பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளால் தொடர்ந்து இந்தியாவில் தாக்குதல்கள நடந்து வந்த போதும் சிலருடைய தனிப்பட்ட இலாபத்துக்காக இதுவரை அந்நாட்டுக்கு அளித்துவந்த மிகு விருப்பத் தகுதிநிலை விலக்கப்படாமல் இருந்தது.
1995க்கு பிறகு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் நடந்த தாக்குதல், கந்தகாரில் நடந்த கடத்தல், பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதல், கார்கில் யுத்தம், என நூற்றுக்கும் அதிகமான சமபவங்கள் இந்தியாவில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய அமைப்புகளால் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டுக்கு ஏன் மிகு விருப்பத் தகுதி நிலையை வழங்கி அவர்களுக்கு ஆதரவாகவும் இலாபமாகவும் நம் வர்த்தக நடைமுறைகளை வைத்துக்கொள்ள வேண்டும். அந்நாட்டுக்கு இலாபம் ஈட்டி தர வேண்டிய அவசியம் நமக்கு என்ன வந்தது? ஆண்டுதோறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பில்லியன் டாலர் கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது.
பி ஜே பி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு 2௦19 ஜனவரி முதல் நாள் எழுதிய பதில் கடிதத்தில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான சி ஆர். சவுத்ரி, கடந்த 21 ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தானுக்கு மிகு விருப்பத் தகுதி நிலையை வர்த்தகத்தில் வழங்கி அந்நாடு அதிக இலாபம் பெரும் வகையில் சலுகை காட்டியதை மிகக் கேவலமான நிலை என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவைப் பல முறை பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் தாக்கி சேதம் விளைவித்த பிறகும் அவர்களின் இலாபத்துக்கு நாம் வழி வகுத்து கொடுத்தது தரங்கெட்ட செயல்’என்று குறி;ப்பிட்டுள்ளார். .
‘’இன்னும் ஒரு பெரிய உண்மை என்னவென்றால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என்று பாகிஸ்தான் 12௦9 பொருட்களை தடைப்பட்டியலில் வைத்துள்ளது. 138 பொருட்களை மட்டும் வாகா / அடாரி நில எல்லை வழியாக இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது. 1995-96 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பொருட்களுக்கான இத் தடையை விதித்திருந்த போதும் கூட இந்தியா எவ்விதத் தடையும் விதிக்காமல் பரந்து பட்டநிலையில் பாகிஸ்தானுடன் வர்த்தக உறவு கொண்டிருந்தது. அந்நாட்டுக்கு ஏராளமாக சலுகை அளித்தும் வந்தது. 1995-96 ஆண்டு முதல் இருநாடுகளுக்கும் இடையே இரு வழி வர்த்தகம் நடை பெற்று வந்தது. 2017 – 18 ஆண்டில் மட்டும் பாகிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து 1.9 பில்லியன் டாலருக்கு [பதினான்காயிரம் கோடிக்கும் அதிகமாக] ஏற்றுமதி செய்தது. அதே சமயம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆனவை வெறும் 3,5௦௦ கோடி ரூபாய் மதிப்பிலானவை மட்டுமே [488] மில்லியன் டாலர்].
பாகிஸ்தான் ஏற்கெனவே இங்கிருந்து இறக்குமதி செய்த பல பொருட்களை இனி இறக்குமதி செய்வதில்லை என முடிவெடுத்துள்ள நிலையில் இந்தியா தனது மிகு விருப்பத்தகுதி நிலையை விலக்கிக் கொண்டால் பாகிஸ்தானுடன் பெரியளவில் வர்த்தகம் செய்துவரும் இந்தியாவே இதனால் அத மிக மோசமான பாதிப்பை அடையும் என்ற எண்ணத்தில் இதுவரை இந்த தடாலடி முடிவெடுக்காமல் இந்தியா தயக்கம் காட்டி வந்தது” என்று அமைச்சர் சுவாமிக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
2௦16 ஆம் ஆண்டு பதான்கோட் என்ற இடத்தில் நடந்த தாக்குதலை அடுத்து சுவாமி அனைத்து அரசு துறைகளுக்கும் கடிதம் எழுதி ஏன் பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் மிகு விருப்ப தகுதி நிலையை இந்தியா விலக்கி கொள்ளக் கூடாது என்று கேட்டிருந்தார். 2௦16 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகும் சிமென்ட் இறக்குமதியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு விளக்கமாகக் கடிதம் எழுதினார். பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் பாகிஸ்தானில் உள்ள சிமென்ட் தயாரிப்பு தொழிற்சாலைகளில் பலவற்றை ஐ எஸ் ஐ தீவரவாதிகள் நடத்தி வருகின்றனர் என்றும் இதனால் இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சிமென்ட் மூட்டைகள் மூலமாக பாகிஸ்தானில் இருந்து இநதியாவுக்கு பயங்கர ஆயதங்கள் எளிதாகக் கடத்தப்படுவதாகவும் சுட்டிக் காட்டி இருந்தார்.
