சோனியா, மன்மோகன் அகஸ்டா பேரத்தில் அம்பலப்படுத்திய இத்தாலிய நீதிமன்றத்தின் முழு தீர்ப்பு

மிலானிலுள்ள இத்தாலிய மேல் முறையீட்டு நீதிமன்றத்தின், அகஸ்டாவெஸ்ட்லாண்ட் லஞ்சலாவண்ய வழக்கில் உள்ள முழுதீர்ப்பு

0
1646

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]ந்தக் கட்டுரை, அகஸ்டாவெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்கும்போது நடத்திய லஞ்சலாவண்ய ஊழல் வழக்கைப்பற்றி இத்தாலிய நீதிமன்றம் கொடுத்த முழுதீர்ப்பைப் பட்டியலிடுகிறது.

அகஸ்டாவெஸ்ட்லாண்ட் சாப்பர் பேரத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கின் பங்கு பற்றி இத்தாலிய நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. இந்த 225 பக்க தீர்ப்பு, சோனியாவின் அரசியல் செயலாளர், 15 முதல் 16 மில்லியன் யூரோக்களை (17-18 மில்லியன் அமெரிக்க டாலர்கள்). இடைத் தரகர்களிடமிருந்து பெற்றார் என்று வெளிப்படுத்துகிறது. மிலானிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், தன் தீர்ப்பில், அகஸ்டாவெஸ்ட்லாண்ட் சாப்பர் கம்பெனித் தலைவர் கியூசிப்பி ஓர்சியைக் குற்றவாளியாக்கியது; இந்தக் கம்பெனி எவ்வாறு இந்தியாவிலுள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு லஞ்சம் அளித்தது மற்றும் கள்ளத் தொடர்பு கொண்டு 3600 கோடி ரூபாய் மதிப்புள்ள (451 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பேரத்தைக் கைப்பற்றியது என விவரிக்கிறது. இடைத்தரகர்களிடமிருந்து பறிக்கப்பட்ட கையால் எழுதிய குறிப்புக்களை ஆதாரம் காட்டி, சர்ச்சைக்குரிய 12 விமானங்கள் உள்ள VVIP  சாப்பர் பேரத்தில், அரசியல் தலைவர்கள் 15 முதல் 16 மில்லியன் யூரோக்கள் (120 முதல் 125 கோடி ரூபாய்) பெற்றதாகத் தீர்ப்பின் விவரம் சொல்கிறது. சோனியா காந்தியின் நம்பகமானவரும் AICC பொதுச் செயலாளருமான ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ், மற்றும் அப்போதைய பாதுகாப்பு ஆலோசகர் MK நாராயணன் இவ்விருவருடைய பங்குபணிகள் பற்றியும் குறிப்பிடுகிறது (பக் 193).

பிரிட்டிஷ் தூதுவர் குறிவைக்க வேண்டிய நபர்கள் திருமதி காந்தி மற்றும் அவருடைய நெருங்கிய ஆலோசகர்கள்.

மிலானிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தீர்ப்பு தன் 225 பக்கத் தீர்ப்பில் வெளிப்படுத்தியவை பல்வேறு ஆவண இணைப்புகள், இடைத்தரகர்களிடையே பரிமாற்றம் செய்யப்பட்ட கையெழுத்துக் குறிப்புகள்- மொத்த 30 மில்லியன் யூரோக்கள் இந்திய அரசியல் தலைவர்கள், அரசு அதிகார மையம் மற்றும் விமானப்படை அதிகாரிகளிடையே எவ்வாறு பிரித்தளிக்கப்பட வேண்டும் என்பன.

