்கைகள் பற்றி அமெரிக்காவுக்கு இருக்கும் அபிப்பிராயத்தை மாற்ற சீனா சில பிரச்சாரக் குழுக்களை வைத்து முறைகேடாக செயல்பட்டு வருகிறது. ருஷ்யாவும் இதே வேலையை செய்து அதன் சாயம் வெளுத்துப் போன இவ்வேளையில் இப்போது சீனா அந்த வேலையில் இறங்கி உள்ளது. ருஷ்யா முன்பு நாடு முழுக்க முயன்று பாடுபட்டு கணீனி ரகசியங்களைத் திருட முனைந்ததை சுட்டி காட்டி பேசினார் பென்ஸ்.
- அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டும் சீனாவின் செயல்களைப் பட்டியல் இட்டார் பென்ஸ்
- தென் சீன கடலில் அமெரிக்க கப்பல்களுக்கு சில அடி தொலைவில் சீனா தனது கப்பல்களை கொண்டு செல்கிறது
- அமெரிக்காவில் நடைபெறும் தொழில்களின் அறிவுசார் உரிமையைத் திருடி பிழைக்கிறது
- தைவான் நாட்டை அது தனி ஒரு நாடாக மதித்ததில்லை. இப்போது இலத்தீன் அமெரிக்காவையும் அவ்வாறு மதிக்காமல் தன் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர முயல்கிறது
- கிறிஸ்தவர்கள் பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்களை தண்டிக்கிறது
சீன அரசுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து மதிப்பீடு வழங்கி விமர்சனம் செய்வோரை அந்நாட்டுக்கு எதிராக செயல்படுவோராக கருதி தண்டிக்கிறது.
இவற்றை போல இன்னும் பல் குற்றங்களை சீனா தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகச் செய்து வருகிறது
சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் அனைத்து பொருளுக்கும் அபராதம் விதிக்க டிரம்ப் முடிவு
சீனா தொடர்ந்து அமெரிக்காவின் வர்த்தக்த்துக்கு குந்தகம் விளைவித்து வருகிறது,. இந்நிலை இனியும் தொடர்ந்தால் அமெரிக்கா கடுமையாக பதிலடி கொடுக்க தயங்காது. அமெரிக்காவில் இருந்து சீனாவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கடுமையான வரி விதிப்புக்கு சமமாக இனி அமெரிக்காவும் சீனாவில் இருந்து இங்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும். இதுவரை 250 பில்லியன் மதிப்புள்ள சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் இவ்வாறு வரி விதிக்கப்பட்டுள்ளது.என்று டிவிட்டரில் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். டிரம்ப்
…..China has been taking advantage of the United States on Trade for many years. They also know that I am the one that knows how to stop it. There will be great and fast economic retaliation against China if our farmers, ranchers and/or industrial workers are targeted!
— Donald J. Trump (@realDonaldTrump) September 18, 2018
ஃபர்கோவுக்கு செல்லும் வழியில் சீனாவுடனான வர்த்தக உறவு விரைவில் ஒரு முடிவை எட்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், இதை சொல்ல எனக்கு விருப்பமில்லை இருந்தாலும் சொல்கிறேன்; இன்னும் 267 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதித்தாக வேண்டும். அப்போது நிலைமை [சம்ன்பாடு] மாறிவிடும்
அமெரிக்க வலைத்தள சேவை வழங்கிகளில் புகுந்த சீனாவின் சின்ன சிப்
அமெரிக்காவில் உள்ள உயர் நிறுவனங்களில் தகவல்களை திருட சீனா ஒரு சிறிய சிப்பை பயன்படுத்தியது குறித்து ப்லூம்பெர்க் பிசினஸ் வீக் என்னும் வணிக இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அது பற்றி நாம் சுருக்கமாக காண்போம்
இது 2015இல் தொடங்கியது. மிகப் பெரிய காணொளி கோப்புகளை குறுக்கி ஐ ஃபோன் ஐ பேட் ஆன்டிராய்டு மடி கணினி போன்றவற்றில் சேய்த்து வைக்க ஏதுவாக ஒரு மென்கலத்தை [சாஃப்ட்வேர்] எலிமென்ட்டல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்திருந்தது. இந்த நிறுவனத்தோடு இணைய அமேசான் முயன்றது. எலிமென்ட்டல் நிறுவனமும் சி ஐ ஏ நிறுவனத்துக்கு உரிய தகவல்களை அளித்து அமெசானின் வலை சேவையோடு [AWS (Amazon Web Services)] இணைய முடிவு செய்துவிட்டது.
