ஸ்டாலின் அவர்களுக்கு டாக்டர். இரா. நாகசாமியின் பதில்

ஸ்டாலின் அவர்களுக்கு டாக்டர். இரா. நாகசாமியின் பதில்

0
2648
ஸ்டாலின் அவர்களுக்கு டாக்டர். இரா. நாகசாமியின் பதில்
ஸ்டாலின் அவர்களுக்கு டாக்டர். இரா. நாகசாமியின் பதில்

அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு என்னை செம்மொழி நிறுவனத்தின் விருது வழங்க தகுந்தோரை தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒரு அங்கத்தினராக சேர்த்துள்ளதை கண்டித்து நான் “தமிழ் விரோதி” என்றும் வள்ளுவர் தமது திருக்குறளை வேதக்கருத்துக்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் என்று கூறியதால் அவரை அவமதித்து விட்டேன் என்றும், ஆதலின் என்னை விருது பெறுவோரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு எழுதியுள்ளார்.

நான் தி.மு.க முன்னாள் தலைவர் டாக்டர். கலைஞர் அவர்கள் 1967ம் ஆண்டு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல், அவர் காலமான நாள் வரை, அவரது அன்புக்கு பாத்திரமாயிருந்தவன் என்றும், அவரால் பல விழாக்களில் பாராட்டும் பெற்றவன் என்பதையும் குறிக்க விரும்புகிறேன்.

கலைஞர் அவர்கள் என்னை தமிழில் கவிதை எழுத சொல்லி, அவற்றை பூம்புகார் கலைக்கூடத்திலும் , பாஞ்சாலங்ககுறிச்சியில் கட்டபொம்மன் நினைவுச்சின்னத்திலும் கல்லிலே பொறித்து வைத்துள்ளார்கள். கோவை செம்மொழி மாநாட்டில் என்னை கண்காட்சி குழுவின் உபதலைவராக நியமித்திருந்தார் என்பதையும், 2011ல் தஞ்சை பெருங்கோயிலில் நடைப்பெற்ற விழாவில் என்னைக் கவுரவித்துள்ளார் என்பதையும் குறிக்க விரும்புகிறேன். மேலும் தஞ்சையில் கண்காட்சியில் நடராஜர் சிலையை நான் விளக்கியதை ஸ்டாலின் ஸ்டாலின் தாமும் என்னைப் பாராட்டியதையும் நினைவு கூற விரும்புகிறேன். கடந்த 60 அண்டு காலத்தில் தொடர்ந்து தமிழ் இல்லகியத்துக்கும், கலை கட்கும், இயல் இசை நாடகமாகிய முத்தமிழுக்கும், புரிந்துள்ள பணியை உலகே அறியும்.

15 நாட்களுக்கு முன்னர் இஸ்லாமிய நாடான வங்காள தேசத்துக்கு ஒரு அனைத்துலக கருத்தரங்குக்கு சென்றிருந்தேன் அக்கருத்தரங்கை கூட்டிய புகழ் வாய்ந்த பேராசிரியர் “எனாமுல் ஹக்கு”, நான் வரலாற்றுக்குச்செய்துள்ள தொண்டை பாராட்டி அக் கருத்தரங்கை எனக்கு தமிழ் காணிக்கையாக்குவதாக அக்கருதரங்கிலேயே குறிப்பிட்டார். பத்து நாட்களுக்குமுன்னர் லண்டன் மாநகரிலிருந்து யுனஸ்கோவில் பணி புரிபவர் என்னை சந்தித்து அவர் எனது மாணவர் என்றும் எனது நூல்களை லண்டன் பல்கலைகழகத்தில் படித்தவர் என்றும் கூறினார். தமிழ் நாட்டுக்கு நடராஜர் சிலை வழக்கில் லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ். அயான் கென்னடி , என்னை, தமிழ் கலைத்துறையிலே, ஈடு இணையற்ற அறிஞர் என்று தனது தீர்ப்பில் கூறியிள்ளார், லண்டன் மேல் முறையீட்டு நீதிமன்றம் எனது தமிழக வரலாற்றுக்கும் கலைக்கும் ஆற்றிய தொண்டை போற்றியுள்ளது. ஆதலின் ஸ்டாலின் என்மீது சாற்றிய கடுஞ்சொல் தமிழ் அறிந்த உலகமே கண்டிக்கும் என்பதில் அய்யமில்லை.

திருவள்ளுவர் குறித்து நான் குறித்துள்ள கருத்து எனது கருத்தல்ல, பரிமேலழகர் தொடங்கி, நூற்றாண்டாக ஆய்ந்த பெரும் பேராசிரியர்கள் அனைவரும் கூறிய கருத்துதான்.17ம் நூற்றாண்டில் “பெஸ்ச்சி”, 18ம் நூற்றாண்டில் எல்லிஸ், 19ம் நூற்றாண்டில், டாக்டர்.உ. வே; சாமிநாதய்யர் என மாமேதையின் அத்துணை பெரும் வள்ளுவர் வேதமரபின்படி தமது குறளை எழுதியுள்ளார் எனக் குறித்துள்ளனர். ஸ்டாலின் திருக்குறள் பற்றிய தமிழ் ஆய்வின் வரலாற்றை அறிந்திலர் என்பது வியப்பாக இருக்கிறது குறிப்பாக ஜி.யூ.போப், தமது 1886ல் வெளியிடட்ட “திருவள்ளுவ நாயனார்”என்னும் நூலில் இந்து சமயத்தையும், சங்கரரின் சீர்திருத்தங்களையும், சமணர் கோட்பாடுகளையும், பகவத்கீதையின் கருத்துக்களையுமே வள்ளுவர் எழுதியுள்ளார் என்று உணர்கிறேன் என்றும், குறிப்பாக பகவத்கீதையின் அடிச்சுவட்டிலேயே திருக்குறளை யாத்துள்ளார் என்றும் பலவிடங்களிளும் கூறியுள்ளார். மேலும் சாந்தோகிய உபநிடத கருத்துக்களையும் மனுவின் தர்மசத்திரத்தை சுமார் 100க்கும் மேற்ப்பட்ட இடங்களில் மேற்கோள்களாக எழுதியுள்ளார். ஆதலின் ஸ்டாலின், திருக்குறளை நான் சிறுமைப்படுத்தியுள்ளேன் என்று கூறுவது அவரது தமிழ் அறியாமையே வெளிப்படுத்தி விட்டது. இந்த பழிச் சொல்லில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதி, தமது அறிக்கையை திரும்பப் பெற்றுக் கொள்வதே சாலச் சிறந்தாகும் எனத் தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here