Payoff details of Euro 30 million for the AgustaWestland chopper deal

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]கஸ்டாவெஸ்ட்லாண்ட் சாப்பர் மொத்தத்தில் 30 மில்லியன் யூரோக்களை வழங்கிய விவரங்களில், சோனியா காந்தியின் பெயர் (சிக்னோரா காந்தி) 4 தடவைகள் ( பக் 193ல் 2 முறைகளும் பக் 204ல் 2 முறைகளும்) குறிப்பிடப்பட்டுள்ளன; அகஸ்டாவெஸ்ட்லாண்ட் VVIP  சாப்பர்கள் தயாரிப்பாளர் நிறுவனம் ஃபின்மெக்கானிக்காவின் (finmeccanica) தலைவர் ஓர்சி மற்றும் இதர அலுவர்களை, நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. ஓர்சி மற்றும் இதர அலுவலர்கள் நான்கறை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர்.

புலனாய்வாளர்கள், மார்ச் 15, 2008 குறித்த ஒரு கடிதத்தை இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலிடம் பறித்தனர். அப்போது கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவைப் பொறுத்தவரை ‘தலைமறைவு நபர்’. இந்தக் கடிதத்தை இவர் அப்போதைய ஹெலிகாப்டர் கம்பெனியின் பிராந்திய நிர்வாகி மற்றும் தொடர்பாளர் பீடர்  ஹ்யூலட்டிற்கு எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், இந்த பேரத்தின் பின்னால் உள்ள தலைமை இயக்க சக்தி, பின்னணி சக்தி, சோனியா என்றும், மற்றும் சோனியா தற்போதுள்ள MI-8  ரக சாப்பர்களில் பயணம் மேற்கொள்ள மாட்டார் என்றும் எழுதியிருந்தது. நீதிமன்றத் தீர்ப்பில் இந்தக் கடிதம் அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போதிருந்த பிரிட்டிஷ் நாட்டு இந்திய அலுவலக தூதர், இந்தப் பேரத்தை வெற்றியாக்க காங்கிரஸ் தலைமையை எவ்வாறு குறிவைக்கவேண்டும், காங்கிரஸ் தலைமையிடம் லஞ்சம் அளித்து எவ்வாறு ரகசியத் தொடர்பு கொள்வது போன்ற விவரங்களை மேற்படி கடிதம் குறித்திருந்தது.

சோனியா காந்தி, மன்மோகன் சிங், அகமது படேல் போன்ற பெயர்களைக் குறிப்பிட்டு, நீதிமன்றத் தீர்ப்பு, கடிதத்தின் சாராம்சத்தையும் தருகிறது. ‘‘அன்பார்ந்த பீடர் அவர்களே, திருமதி காந்தியே VVIP சாப்பர் பேரத்தின் பின்னணிச் சக்தி. திருமதி காந்தி தற்போதைய MI-8  சாப்பர் ஹெலிகாப்டரில் பறந்து செல்ல மாட்டார். பிரிட்டிஷ் அம்பாசிடர், திருமதி காந்தி மற்றும் அவரின் நெருங்கிய ஆலோசகர்களையே குறிவைக்க வேண்டும் (பேரம் முடிக்க).” மைக்கேலிடம் புலனாய்வாளர்களால் பறிக்கப்பட்ட இந்தக் கடிதம் இவ்வாறு சொல்கிறது.

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]ந்தக் கடிதம், 2013 ஆரம்பத்தில், கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கைடோ ஹஷ்கியிடம் பறிக்கப்பட்டது. அரசுத்தரப்பு வழக்கறைஞர் (ப்ராசிக்யூஷன்) எல்லா காங்கிரஸ் தலைர்களின் புகைப்படங்களையும், ஹஷ்கியிடம் காட்டிய போது, சோனியா காந்தி மற்றும் அகமது படேல் உட்பட ஹஷ்கி அனைவரையும் அடையாளம் காட்டியுள்ளார். இதையும் தீர்ப்பு கூறுகிறது. தீர்ப்பின் 9வது பக்கம் மைக்கேல் ஹஷ்கிக்கு எழுதிய குறிப்பையும் இணைத்திருந்தது. இக்குறிப்பில் (லஞ்சம்) கையூட்டான 30 மில்லியன் யூரோக்களை எவ்வாறு பகிர்வது என்று கூறியிருந்தது. இந்திய விமான அதிகாரிகள் 6 மில்லியன் யூரோக்களும், பாதுகாப்பு அமைச்சகம் அலுவலர்கள் உட்பட்ட மொத்த அதிகார அமைப்புக்கு 8.4 மில்லியன் யூரோக்களும் வழங்கப்பட வேண்டும் என்றிருந்தது. இந்தக் குறிப்பில், முதன்மை அரசு அதிகாரிகள் DG (கொள்முதல்) பாதுகாப்புச் செயலாளர் (DS) இணைச் செயலர் (JS)  இவர்களுக்கு எவ்வாறு லஞ்சப் பங்கு சேரவேண்டும் என்றும் இருந்தது. அதிக விவரங்களுக்கு கிழேயுள்ள ‘பைசார்ட்’ வரைபடம் காண்க.