பிரதமரின் அலுவலகம் வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டது. அப்போது அமைச்சராக இருந்தவர் நிர்மலா சீதாராமன். அந்த சமயம் வர்த்தகத் துறை சரியான விளக்கத்தைப் பிரதமருக்குத் தரவில்லை. இப்போது இந்த அமைச்சகத்தின் பொறுப்பை சுரேஷ் பிரபு ஏற்றிருக்கிறார். 2௦௦7 இல் காங்கிரஸ் ஆட்சியின் போது ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அவர் பாகிஸ்தானில் இறக்குமதி ஆகும் சிமென்ட்டுக்கு மிக அதிக அளவில் வரி சலுகை அளித்தார்.
நாம் வர்த்தக அமைச்சகம் இப்போது சுவாமிக்கு அளித்திருக்கும் பதில் கடிதத்தின் நகலை கீழே வெளியிட்டுள்ளோம். வாசகர்களே வாசித்துப் பாருங்கள். ஆண்டுதோறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 18,000 கோடி மதிப்பிலான வர்த்தகத் தொடர்புகள் நடைபெறுகின்றன. இந்நாட்டின் ஆதரவுடன் இங்கு தீவிரவாதிகள் பல தொடர் தாக்குதல்கள் நடத்தி பெரிய அளவில் சேதப்படுத்திய பிறகும் கூட இந்நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் பலர் சலுகை காட்டி வந்திருக்கின்றனர். கடந்த 21 ஆண்டுகளாக சிலருடைய சுய இலாபத்துக்காக வர்த்தக துறை அமைச்சகம் இந்த இரு நாடுகளின் வர்த்தக நடவடிக்கைள் மூலமாக பல நன்மைகளை அவர்களுக்கு மறைமுகமாகச் செய்துள்ளது. இதில் படுமோசமானது என்னவென்றால் மிகு விருப்பத் தகுதி நிலையை விலக்கிக் கொள்ளும் படி நீங்கள் எங்களை வற்புறுத்தாதீர்கள் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சரே சுவாமியிடம் கேட்டுக்கொண்டார். கடந்த இருபது ஆண்டுகளாக அரசியல் தலைவர்களுக்கு நிதி உதவி அளித்து வரும் . மும்பை சண்டிகார் – டில்லி வாழ் வணிகர்கள அனைவரும் பாகிஸ்தானுடன் பெரியளவில் வணிகத் தொடர்பு வைத்துள்ளனர். பாகிஸ்தான் பல வகையிலும் ஆதரவு கொடுத்து தீவிரவாதிகளை நம் நாட்டில் தாக்குதல் நடத்த அனுமதித்து வரும் வேளையில் இங்குள்ள கொழுத்த பணக்காரர்களும் அரசு அதிகாரிகளும் அமைச்சரும் அந்நாட்டுடன் வர்த்தக உறவு கொண்டிருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பணக்காரர்கள் இந்திய அரசியல் கட்சிகளிடம் செலுத்தி வரும் ஆதிக்கமே ஆகும்.
முடிவாக நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் நரேந்திர மோடி சவுக்கை சொடுக்கினார். பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இங்கு நடத்தி வரும் தொழில்களைக் கண்டு பிடிக்க முடிவெடுத்தார். தேசத்தின் நலனை விட தங்கள் சொந்த இலாபமே முக்கியம் என கருதும் தேசத் துரோகிகளை இனங்கண்டு கொண்டார். மிகு விருப்பத் தகுதி நிலையை விலக்கிக் கொண்டார். இனி பாகிஸ்தானுடனான வர்த்தகங்கள் தனி மனித இலாபம் சார்ந்தனவாக இருக்காது. தேசத்தின் நலனே பிரதானம் என்று பிரதமர் எடுத்திருக்கும் இந்த முடிவு பாராட்டத்தக்கதாகும்.
வர்த்தகத் துறை அமைச்சகம் சுவாமிக்கு எழுதிய கடிதத்தை படியுங்கள்: