குறுக்கு புத்தி சிதம்பரம் கோஷ்டி அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது பொய் மனு தாக்கல்

சிதம்பரம் மற்றும் அவர் கோஷ்டியின் கோணல் புத்தி இன்னும் தெளியவில்லை

0
3621
சிதம்பரம் மற்றும் அவர் கோஷ்டியின் கோணல் புத்தி இன்னும் தெளியவில்லை
சிதம்பரம் மற்றும் அவர் கோஷ்டியின் கோணல் புத்தி இன்னும் தெளியவில்லை

முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரமும் அவரது குறுக்குப்புத்தி கூட்டாளிகளும் நண்பர்களும் முறைகேடுகளுக்கு பேர் போனவர்கள் அவர்கள் இன்னும் திருந்திய பாடில்லை. ராஜேஷ்வர் சிங்  அமலாக்கத்துறையின் (ED) இணை இயக்குனராக பல வருடங்கள் பணி செய்துவிட்டு தற்போது 2ஜி ஊழல் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் புலனாய்வு அதிகாரியாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். சிதம்பரத்தின் இந்தக் கும்பல் அவரை நெடுநாளாக வேட்டையாடி மடக்க  முயல்கிறது. இந்தக் கொடுமை 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பாரதீய ஜனதா ஆட்சி தொடங்கிய பின்பும் நடக்கிறது. உச்ச நீதிமன்றத்திலேயே ராஜேஷ்வர் சிங்  மீது பொய்யான புகார் மனு அளிக்கப்பட்ட பிறகும் பலவகையிலும் அவருக்கு எதிராகக் கண்டனக்குரல்கள் வந்த பிறகும் அவற்றை புறக்கணித்து  மத்திய அரசு அவருக்கு பதவி உயர்வு தர முயன்று வருகிறது.

ப. சிதம்பரம் மற்றும் அஹ்மத் படேலின் ரகசியக் கூட்டாளியாக இருக்கும் சி பி ஐ அதிகாரியிடம் இருந்து இப்போது ஒரு பொய் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற புகார்களை இவர் தான் சரி பார்த்து திருத்தி  அனுப்புவார்.  உச்ச நீதிமன்றத்தில் இருந்து சிதம்பரத்தின் பினாமியும் இடைத்தரகருமான உபேந்திரா ராய் தன புகாரை திரும்பப்பெற்றுக்கொண்ட பிறகு இப்போது இன்னொரு பொய் புகார் மனு அதே அற்பத்தனமான காரணங்களைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தின் கோடை கால அமர்வில் இந்த மாதம் ஐந்தாம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (உபேந்திரா ராய் இப்போது திகார் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்). ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அமலாக்க துறை அதிகாரிகள் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில் இந்த பொய் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ராஜேஷ்வர சிங் ‘’தேசத்தின் இறையாண்மைக்கு ஒரு அச்சுறுத்தல்’’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கேவலமான மனுவின் மீது ஏன் துணை  சொலிசிட்டர் ஜெனெரல் மனீந்தர் சிங் மற்றும் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட ஆர். பாலசுப்பிரமணியன் என்ற ஆர். பாலா எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கிறார்கள். ஆர் பாலா மூத்த ராணுவ அதிகாரியாக இருந்து இப்போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகி இருக்கிறார்.  அவர் ப சிதம்பரத்தின் தீவிர விசுவாசி என்பதால் ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் அதே பொறுப்பில் தொடர்கிறார். இது ப. சிதம்பரத்தின் ஆள் பழக்கத்தையும் செல்வாக்கையும்  தெளிவாகக் காட்டுகிறது.

முன்பு ராஜேஷ்வர் சிங் மீது அளிக்கப்பட புகாரில் அவருக்கு ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்துகள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. உண்மையில் அவர் 2012 முதல் மத்திய அரசுக்காக பணி வழக்குகளில் [service cases] வழக்காடி வந்தாலும் அவரது பதவி உயர்வு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. அவரிடம் ஆயிரம் கோடி பணம் இருந்தால் அவர் ஏன் அரசுப்பணிக்கு வர  வேண்டும்? பொது நல வழக்கு தொடுக்கும் ஒருவர் இப்போது  புதிதாக அவர் மீது  ‘’தேச இறையாண்மைக்கு அச்சுறுத்தல்’ என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.