டேபிள் 1: 30 மில்லியன் யூரோக்கள் எவ்விதம் பிரிக்கப்படவேண்டும்
52 விழுக்காடுகள் அரசியல் தலைமை 20 விழுக்காடுகள் விமானப்படை 28 விழுக்காடுகள் அதிகார அமைப்பு
15.6 மில்லியன் யூரோக்கள் 6 மில்லியன் யூரோக்கள் 8.4 மில்லியன் யூரோக்கள்

Payoff details of Euro 30 million for the AgustaWestland chopper deal
[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]வி[/dropcap]ளைவாக, அரசியல் தலைவர்கள் 15லிருந்து 16 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பு கூறுகிறது மற்றும் அரசியல் மட்டம் AP என்று குறிப்பிடப்படடுள்ளது. பணம் வழங்கப்பட்ட ஒரே அரசியல் தலைவரை AP  என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது அகமத் படேல் (Ahmed Patel) என்று பக் 204ல் உறுதி செய்யப்பட்டுள்ளது (மேல் படம் பார்க்க). ‘கமிஷனை’ ‘குடும்பத்துக்குப்’ பங்கிடவேண்டும் எனக் காணப்படுகிறது மற்றும் தீர்ப்பின்படி ‘குடும்பம்’ என்பது அப்போதைய விமானப் படைத் தளபதி ‘SP.தியாகியே’ (பக் 163,164).

‘மன்மோகன் சிங்’கைப் பெயரிட்டே அழைக்கிறது. மற்றும் ஓர்சி, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழையாமை மூலமாக இத்தாலியப் புலனாய்வை மூழ்கடிக்கச் செய்ய, இத்தாலிய அரசுத் தலைமையையும் தூதர்களையும் எவ்வாறு மன்மோகன் சிங்கை தொடர்புகொள்ளச் செய்தார் என்ற விவரமும் தீர்ப்பில்  உள்ளது. தீர்ப்பின் 163ம் பக்கத்தில் சொன்னது போல், ஜூலை 2013ல், சிறையில் இருந்தவாரே ஒரு கையெழுத்துக் குறிப்பைத் தம் ஆதரவாளர்க்குக் கொடுத்து, அப்போதைய இத்தாலியப் பிரதமந்திரி மோண்டி அல்லது தூதர் டெர்ராக்கியானோவைத் தொடர்பு கொண்டு, மன்மோகன் சிங்கை அழைக்குமாறு, ஓர்சி சொல்லியிருந்தார்.

ஓர்சியின் சிறைச் சாலை அறையிலிருந்து பறிக்கப்பட்ட இந்த குறிப்பு சொல்வது “என் சார்பில்  மோண்டியையோ அம்பாசிடர் (தூதுவர்) டெக்ராக்கியானோவையோ அழைத்து, பிரதம மந்திரி சிங்கிடம் பேசச் சொல்லவும்.” நிறைய விஷயங்களில் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழையாமையை நீதிமன்றத்தின் தீர்ப்பு சாடியுள்ளது. இந்த ஒத்துழையாமையை 2013ல் நிகழ்த்தியது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இதர இந்தியப் புலனாய்வு நிறுவனங்கள்.

