
காவலில் எடுத்து ஏழு நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
உபேந்திரா ராய் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறார். அமலாக்கத்துறை (ED) டில்லி பெரு நகர் நடுவர் நீதிமன்றத்தில் உபேந்திரா ராயின் சந்தேகத்துக்கு இடமான பணப் பரிமாற்றங்களுக்கும் மற்றவர்களை மிரட்டி பணம் பறித்ததற்கும் இவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டது. நீதிமன்றம் ஏழு நாட்களுக்கு அனுமதி கொடுத்தது.
கி பி ஐ (CBI) உபேந்திரா ராயை மே மாதம் மூன்றாம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது அங்கு நாற்பது நாட்கள் கழிந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் உடனே விசாரணைக்காக அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்தது. விமான நிலைய நுழைவுச் சீட்டுப் பெறுவதற்காக இவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்தார். மேலும் இவரது வங்கி கணக்கில் ஏராளமான பணம் வந்து குவிந்துள்ளது. இந்த குற்றங்களுக்காக இவரை சி பி ஐ கைது செய்தது. 2017 – 2018 வருடத்தில் மட்டும் இவரது வங்கி கணக்கில் நூறு கோடிக்கு மேல் பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இவர் ஒரு மும்பை தொழிலதிபரிடம் பதினைந்து கோடி ரூபாயை மிரட்டி பெற்றார் என்றும் சி பி ஐ இவர் மீது ஒரு வழக்கு பதிந்துள்ளது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் இவர் மீது கருப்பு பணத் தடை சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிந்தது.
பெரு நகர் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி தர்மேந்திரா சிங் அமலாக்கத்துறைக்கு ராயை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அமலாக்கத்துறை பதினான்கு நாட்களுக்கு அனுமதி கேட்டிருந்தத நிலையில் ஏழு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்காக வாதாடிய என். கெ மத்தா மற்றும் நிதேஷ் ரானா ஆகியோர் இவர் தன்னை பத்திரிகையாளர் என்று பொய் சொல்லிக்கொண்டு தன்னிடம் அவர்கள் குறித்த ரகசியங்கள் இருப்பதாக மிரட்டி பலரிடம் பணம் பறித்திருக்கிறார், இவ்வாறு நூறு கோடிக்கு மேல் இவர் பணம் பறித்துள்ளார் என்று வாதாடினர்.
உபேந்திர ராய் ஜாமீன் பெற்று வெளியே வரும் வேளையில் இவரை அமலாக்கத்துறையினர் திஹார் சிறையின் வாசலில் வைத்து கைது செய்தனர். ஏ ஆர் ஆதித்யா என்ற வழக்கறிஞர் இவரைக் குறித்து பல ஆவணங்கள் காகித வடிவிலும் ‘பென் டிரைவிலும்’ கைப்பற்றப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இவை குறித்து ராயிடம் நேரில் விசாரிக்க வேண்டும் என்று அமலாக்க துறை சார்பில் எடுத்துக்கூறினார்
மேலும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ராய் தான் இங்கு முறைகேடாக தான் சம்பாதித்த பணத்தை வெளிநாட்டுக்கு அடிக்கடி பறந்து சென்று அங்கு தன் பெயரில் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக தெரிவித்தது. கடந்த இருபது ஆண்டுகளாக ராய் தெஹெல்கா பத்திரிகை மற்றும் சஹாரா குழுமத்தின் எடிட்டர் என்ற முறையில் பல அக்கிரமங்களை செய்திருக்கிறார். இவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ராஜிவ் சுக்லாவுக்கும் நெருக்கமானவர்
நமது செய்தி தளம் உபேந்திரா ராயின் அநியாய நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்துள்ளன.









![ஏர் ஏஷியா ஊழல்: சி பி ஐ விசாரணையில் டோனி பெர்னாண்டஸ் & டாடா டிரஸ்டின் தலைவர் வெங்கட் ஏர் ஏஷியா: சிதம்பரம் & அஜித் சிங்குக்கும் விரைவில் அழைப்பாணை [சம்மன்]](https://tamil.pgurus.com/wp-content/uploads/2018/05/AA1852-218x150.jpg)


