வருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி

யங் இந்தியன் நிறுவனத்தின் இயக்குனராக இருந்ததை மறைத்ததற்காகவும் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் 154 கோடி ருபாய் வருமானத்தை மறைத்ததற்காகவும் சோனியா காந்தி மீது வருமான வரித்துறை வழக்கு

0
3528
சோனியா காந்தி மீது வருமான வரித்துறை வழக்கு
சோனியா காந்தி மீது வருமான வரித்துறை வழக்கு

இயக்குனர் பதவி மற்றும் 154 கோடி வருமானம் போன்றவற்றை மறைத்ததற்காக வருமான வரி துறை தொடுத்த வழக்கில் சோனியா காந்தி இப்போது சிக்கியுள்ளார். வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்கான பின்விளைவுகளை இனி அவர் சந்திக்க உள்ளார். உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான் அல்லவா!

வருமான வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து தப்பிக்க சோனியா காந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

மகன் ராகுல் காந்தியை போலவே சோனியா காந்தியும் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கிவிட்டார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் இயக்குனராக இருந்ததையும் வரி செலுத்த வேண்டிய 154 கோடி ருபாய் வருமானத்தை சோனியா காந்திமறைத்து விட்டதாலும் அந்த வருமானத்திற்கு வரி செலுத்தாத காரணத்தாலும்  அவர் மீது  இப்போது வருமானவரித்துறை குற்றம் சுமத்தியுள்ளது.. இதற்கு பதில் அளிக்க வேண்டி  சோனியா காந்தியின் வகயில் ப சிதம்பரம் செவ்வாய்க்கிழமையன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

சோனியா காந்திக்கு யங் இந்தியன் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ப.சிதம்பரம் சோனியா காந்திக்காக  உயர் நீதிமன்றத்தில் வாதாடிய போது2011 — 2012 ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கெடுப்பை மதிப்பீட்டை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வருமானவரித்துறை வருமான வரித்துறைக்கு சோனியா காந்தி ஒரு மனு அளித்திருந்தார் அந்த மனுவின் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது பா சிதம்பரம் சோனியா காந்திக்கு வாதாடினார்.2010 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அசோசியேட்டட் ஜர்ணல்ஸ் லிமிட்டட் என்ற செய்தித்தாள் நிறுவனத்தை யங் இந்தியன் எடுத்துக்கொண்டது. இந்த யங் இந்தியன் நிறுவனத்தின் இயக்குநர்களாக சோனியா காந்தியும் அவர் மகன் ராகுல் காந்தியும் பொறுப்பேற்றனர். இவர்கள் தவிர இன்னொரு இயக்குனராக மற்றொரு காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர்கள் மூவரும் யங் இந்தியன் நிறுவனத்தில் இருந்து வந்த வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்துவிட்டனர். அதற்குரிய வரியை செலுத்தவில்லை. சோனியா காந்தி தவிர மற்றொரு இயக்குனரான ஆஸ்கர் பெர்னாண்டசும் இவ்வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதைப் போலவே சோனியா காந்தியும் உயர்நீதிமன்றத்தில் வருமான வரி தொடர்பான விஷயங்களில் ஊடகம் தலையிடுவதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சோனியாகாந்தி சார்பாக ப. சிதம்பரம் தாக்கல் . ஆனால் நீதிமன்றம் இந்த கோரிக்கையை மறுத்துவிட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ். இரவீந்திர பட்  மற்றும் ஏ. கே. சாவ்லா வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் வருமான வரி கட்ட வேண்டிய வருமானம் என ஏதாவது இருந்தாலும் அத்தொகை யங் இந்தியனின் பங்குதாரர்களாக இருக்கும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கைகளுக்கு கிட்டாது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி  இந்த நிறுவனத்தில் 38 சதவீதப் பங்குகளை வைத்துள்ளார் அதைப்போலவே அவர் மகன் ராகுல் காந்தியும் 38 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கிறார் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மோதிலால் வோரா ஆளுக்கு 12 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றனர்.

அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிதம்பரத்தின் வாதங்களை கேட்ட பிறகு அரசு வழக்கறிஞருக்கு தாம் ஒரு நோட்டீஸ் அனுப்புவதாக தெரிவித்தனர். அப்போது அங்கிருந்த மத்திய அரசு வக்கீல் [Additional Solicitor General] துஷார் மேத்தா தான் நீதிமன்றத்தில் இருப்பதால் அப்படி ஒரு நோட்டீஸ் தனக்கு அனுப்பப்பட வேண்டிய அவசியமில்லை என்றார். பின்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது. அன்று வருமானவரித் துறை சார்பாக எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வழக்கறிஞர் வாதாடுவார் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்றத்தில் நடக்கும் வாதங்கள் முடிந்து தீர்ப்பு அளிக்கப்படும் வரை வருமான வரித்துறை மனுதாரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் படி அவர்களை கேட்டுக் கொள்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் சார்பாக அளிக்கப்பட்ட மனுக்களின் வேண்டுகோளை மறுத்து எவ்வித ஆணையும் பிறப்பிக்கவில்லை.