2010 இல் ராஜேஸ்வர சிங் இடைத்தரகர் நீரா ராடியாவுக்கு சம்மன் அனுப்பியபோது அவர் மீது முதல் பொய் புகார்  மனு அளிக்கப்பட்டது இதற்கு காரணமானவர்கள் சஹாரா குழுமத்தின் உரிமையாளர் சுப்ரதோ ராயும் அவரது கூட்டாளிகளான உபேந்திரா ராயும் சுபோத் ஜைனும் ஆவர். அவை அனைத்தும் 2011இல் உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு என்று குற்றம் சாட்டப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.  பின்பு ஏழு வருடங்கள் கழித்து உச்ச நீதிமன்றம் ஆறு மாதங்களுக்குள் ஏர்செல் மேக்சிஸ் வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகு அதே கோஷ்டி மீண்டும் புகார் மனுக்களை தாக்கல் செய்ய கிளம்பிவிட்டது. ராஜேஸ்வர சிங்குக்கு நிறைய சொத்துக்கள் இருக்கின்றன அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூக்குரலிடத் தொடங்கிவிட்டது. சி பி ஐ உபேந்திர ராயைப் பிடித்ததும் அவர் உச்ச நீதிமன்றத்தில் கொடுத்திருந்த புகார் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இப்போது புதிதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவை வைத்து பார்க்கும்போது ப சிதம்பரம் ஆட்கள் ராஜேஸ்வர சிங்குக்கு தொல்லை கொடுக்க விரும்புகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது. சிதம்பரம் குடும்பத்தினரால் இங்கும் வெளிநாடுகளிலும்  சட்டத்துக்கு புறம்பாக சேர்க்கப்பட்ட மூன்று பில்லியன் டாலர் சொத்துக்களை ராஜேஸ்வர சிங் வெளிப்படுத்தியதால் அவர் பல எதிரிகளை தான் சம்பாதித்துள்ளார். தற்போது [நிதி அமைச்சராக இருந்து வரும் பியுஷ் கோயல்] அருண் ஜெட்லி சிதம்பரத்துக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் ராஜேஸ்வர சிங்குக்கு ஆதரவாக செயல்பட மறுக்கிறார். தொடர்ந்து நான்கு வருடங்களாக ராஜேஷ்வர் சிங்குக்கு பதவி உயர்வு கிடைக்க விடாமல் முட்டுக்கட்டை  போடுகின்றனர்.  ஜேட்லியின் கீழ் இயங்கி வரும் நிதித்துறை அதிகாரிகள் சிதம்பரத்தின் வார்த்தையை வேத வாக்காக கருதுகின்றனர். யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பணியில் இருந்து அவர் வெளியேறி அமலாக்கத் துறைக்கு வந்த பிறகு அவரை அங்கிருந்து வெளியேற்ற கடுமையாகப் பாடுபடுகின்றனர்.

பி ஜே பி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கிலும் நிதி துறை ‘’உச்ச நீதிமன்றத்தில் ராஜேஸ்வர சிங் அமலாக்கத்துறையில் இருக்க வேண்டிய தேவை இல்லை ஏர்செல் மேக்சிஸ் வழக்குக்கு உரிய ஆய்வுகளா அனைத்தும் முடிந்துவிட்டன. எனவே அவர் தனது  பழைய துறைக்கே சென்று விடலாம்’’, என்று அப்பட்டமாக பொய் சொல்லியது. 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவ்வாறு தவறான அறிக்கையை நிதித்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது நீதிமன்றம் முகத்தில் அறைந்தாற் போல ‘’இன்னும் மூன்று வேலை நாட்களுக்குள் அவரை நிரந்தரமாக அமலாக்கத்துறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று ஆணையிட்டது. அப்போது சுவாமி அதிர்ந்து போய் ‘’எப்படி எனது அரசு சிதம்பரத்தை காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு புகாரை உச்ச நீதிமன்றத்தில் அளித்தது?’ என்றார்.

இதற்கு பிறகும் கூட நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளான சக்தி காந்த தாஸ் மற்றும் ஹஸ்முக் அத்தியா இவர் மீது பொய் வழக்குகள் தொடுத்த போது உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இவர்களுக்கு பதிலடி கொடுத்தது. .நிதித்துறை சார்பாக இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக அரசு தரப்பில் வாதாடுபவர் சிதம்பரத்துக்கு மிகவும் நெருங்கிய ஆர் பாலா எனப்படும் ஆர் பாலசுப்பிரமணியன் ஆவார்.

