குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகு பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரை கைது செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சி பி ஐ அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்தனர்.
அமலாக்கத் துறையினர் சார்பில் வாதாடிய என் கே மேத்தாவும் நித்தேஷ் ரானாவும் ஜூலை பத்தொன்பதாம் தேதி சி பி ஐ நிதி அமைச்சர் ப சிதம்பரம் மீது வழக்கு பதிந்தது.
சி பி ஐ யும் அமலாக்கத் துறையும் ப. சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தியின் முன்ஜாமினை ரத்து செய்யும்படி கேட்டிருந்தனர். மத்திய அரசு ப சிதம்பரத்தைக் கைது செய்து விசாரணை மேற்கொள்ள சி பி ஐ க்கு நேற்று அனுமதி அளித்தது. 2 ஜி நீதிமன்ற நீதிபதி ஓ பி சைனியிடம் அரசு தரப்பு வக்கீலான துஷார் மேத்தா ‘ப. சிதம்பரத்தோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மற்ற நான்கு நிதி துறை அதிகாரிகளைக் கைது செய்து விசாரிக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறுவதற்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் தேவை’ என்று தெரிவித்தனர். ப. சிதம்பரம் நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அவர் சார்பில் கபில் சிபலும் அபிஷேக் சிங்க்வியும் வாதாடினர். அவர்கள் தமது கட்சிக்காரரைக் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டிசம்பர் பதினெட்டாம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். விசாரணையின் போது ‘’அப்பாவும் மகனும் சரியாக ஒத்துழைப்பதில்லை. கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லாமல் தட்டி கழிக்கின்றனர்’’ என்று தெரிவித்த மேத்தா இவர்களை கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மையை வரவழைக்க முடியும் என்றார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொத்தம் பதினெட்டு பேர் ஆவர். இவர்களில் அரசு அதிகாரிகளான ஐந்து பேருக்கு மட்டும் அரசின் அனுமதி தேவைப்படுகிறது. சி பி ஐ யின் வேண்டுகோள் கடிதம் நிதி அமைச்சகத்தில் பல மாதங்களாக உறங்கிக்கொண்டிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஐவரில் அசோக் ஜா, அசோக் சாவ்லா என்ற இருவர் ஒய்வு பெற்று விட்டனர். குமார் சஞ்சய் கிருஷ்ணன், தீபக் குமார் சிங், ராம் சரண் ஆகியோர் பணியில் இருக்கின்றனர். ஊழல் தடை சட்டம் மற்றும் 197 of CrPC பிரிவின் கீழ் ப. சிதம்பரத்தைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக அரசு தரப்பு வக்கீல் மேத்தா சி பி ஐ தரப்பில் தெரிவித்தார். ஐந்து அரசு அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க உத்தரவிடும்படி மத்திய அரசிடம் கேட்ட அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த அனுமதியை அரசிடம் இருந்து பெற இன்னும் சில வாரங்கள் ஆகலாம். என்று சலித்துக்கொண்ட சி பி ஐ வக்கீல்கள் ‘’இவ்வாறு அனுமதி தராமல் இழுத்தடிப்பதால் நீதியின் நோக்கமே மாறிப் போய்விடுகிறது’’ என்று குற்றம் சுமத்தினர். .
ஆதாரங்களையும் சூழ்நிலைகளையும் வைத்து சி பி ஐ வேண்டிக்கொண்டதற்கு இணங்க மத்திய அரசின் உயர் தலைமை ப. சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வழங்கியிருக்கும் அனுமதியை உடனடியாக செயல்படுத்தவும் அவரோடு குற்றம் சுமத்தப்பட்ட மற்றவர்களையும் உடனடியாக கைது செய்து விசாரிக்கவும் கால அவகாசம் வழங்கும்படி சி பி ஐ வக்கீல்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தனர்..
அடுத்ததாக, அமலாக்கத் துறையினர் “நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர் கருப்பு பண வழக்கு விசாரணையின் போது சி பி ஐ க்கு தவறான தகவல்களை கொடுத்து வழக்கு விசாரணையை திருப்பி விடப் பார்த்ததாகவும் அவருடைய வெளிநாட்டில் உள்ள உண்மையான வங்கி கணக்குகள் பற்றி முழுமையான தகவல்களை அளிக்க மறுத்ததாகவும் பல்வேறு வழிகளில் வந்து குவிந்த பணம் குறித்து தகவல்களை சொல்லவில்லை’’ என்றும் தெரிவித்ததனர்.
அமலாக்கத் துறையினர் சார்பில் வாதாடிய என் கே மேத்தாவும் நித்தேஷ் ரானாவும் ஜூலை பத்தொன்பதாம் தேதி சி பி ஐ நிதி அமைச்சர் ப சிதம்பரம் மீது வழக்கு பதிந்தது. அன்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கும் தகவல்களை விட பல புதிய தகவல்களை சேகரித்து இப்போது சி பி ஐ தன்னிடம் வைத்துள்ளது. அவற்றை குறித்தும் குற்றம் சுமத்தப்பட்டோரிடம் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டி அனந்தகிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரால்ப் மார்ஷல் ஏர்செல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வி ஸ்ரீநிவாசன் மற்றும் ப சிதம்பரத்தின் குடும்ப கணக்காயர் எஸ் பாஸ்கர ராமன் ஆகியோயர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ப சிதம்பரம் தவறாக தன அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயத்தில் தலையிட்டு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு அமைப்பிடம் இருந்து மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி பெற்று தந்ததற்காக இரண்டு மில்லியன் டாலர் பணம் கார்த்தி சிதம்பரம் நடத்தி வரும் அட்வான்டேஜ் ஸ்டரெட்டஜிக் மற்றும் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு போய் சேர்ந்தது. இந்த பண வரவு குறித்து சி பி ஐ வழக்கு தொடர்ந்துள்ளது. மேக்சிஸ் நிறுவனத்துக்கு அஸ்ட்ரோ ஆல் ஏஷியா, மேக்சிஸ் மொபைல் எஸ் டி எம், பூமி அர்மேடா பெர்ஹாட், பூமி அர்மேடா நேவிகேஷன் பெர்ஹாட் என நான்கு நிறுவனங்கள் சொந்தமாக உள்ளன. , பூமி அர்மேடா பெர்ஹாட், பூமி அர்மேடா நேவிகேஷன் பெர்ஹாட் ஆகியவையும் வழக்கில் சிக்கியுள்ளன. இவையும் சட்டத்துக்கு புறம்பாக அந்நிய முதலீட்டு அனுமதி பெற்றன.








![ஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி கைது இந்தியத் தேசியப் புலனாய்வு அமைப்பு [என் ஐ ஏ] கேரளாவைச் சேர்ந்த 29 வயது ரியாஸ் அபுபக்கர் என்ற தீவிரவாதியைக் கைது செய்தது](https://tamil.pgurus.com/wp-content/uploads/2019/05/SL1951-218x150.jpg)