2011 – 12 ஆம் ஆண்டுகக்கான வருமான வரி மதிப்பீடு குறித்து மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வருமான வரி துறையினர் தெரிவித்ததற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகிய மூவர் சார்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி சார்பில்  வாதாடிய  மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தர் மனுக்களின் சொல்லப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் வேண்டினார். ஆனால் நீதிமன்றம் ‘’இது தேவை இல்லாதது. இது வேலையற்ற வேலை’’ என்று கூறி மறுத்து விட்டது. இத்தகவல்கள் யார் மூலமாக வந்தன, யார் புகார் கொடுத்தது போன்ற விவரங்கள் யாருக்கும் தெரியாது என்பதால் இவற்றை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று  கீட்டுக்கொல்வதும் அவற்றை செயல்படுத்துவதும், காட்டு வாத்தை விரட்டிச் செல்வது போல பயனற்ற வேலையாகும் என்று நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.
வருமான வரித்துறையின் வாதப்படி ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் வைத்திருக்கும் பங்குகளில் மூலமாக அவர்களுக்கு 154 கோடி மதிப்புடைய வருமானம் வந்திருக்க வேண்டும். இதனை எதிர்த்து ப.சிதம்பரம் வாதாடிய போது நீதிபதியிடம் அவர் தன்னுடைய வாதங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து வருமான வரி துறை செயல்பாட்டில் இறங்கியிருப்பதாக குற்றம் சுமத்தினார்.

ப சிதமபரம் தன வாதத்தின் போது கடனானது பங்குகளாக மாற்றப்பட்ட பிறகு அவற்றின் மூலம் எந்த வருமானமும் கிடைக்க வழி இல்லை என்ற நிலையில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருமானம் ஈட்டினர் எனக் குற்றம் சுமத்துவது பொருத்தமில்லாத கூற்றாகும் என்றார். மேலும் அதனை வருமானம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட 2011 –12 ஆம் ஆண்டின் வருமானமாகக் கருத இயலாது என்றும் வாதிட்டார்.

வருமான வரித் துறை 2011 –12  ஆண்டுக்கான வருமானத்தை மறு மதிப்பீடு செய்வதாகத் தெரிவித்து தவறாகக் கணக்கிட்டு சோனியா காந்தி மீது வரி பாக்கி குற்றச்சாட்டை சுமத்தியிருப்பதாக ப. சிதம்பரம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.ம  மேலும் தனது கட்சிக்காரர் சோனியா காந்திக்கு யங் இண்டியன நிறுவனத்தில் இருந்து எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்றும் அது அவரது சொத்து என்று கூட கணக்கில் கொள்ள முடியாது என்றும் தெரிவித்த ப. சிதமபரம் அந்த நிறுவனத்தில் சோனியாவுக்கு 1,900 பங்குகள் மட்டுமே உண்டு என்றார்.

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்திற்கு 90 கோடி கடன்வாங்கி நஷ்டப்பட்டதாகக் கூறப்படுவது போலியானது அல்லது வெறும் காகிதங்களை ஆதாரமாகக் கொண்டு காட்டப்படும் தவறான கருத்தாகும் என்றார்.  கடந்த ஒன்பது ஆண்டுகளாக 137 காசோலைகள் மூலமாக இந்த கடன் பெற்றதாக வருமானத்துறை வரித்துறை கருதுவதை ப. சிதம்பரம் மறுத்து வாதிட்டார்.

வருமான வரி மறு மதிப்பிட்டு செய்யப்பட வேண்டும் என்று வருமான வரி துறை தெரிவித்தது குறித்து மற்றொரு கருத்தையும் ப சிதம்பரம் நீதிமன்றத்தின் முன் வைத்தார். தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு வருமான வரித்துறையினரிடம் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்பதையும் குறிப்பிட்டு இந்த மறுமதிப்பீடு குறித்து அவர் ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.2014 ஆம் ஆண்டு முதல் இவ்வழக்கைக் கண்காணித்து வரும் ஒரு மூத்த அதிகாரி 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை சுப்ரமணிய சுவாமியின் சாட்சியமும் அவர் அளிக்கும் ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். சுப்ரமணிய சுவாமி டுவிட்டரில் இவ்வழக்கு குறித்து கருத்து பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என்று அமர்வு நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனுஜ் தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு சுப்ரமணிய ஸ்வாமி ‘’அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்’’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here