2018 ஆம் ஆண்டு ஜுன் 5 அன்று உச்ச நீதிமன்றத்தின் கோடை நீதிமன்றத்தில் துணை சொலிசிட்டர் ஜெனரலான மநீந்தர் சிங்குடன் இறந்தார். ஆனால் என்ன காரணமோ இவர்கள் ராஜேஷ்வர் சிங்குக்கு எதிராக புனையப்பட்ட பொய் புகார் வழக்கிற்கு பதிலடி கொடுக்காமல் மௌனமாக இருந்தனர். அரசு அதிகாரியான ராஜேஷ்வர் சிங்கை பாதுகாக்க வேண்டிய கடமை இவர்களுக்கு இருப்பதால் இவர்கள் இருவரும் அந்த ரிட் மனுவை எதிர்த்து சாடியிருக்க வேண்டும். பாலாவின் மௌனம் பாவமான  செயல்.. அது அறத்திற்கு புறம்பானது.

அவர் ப சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது அவருக்காக அரசு வழக்குகளில் வாதாடி இருக்கிறார்.  இப்போது பி.ஜே.பி அரசு மாறிய பிறகும் அவர் அரசு வக்கீலாகவே இருக்கிறார். மாற்றப்படவில்லை இப்போது அவர் ப சிதம்பரத்தின் ஊழல் வழக்குகளை எதிர்த்து வாதாட வேண்டும். ஆனால் ப சிதம்பரத்துக்கு ஆதரவாக செயல்படுவதால் மௌனமாக இருந்து விடுகிறார்.

ஆர் பாலா  முந்தைய அரசு காலத்திலிருந்து இன்று வரை ராஜேஸ்வர சிங்குக்கு எதிராகவும் சிதம்பரத்துக்கு ஆதரவாகவும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மத்திய நிர்வாக ஆணையம் [Central Administrative Tribunal (CAT) மூலமாக சிதம்பரத்தின் பணி தொடர்பான வழக்குகளில் வாதாடியிருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி அன்று வெளியான CATஇன் தீர்ப்புகளில் அவர் பெயரும்  இடம்பெற்றுள்ளது. டில்லி உயர் நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் நாளன்றும் அக்டோபர் பத்தாம் நாளன்றும் நடந்த விசாரணைகளிலும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 மற்றும் ஏப்ரல் 15 அன்று நடந்த ஆறு விசாரணைகளிலும்  பாலாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.  பாலா யாருடைய அறிவுரையைக் கேட்டு  அரசு வழக்குகளில் வாதாடுகிறார்?

சிதம்பரத்தின் கையாட்கள் தாக்கல் செய்யும் மட்டமான மனுக்களால் உச்ச நீதிமன்றம் ஏமாற்றப்படுகிறது. சிதம்பரத்தின் கையாளான ஆர் பாலாவும் முந்தைய தீர்ப்புகளில் ராஜேஷ்வர் சிங்குக்கு ஆதரவான விஷயங்களை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்கூறி அவரை பாதுகாக்கும் தன கடமையைச் செய்யாமல் உண்மைகளை சொல்லாமல் மூடி மறைக்கிறார். இதை அவர் வேண்டுமென்றே  செய்கிறாரா? . சிதம்பரத்துக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே செயல்படுகிறாரா?.

இந்த கொடுமையை விட பெரிய கொடுமை இனி நாம் சொல்லப்போவது தான். அதிகாரத்தில் இருப்பவருக்கு கூழை கும்பிட்டு போட்டு பிழைக்கும் ஒரு மூத்த பத்திரிகையாளர் சிதம்பரம் கோஷ்டியினரின் வழக்குகளை பற்றி பத்திரிகையில் எழுதுவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்.  நீதிமன்றம் இந்த மனுவை  2 ஜி அமர்வில் ஏற்றுக்கொண்டுள்ளது என்பது தவிர  எந்த ஆணையும் பிறப்பிக்காத நேரத்திலும் அவர் தனது குறுக்கு புத்தியால் தவறான செய்தி பரப்புகிறார்.

இந்த சம்பவங்களை எல்லாம் காணும்போது ஒருவருக்கு  ‘’திரு மோடி அவர்களே உங்கள் அரசை இங்கு யார் நடத்துகிறார்கள்?’ என்று ஓங்கிய குரலில் கேட்க தோன்றுகிறது.

