தன் வழக்குகளுக்காக கோர்ட் கோர்ட்டாக அலைந்து கொண்டிருக்கும் ப
சிதம்பரம் தான் இவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே நல்ல வக்கீலா?
2011 -12 ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன
வருமானத்தை மதிப்பீடு செய்து வரி விதித்ததை காங்கிரஸ் கட்சியின்
தலைவர்களான சோனியா காந்தியும் அவர் மகன் ராகுல் காந்தியும் ,
ஆஸ்கார் ஃபெர்னான்டசும் செலுத்தாமல் அதை மீண்டும் மதிப்பிடு செய்ய
வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அந்த மனுவை
இன்று டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த ஏ ஜெ எல் எனப்படும்
அசொசியேடெட் ஜர்னல்ஸ் லிமிட்டட் நிறுவனம் அந்த நாளிதழை
நிறுத்திவிட்டு யங் இண்டியன் என்ற பத்திரிகையை நடத்தியது. காங்கிரஸ்
தலைவர்கள் இதன் இயக்குனர்களாக இருந்ததை மறைத்துவிட்டனர்.
இதைக் கண்டுபிடித்த வருமான வரித்துறை அவர்களை வருமான வரி
செலுத்தும்படி தெரிவித்தது. ஆனால் அவர்கள் வரியைச் செலுத்தாமல்
மறு மதிப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர்.
அமர்வு நீதிமன்ற நீதிபதிகளான எஸ். ரவீந்திர பட் மற்றும் ஏ. கெ.சாவ்லா ஆகிய இருவரும் வருமான வரி துறைக்கு அத்தகைய ஆணை பிறப்பிக்க அதிகாரம்
இருப்பதாகத் தெரிவித்தனர். இப்போது பிறப்பித்துள்ள ஆணையினால்
வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்குரிய அமைப்பை நாடி தன் குறை
தீர்க்கும்படி அங்கு மனு செய்யலாம் என்றும் நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சோனியா காந்தியின் சார்பாக பழைய நிதி அமைச்சர் ப.
சிதம்பரமும் ராகுல் காந்தி தரப்பில் புகழ் பெற்ற வருமான வரி
வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் என்பவரும் ஆஜர் ஆயினர். நேஷனல்
ஹெரால்டு வழக்கில் ஆஜரான கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்க்வி
பற்றி அவதூறு பேசி அவர்களை இந்த வழக்கில் இருந்து வெளியேற்றிவிட்டதாகப் பலரும் பேசி வருகின்றனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி குறித்த விஷயங்களை
ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று சோனியா காந்தியும் ராகுல்
காந்தியும் முன்னர் மனு செய்திருந்தனர். இந்த மனுவையும் நீதிமன்றம்
ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தற்காலத்தில் பத்திரிகை சுதந்திரம்
குறித்து அதிகமாகப் பேசி வரும் ப. சிதம்பரம் இந்த நேஷனல் ஹெரால்டு
வழக்கில் மட்டும் பத்திரிகைகள் செய்தியை வெளியிடக் கூடாது என்று
வாதிடுவது நகைப்புக்கு உரியதாகும்.
2011- 12 ஆண்டுக்கான வருமானம் 414 கோடியை மறைத்ததால் யங்
இண்டியன் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை 2017ஆம் ஆண்டில் 250
.கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இது குறித்து வருமான வரி அபராதம்
விதித்து பிறப்பித்த விவரங்களை தெளிவாக நமது பி.குருஸ் செய்தி தளம்
வெளியிட்டிருந்தது. யங் இண்டியன் நிறுவனத்தில் இந்த காங்கிரஸ்
தலைவர்கள் தாம் இயக்குனர்களாக இருந்ததை மறைத்ததால் 2018ஆம்
ஆண்டில் வருமான வரி துறை இந்த தலைவர்களின் வருமானத்தை மறு
மதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யங் இண்டியன் தொடங்கப்பட்டது.
ஆனால் 2012 ஆம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி நவம்பர் மாதம் முதல்
தேதி அன்று அதன் ஊழல் குறித்து வெளியே தெரிவித்தபோது தான்
அதனைப் பற்றி எல்லோரும் அறிந்துகொண்டனர். சோனியாவும் ராகுலும்
ரகசியமாக யங் இண்டியனைத் தொடங்கி அதன் இயக்குனர்களாக இருந்து
அதனை நடத்தி வந்தது அமபலமாயிற்று. இவ்வாறு ரகசியமாக
வைத்திருந்ததால் இருவரும் இதற்கான வருமானத்தை மறைத்து 2011 &
2012 மார்ச் மாதத்தில் வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றிவிட்டனர்.
தகவல்கள் மறைக்கப்பட்டதால் ராகுல் காந்திக்கு 2011-2012 ஆம்
ஆண்டுக்கான வருமான வரி மீண்டும் மதிப்பிடப்பட்டு விதிக்கப்பட்டது.
இதன்பிறகு மூன்று தலைவர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆகஸ்ட்
பதினாறாம் நாள் அன்று உயர் நீதி மன்றம் தன் ஆணையை நிறுத்தி
வைத்தது. மேலும் சோனியா , ராகுல் மற்றும் ஃபெர்னண்டஸ் மீது
அடுத்த ஆணை பிறப்பிக்கப்படும் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க
வேண்டாம் என்று வருமான வரி துறையினரிடம் வாய்மொழியாக
உத்தரவிட்டது.
வருமான வரி துறைக்கு ஆஜரான அடிஷினல் சொலிசிட்டர் ஜெனரல்
துஷார் மேத்தா காங்கிரஸ் தலைவர்கள் வருமான வரி செலுத்துவதில்
இருந்து தப்பிக்க பல தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் உண்மையை ஒத்துக்கொள்ள
மறுக்கின்றனர் என்றார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சுப்பிரமணியன்
சுவாமியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வருமான வரி துறை தங்களுக்கு
தீராத தொல்லைகளைக் கொடுத்து வருவதாக குற்றம் சாட்டினர்.
வருமான வரி துறையின் சார்பில் வாதிட்டவர் ‘’ஏ ஜெ எல் நிறுவனத்துக்கு
தொன்னூறு கோடி கடன் கொடுத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் சொல்வது
அப்பட்டமான பொய் . ஏ ஜெ எல் நிறுவனத்துக்கு நாடு முழுக்க சுமார்
ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதால் அவற்றை
அபகரிக்க இந்த பச்சை பொய்யை சோனியா, ராகுல் மற்றும்
ஃபெர்னான்டஸ் சொல்லி வருகின்றனர். ஏற்கெனவே மதிப்பிட்டபடி
ராகுலுக்கு யங் இண்டியன் மூலம் கிடைத்த வருமானம் முன்னர்
மதிப்பிட்டபடி வெறும் 68 இலட்சமாக இருக்க வாய்ப்பில்லை.
அந்நிறுவனத்தில் அவருக்கு இருக்கும் பங்குகளை மதிப்பிடும் போது சுமார்
154 கோடி ரூபாய் வருமானம் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்’’
என்றார்.
இதற்கிடையே சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும் ஆவணங்கள்
விசாரனை நீதிமன்றத்தில் வரும் செப்டமபர் மாதம் பதினேழாம் தேதி
விசாரணைக்கு வரப் போகிறது. இதன் பிறகு இவரை காங்கிரஸ்
தலைவர்களின் வழக்கறிஞர் குழு குறுக்கு விசாரணை செய்யும்.