குறிப்பு:

  1. நாணய மாற்று விகிதம், ஒரு யூரோ = 1.1264 அமெரிக்க டாலர்கள்
  2. ஒரு அமெரிக்க டாலர் = 66.525 ரூபாய்கள்

இணைப்புகள்:
[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]கீ[/dropcap]ழே தரப்பட்டுள்ளது தீர்ப்பின் 162 முதல் 165 வரையிலான பக்கங்களின் மொழிபெயர்ப்பு. இந்தச் செய்தியின் கடைசியில் (மேல்முறையீடு) நீதிமன்றத்தின் இத்தாலிய முழு தீர்ப்பும் உள்ளது. சில வாக்கியங்களில் இலக்கணப் பிழை காணக் கூடும்- முழுமைக்காக இது அப்படியே தரப்பட்டுள்ளது.

இந்தப் பதிவுகள் மிகப் பெரிய அளவிலான சுற்றுச் சூழ்நிலைகளைக் காட்டுகின்றன. அவை மிகவும் பரவலான மற்றும் மோசமான இந்த வழக்கின் பரிணாமத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றன. (‘A’ அத்தியாயத்தில் உள்ள விவரத்தைக் காட்டிலும்- சம்பந்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையாயினும் சரி, நிதிப் போக்குவரத்தின் விவரமாயினும் சரி- என்று தோன்றுகிறது). இந்த வழக்கில் புலனாய்வுகள் சந்தித்துள்ள குறுகிய எல்லைகள் இதை விளக்க முடியாது, அதற்கான சந்தர்ப்பமும் இல்லை, என்பதை உணர்த்துகின்றன. குறிப்பாக இந்த வழக்கின் சம்பந்தப்பட்ட நாடுகளிடமிருந்து பதில்கள் பெற முடியவில்லை. இத்தனைக்கும் இந்திய அரசை இத்தாலிய நீதிமன்ற அமைப்பு வழக்கற்கான உதவிகள் கோரியிருந்தது. இந்தத் தீர்ப்பின் முதல் கட்டத்திலேயே, ஒரு சிவில் நடவடிக்கையை குற்றவியல் நடைமுறையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கொண்டுவந்தது. இது இந்த இந்திய அமைச்சகத்தின் நடைமுறை வெளிப்பாட்டை – உண்மைகளை முழுதும் கொணர்வதற்கான இத்தாலிய நீதிமன்றத்தின் உதவிக் கோரிக்கையை முற்றிலும் அலட்சியப்படுத்தியதற்கு ஒப்பாகும். இது மேல் முறையீட்டுத் தீர்ப்பில் திறமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு அமைப்பின், இந்த வழக்கின் தன்மை குறித்த, சிலவற்றை நினைவுக்குக் கொண்டுவருகிறது தீர்ப்பு. ஆரம்ப கட்டப் புலனாய்வில் ‘ஓர்சி’ சம்பவம் எழுந்தது. ஏற்கனவே தெரிவித்துள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களின் தடயத்தைச் சிதறவும் சிதைக்கவும் எண்ணியுள்ள நடவடிக்கைகளையையும் மேலும் ஏற்கனவே திட்டமிட்டு ஒப்பந்தமாகியுள்ள கோர்வையான சாதகமான விஷயங்ககளைச் சித்தரிக்கவும் செய்யப்பட்ட முயற்சிகள் அம்பலமாயுள்ளன.

பஸ்டோ அர்சிசிடோ சிறைச்சாலையில் ஓர்சி கைதாகியிருக்கும் போது, சிறை அதிகாரிகள் ஓர்சியின் சிறை அறையில் மற்ற காகிதங்களுக்கு இடையில் ஒரு கையால் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டன (நீதிமன்ற நடவடிக்கைகளில் இதன் நகல் தரப்பட்டது) இதில்:

Handwritten note by Orsi to call PM Singh“மோண்டியை அழைக்கவும்

அல்லது அம்பாசிடர் டெர்ராகியாநோ (TERRACCIANO),

என்னுடைய சார்பில்

பிரதம மந்திரி சிங்குடன் பேசச் சொல்லவும்.”