ஹஸ்முக் அதியா

இந்த விஷயத்தில் நிதித்துறை செயலர் ஹ்ஸ்முக் அதியாவின் பங்கு சந்தேகத்துக்குரியதாகும்.  மைஸூருவில் இருக்கும் யோகா மையத்துக்கு போய் இருபது நாட்கள் புத்துணர்ச்சி பயிற்சி பெற்ற பிறகும் அவருடைய வழிகளில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.. கூடுதல் இயக்குனர் என்ற முறையில் அவர் ராஜேஷ்வர் சிங்கின் பதவி உயர்வுக்கு கடந்த எட்டு மாத காலமாக இடையூறு செய்துவருகிறார். 2017இல் இவரும் ராகேஷ் அஸ்தனாவும் சேர்ந்து ராஜேஷ்வர் சிங் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி உச்ச  நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்தனர் ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. கார்த்தியின் வங்கி கணக்கையும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கையும் விசாரணைக்கு ராஜேஸ்வர சிங் எடுத்துக்கொண்ட பிறகு தான் இது போன்ற பொய் புகார்களும் போலி குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்த தொடங்கினர். ராகேஷ் அஸ்தனா கடந்த இரண்டு வருடங்களாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கை கவனித்துக்கொண்டு சிதம்பரத்தைக் காப்பாற்றி வந்தார். ஆனால் சி பி ஐ இயக்குனராக ஆலோக் வர்மா வந்ததும் அவர் ஐ என் எக்ஸ் வழக்கில் கார்த்தியை கைது செய்ய உத்தரவிட்டார் அவரிடம் ராகேஷின் பருப்பு வேகவில்லை

ஹஸ்முக் அதியா சிதம்பரம் குடும்பத்தார் மீது சட்டத்துக்கு புறம்பாக சொத்து சேர்த்த குற்றத்தை கருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் சுமத்த தடையாக சகல தகிடு தத்தங்களையும் செய்து வந்தார். இவ்வழக்கு பதிவு செய்யாமல் இருக்க தன்னால் இயன்றவரை கால தாமதம் செய்தார். சிதம்பரம் குஜராத் கேடரை சேர்ந்த இந்த அதிகாரிகளை எப்படி தனது  வசப்படுத்தி இருக்கிறார் என்பது தான் புரியாத புதிர்

ராகேஷ் அஸ்தானா

.உபேந்திர ராய்க்கும் சி பி ஐயின் சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சி பி ஐயின் குறிப்பில் தொடர்பு கொள்ள விரும்பத்தகாத மனிதர் [Undesirable Contact Men (UCM) என்ற பட்டியலில் இடம்பெற்ற உபேந்திரா ராயுடன் ராகேஷ் தொடர்பு வைத்திருந்தது ஒரு குற்றச் செயல் ஆகும். இந்த பட்டியலில் உள்ள ஒரு மனிதருடன் ராகேஷ் எப்படி உறவாட முடியும்? ஏர் செல் மேக்சிஸ் விசாரணையில் அனைத்து நாச வேலையும் செய்வதே இந்த இருவருக்கும் அன்றாடக் கடமையாக இருந்தது.  இதன் மூலமாக  சிதம்பரத்தையும் ஸ்டெர்லிங் பையோ டெக் டயரீஸ் பால் வள நிறுவனத்தின் அஹ்மத் படேலையும் இவர்கள் குற்ற நடவடிக்கைகளை இருந்து காப்பாற்ற முயன்றனர். ஸ்டெர்லிங் பயோ டெக் டயரீஸ் நிறுவனத்துக்காக 3.8 கோடி ருபாய் வாங்கிய வழக்கில் அஸ்தனாவின் பெயர் உள்ளது. அஹ்மட் படேலின் மருமகன்  இர்ஃபான்   குற்றம் சுமத்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாக சி பி ஐயின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. ஊழலுக்கு எதிரான் மோடியின் ஆட்சியில் குஜராத் கேடர் அதிகாரிகள் அஹ்மத் படேல் போன்றோருடன்  ரகசிய தொடர்பு வைத்திருப்பது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

முடிவாக,

ராஷேஷ்வர் சிங்  என்ற நேர்மையான அதிகாரிக்கு எதிராக கடந்த ஏழு ஆண்டுகளாக குற்றம் சுமத்தப்பட்டோஎர் பொய்  புகார் அளித்து தடுத்து வருவதும் அவற்றை உச்ச நீதிமன்றம் தகர்த்து வருவதும் நடைபெறுகிறது. அரசு வக்கீல்களான மநீந்தர் சிங்கும் ஆர் பாலாவும் சத்தியத்துக்கு புறம்பாக அமைதி காத்து வருகின்றனர். கோடை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட போய் புகார் மீது கூட அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவும் சிதம்பரத்தின் அறிவுரையின் பேரில் நடை பெறுகின்றதோ என்ற அச்சம் நிலவுகிறது. அவர்களின் மயான அமைதியால் உச்சநீதிமன்றத்தின் கோடை அமர்வை அசிங்கப்படுத்திவிட்டனர். இது குறித்து டிவிட்டரில் சுவாமி, நான்கு அதிகாரிகளின் குழு சித்மபரத்துகு எதிராக நடக்கும் விசாரனைகளை குலைக்கவும் ராஜேஷ்வர் சிங் போன்ற நல்லவர்கள் பதவிக்கு வருவதை கெடுக்கவும் வெறியுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here