இந்நிலையில் அமேசான் வலை சேவை இன்னொரு நிறுவனத்தை அதாவது மூன்றாம் நபரை அழைத்து எலிமென்ட்டல் நிறுவனம் அளிக்கும் மென் கலத்தின் பாதுகாப்பு அமைப்புகளை சோதிக்கும்படி கேட்டுக்கொண்டது. அந்த நிறுவனம் இந்த மென் கலத்தில் இருக்கும் சில சிக்கல்களை எடுத்துரைத்தது.
எலிமென்ட்டல் நிறுவனத்தின் மென்கலம், சேன் ஜோஸ் நிறுவனத்தை சார்ந்த சூப்பர்மைக்ரொ கம்ப்யூட்டர் இங்க் என்ற பெயரில் வைத்திருக்கும் சேவை வழங்கி [செர்வெர்] மூல்மாக வலைத்தளச் சேவையை பெற்றுச் செயல்பட்டது. சேவை வழங்கியின் தாய்ப் ப்லகைகளில் ஒரு சின்ன சிப் பொதிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிப் அரிசி அளவில் தான் இருந்தது. இது முதலில் உருவான தாய்ப்பலகையின் வடிவமைப்பில் இடம் பெறவில்லை. ஆனால். சீனாவின் சூப்பர் மைக்ரோ நிறுவனத்தின் துணை ஒப்பந்தக்காரர்கள் தாய்ப்பலகை தயாரிப்பின் போது இதனை தாமாக உள்ளே ஒளித்து வைத்துள்ளனர்.
இந்த சிப் இந்த சேவை வழ்ங்கி மூல்மாக வலைத்தளச் சேவையை பெறும் அனைத்துக கணினிகளிலும் இருந்து தகவல்களை திருட உதவியுள்ளது. இவ்வளவு சிறியதாக ஒன்றை தயாரித்து வன் கலத்தில் [ஹார்ட்வேர்] புகுத்தி தகவல்களை சீனா திருடியது மிகப்பெரிய தொழில் நுட்பத் திருட்டாகும். இதனால் அமெரிக்கா சீனா மீது கொலைவெறியுடன் இருக்கிறது. சிப்பை நுழைத்து வைத்து திருடுவது சீனாவுக்கு புதியதல்ல. சீனாவில் சிப் தயாரிக்கும் பலர் கணினிக்குள் சிப்களை ஒளித்து வைத்து தகவல்களை திருடி பெறுவது சகஜம். இந்த சிப்களை சாதாரணமானவர்களால் கண்டுபிடிக்கவும் இயலாது. VHDL அல்லது Verilog போன்ற உயர் தொழில் நுட்பம் தெரிந்தவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
முடிவுரை
இதை இனி என்ன செய்வது? இப்போது சீனா அமெரிக்காவிடம் கையும் களவுமாக பிடிபட்டுவிட்டது. ஆனால் அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் வர இருக்கும் தேர்தலில் வெற்றிக்கனி டெமாக்ரட் கட்சிக்கு போய்விடுமோ என்று அஞ்சி கிறுக்கு பிடித்து போயிருக்கிறார். இந்நிலையில் இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக யுத்தம் லேசில் முடிவடையாது. காத்திருப்போம் காட்சிகள் மாறும்.