குறிப்பின் தேதி 03/07/13. இந்தக் குறிப்பில் உள்ள தகவல், இந்த சம்பவத்துக்குரியவர்களின் நடமாட்டம், இதிலுள்ள மற்ற மறைபொருள்கள் எல்லாவற்றையும் நோக்கினால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் (சட்ட உதவி நிபுணர் /  வக்கில் மட்டுமல்லாமல்) குறிப்பில் கூறப்பட்ட நபர்களையும் அடையாளம் காட்ட முடியும்.

  • ‘மோண்டி’ இது முன்னாள் இத்தாலியப் பிரதமர் மேரியோ மோண்டியைக் குறிக்கும் -அச்சமயம் பதவியில் இருந்தார்.
  • அம்பாசிடர் டெர்ராகியாநோ (TERRACCIANO)- என்பதை பஸ்கால் டெர்ராகியானோ (Pasquale TERRACCIANO) என்க; முதலில் மேட்ரிட்டில் அம்பாசிடராக இருந்தவர், மற்றும் சம்பவ சமயத்தில் இத்தாலியப் பிரதம மந்திரியின் அயல்துறை ஆலோசகராய் இருந்தார்.
  • “PM சிங்” என்ற இனிஷியல், தவறாமல், மன்மோகன் சிங்கையே குறிக்கிறது. இவர் 2004லிருந்து 2014 வரை இந்தியப் பிரதமராக இருந்தார்.

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]ர்சி, தன்னுடைய சிறையிருப்பின் போது, என்ன செய்தியை இந்திய அரசாங்கத்தின் தலைமைக்கு அனுப்ப யத்தனித்திருந்தார் என்பதைத் தெளிவாக எங்களால் தீர்மானிக்க முடியவில்லை; ஆனால் இதை  ஊகிக்க முடிகிறது- முன்னம் கூறியபடி இத்தாலிய நீதித்துறைக்கு உதவும்படி இந்திய அரசைக் கேட்ட வேண்டுகோள்களுக்கு என்ன விளைவு ஏற்பட்டது (!) என்பதை நினைக்கும்போதும், மறுபக்கம், இந்த சம்பவத்தைச் சார்புடையவர்கள் குற்றத் தடையங்களை அழிக்க மும்முறமான நடவடிக்கைகளை ஒரு நீண்ட காலத்திற்கு மேற்கொண்டதை, அதுவும் கணிசமான அளவுக்கு வசதிகளை முடுக்கி விட்டதிலிருந்தும் – ஊகம் செய்ய முடியும் என்றே நம்புகிறோம்.

குற்றவாளித் தரப்பில் சாதகமாக எழுதப்பட்டுள்ள நினைவுகள் இத்தகைய நடவடிக்கைகளைப் பற்றி ‘கண்டுகொள்ளாமலேயே’ விட்டிருந்தன. 24/03/16 தேதியிட்ட ஸ்பக்னோலினியின் (Spagnolini) நீண்ட ‘தற்காப்பு’ விளக்கங்களின் சில வரிகள் மீதே அவர்கள் கண்ணோட்டம் பாய்கிறது.

“இதுதான் சட்டரீதியான மாற்று விளக்கம். ஹஷ்கின் ஆர்வம் சில பத்திரிகைகளின் தொந்தரவை எப்படி அகற்றுவது என்பதே. இது கார்டியன் (GORDIAN) தந்த ஆலோசனைச் சேவைகளுக்கானது. ஆனால் இது அகஸ்டாவின் பேரத்தொடு சேர்க்கப்பட்டுவிட்டது. இதுவே இயந்திர தொடர்பான பேரத்துடன் சேர்த்து  தவறாக பேசப்பட்டது.”

