தூத்துக்குடி ஸ்டர்லைட் வன்முறையில் விடுதலை புலிகளின் தலையீடு: சு. சுவாமி

தூத்துக்குடி ஸ்டர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல்

தூத்துக்குடி ஸ்டர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல்
தூத்துக்குடி ஸ்டர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல்

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள்: சுவாமி

ENGLISH VERSION

தூத்துக்குடியில் வன்முறைக்கு காரணமானவர்கள் வெளியாட்கள் என்று மாநில அரசு தெரிவித்தாலும் சுப்பிரமணியன் சுவாமியை போல தெளிவாக அவர்கள் விடுதலைப்புலிகள் என்பதை சுட்டிக்காட்டவில்லை. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ஸ்டர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் பங்கு முக்கியமானது என்றார். இந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு ஒரு பெண் மற்றும் சிறுமி உட்பட பதிமூன்று பேர் கொல்லப்பட்டது தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

எனக்கு கிடைத்த தகவலின்படி போலீசார் மத்தியிலும்  விடுதலை புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைக்  கூர்ந்து கவனித்து வரும் சுவாமி., என்னிடம் ஜல்லிக்கட்டு போராட்டத்த்தின் போது நடந்தது போலவே இப்போது நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் இருந்துள்ளது. அவர்களே வன்முறையை தூண்டியவர்கள். இதுவே பின்னர் போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே பெரும் பிரச்சனையை தோற்றுவித்துள்ளது. என்றார்.

மாநில அரசு சுப்பிரமணியன் சுவாமியை போலக் விடுதலை புலிகள் எனக் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் வெளியாட்கள் ஊடுருவல் இருந்ததாக தெரிவித்துள்ளளது. போலிசாருக்கு ஆதரவாக பேசிய மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய குற்றவியல் சட்டபிரிவு 144இன் கீழ் தூத்துக்குடியில் வன்முறையை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆனால் எதிர்க்கட்சியினரும் சில சமூக விரோத சக்திகளும் அப்பாவி மக்களைத்  தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து கெட்ட பெயரை ஏற்படுத்த முயன்றன என்றார்.

இந்த வன்முறைகளுக்குப் பின்புலமாக இருந்த அரசியல் குறித்து சுப்பிரமணியன் சுவாமி சில கேள்விகளை எழுப்புகிறார்.  தொண்ணூற்றி ஒன்பது நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் நூறாவது நாளன்று திடீரென வன்முறை கலவரமாக மாற்றப்பட்டது எப்படி?

ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடுவதாக திட்டமிட்டிருந்த போராட்டக்காரர்கள் ஏன் அங்கு நிற்கவில்லை? 144 பிரிவு மீறலுக்காக  போலீசார் முதலிலேயே ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை? கூட்டம் வன்முறையில் இறங்கியதும் போலீசார் போராட்டக்காரர்களைக் குறி பார்த்து சுட்டனர். இதற்கு முன்பு தண்ணீரைப் பீய்ச்சி போலீசார் ஏன் கூட்டத்தைக் கலைக்கவில்லை? துப்பாக்கி சூட்டின் போது போலீசார் ஏன் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தவில்லை?

எனக்கு கிடைத்த தகவலின்படி போலீசார் மத்தியிலும்  விடுதலை புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டேர்லைட் நிறுவனம் 1990களின் மத்தியில்  தொடங்கப்பட்டது முதல் அதன் முக்கிய தருணங்களில் காங்கிரஸ் ஆட்சியே மத்தியில் நடந்துள்ளது. அவ்வாறு இருக்க இப்போது தூத்துக்குடியில் நடந்த வன்முறைக்கு மட்டும் காங்கிரசார் பிரதமர் மோடியை குற்றம் சாட்டுவதை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாகச் சாடினார்

2013இல் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வாயு கசிவு ஏற்பட்டபோது உச்ச நீதிமன்றம் நுறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தேவையான அனுமதிகள் கிடைக்காத நிலையில் அந்த நிறுவனம் அங்கு தொடர்ந்து தொழில்சாலையை நடத்துவதற்கு சிரமப்பட்டது. அதே வருடம் தமிழ்நாட்டின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நச்சுத் தன்மை மிகுந்த கந்தக அமிலக் கசிவைக் காரணம் காட்டி தொழில் சாலையை தொடர்ந்து நடத்த அனுமதி தர மறுத்துவிட்டது.

ஆக மோடியை காங்கிரசார் குற்றம் சாட்டாமல் தூத்துக்குடியில் உண்மையில் நடந்தது என்ன என்பதை கண்டறியும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here