சில‘பேப்பர்களை’ மறைக்கும் ஹஷ்கியின் மனப்பான்மையை, சுற்றி வளைத்து திருப்ப குற்றவாளித் தரப்பு தற்காப்பு வாதம் முனைகிறது; இது போதாமல், தற்காப்பு வாதம் ஹஷ்கிக்கும் கெரோசாவுக்கும் (GEROSA) நடைபெற்ற உரையாடல் பற்றிய விளக்கவுரை சப்பைக்கட்டுகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தடையத்தை அழிக்கும் நீண்ட முயற்சிகளில் ஈடுபட்டதைப் பற்றி தற்காப்பு வாதம் எதுவும் ‘கண்டுகொள்ளாமலேயே’ (எந்த விளக்கம் சொல்லாமலேயே) விட்டுள்ளது; மற்றும் பேர உடன்பாடுகளைப் பற்றிய தற்காப்பு வாதம், இந்த நிகழ்ச்சியின் பணத்தொடர்புகளில் ‘சட்டரீதியான போர்வையை’க் கூட காட்டத் தவறிவிட்டது. சம்பந்தப்பட்டதரப்பின் எந்த விளக்கம் இல்லாமையாலும் (குற்றத்தை) மறுக்கும் எந்த மாறுபட்டக் கூற்றுகள் (வலிமையானவை) இல்லாதாலும், தீர்ப்பின் விளைவு அரசுத்தரப்பிற்கு (பிராசிக்யூஷன்) சாதகமாகவே அமைந்துள்ளது.

சுருக்கமாக, அலசப்பட்ட பேச்சுக்களிலிருந்து, தவிர்க்கவும் தடுக்கவும் முடியாத குறிப்புகளை நாம் பெற முடிகிறது:

  • இந்திய பொதுத் துறை அலுவரின் ஊழல்; இந்த அலுவலர், தியாகி சகோதர்களின் ‘மாமன் மகன் அத்தைமகன் (Cousin) உறவாக அடையாளம் காட்டப்பட்டுள்ளளார். இது சம்பந்தமாக, இந்த உரையின் விஷயங்களே, ‘ஊழல் நடந்துள்ளது’ என்பதை நம்பி நிலைநிறுத்தப் போதுமானதாக உள்ளன. (ஜெரோசாவின் சொந்த வார்த்தைகளை நினைவு கூரவும்)
  • வெவ்வேறு நபர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. அவர்களுள் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் கம்பெனியினர், ஓர்சி, ப்ரூனோ (ஸ்பாக்னோலினி) கவுதம் (கைதான்) ஜுலி த்யாகி;
  • ஊழைலுக்கும் இந்திய பேரத்துக்கும் இடையேயுள்ள சாதனத் தொடர்பு
  • இந்தக் காரணத்திற்காக பயன்பட்ட பணம், மாரீஷியஸ் தீவுகளில் உள்ள கணக்குகளில் மாற்றப்பட்ட தொகைகள், தியாகி ‘குடும்பத்திற்கு’ அளிக்கப்பட்ட பணங்கள், மற்றும் இதர இந்திய நபர்களுக்கு அளிக்கப்பட்ட பணங்கள் அச்சமயத்தில் இன்னும் தொடர் கொண்டிருந்தன.
  • சட்டத்திற்கு புறம்பான பணப்பரிமாற்றம் நிகழ்த்தப் பயன்பட்ட வழிகளும் தந்திரங்களும்

இது ஃபின்மெக்கானிக்காவின், புரட்சிகரப் புதுமாற்றத்தின் தலைவரான, பழம் பெருச்சாளி ஒருவர், தங்களுக்கு எதிராகச் செய்த சூழ்ச்சியின் விளைவு என்று, ஓர்சியும் தற்காப்பு வாதிகளும் கூறுகின்றனர்; சரியான சான்றுகள் இல்லாத காரணத்தால் இந்த விளக்கக் கொள்கையை (HYPOTHESIS) ஏற்பதற்கில்லை.

Italian Court Judgment on Augusta Westland

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here