வங்கிகளில் மை வைக்கப்படுவதன் பின்னணியில்….

தொழில் செய்வோர் தங்கள் நடப்பு வங்கிக்கணக்கில் (Current Account) இருந்து நாளொன்றுக்கு ரூ.50000 வரை தொகையை பணமாக பெறலாம், மை வைக்கப்படாது.

0
1646

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]ண்பர்களே, ஒருவர் தன் வங்கிக்கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை லட்சம் ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக இருந்தாலும் செலுத்தலாம். மை வைக்கப்படாது.

காசோலை (Cheque) ஏற்கப்படுமிடத்தில் அதையும் பணத்துக்கு பதிலாக கொடுக்கலாம். தடையே இல்லை.

ஒருவர் தனது சேமிப்பு வங்கிக்கணக்கில் (Savings Account) ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.12000 அல்லது ஒரு வாரத்தில் அதிகபட்சமாக ரூ.24000 பணத்தை வங்கியில் இருந்து பணமாக பெற்றுக்கொள்ளலாம். மை வைக்கப்படாது.

தொழில் செய்வோர் தங்கள் நடப்பு வங்கிக்கணக்கில் (Current Account) இருந்து நாளொன்றுக்கு ரூ.50000 வரை தொகையை பணமாக பெறலாம், மை வைக்கப்படாது.

வங்கிக்கணக்கில் பணம் வைத்திருப்போர், டெபிட் கார்டு, கிரடிட் கார்டு மூலம் செய்யும் பணப்பரிவர்த்தனைகளுக்கு உச்சவரம்பு ஏதுமில்லை. கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியுள்ள கடைகள், உணவகங்களை பயன்படுத்துவதை அதிகரித்துக்கொள்வதன் மூலம் நம் பணத்தேவை வெகுவாக குறையும்.

தன் வங்கிக்கணக்கில் இருந்து வேறொருவரின் வங்கிக்கணக்குக்கு NEFT அல்லது RTGS மூலமாக எவ்வளவு வேண்டுனானாலும் பணம் அனுப்பலாம். தடையேதும் இல்லை.

காசோலை (Cheque) ஏற்கப்படுமிடத்தில் அதையும் பணத்துக்கு பதிலாக கொடுக்கலாம். தடையே இல்லை.

இத்தனை வசதிகள் இருந்தும் பலரும் வங்கியில் பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய நோட்டு பெற வேண்டி வரிசையில் நின்று சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இந்த வசதிகளை பொதுமக்களுக்கு புரிய வைத்து சமூகத்துக்கு உதவ வேண்டிய மீடியாக்கள் பரபரப்பு செய்திக்காக மக்களை தொடர்ந்து குழப்பி வருவது துரதிர்ஷ்டம். நிற்க.

யாருக்கு மை வைக்கப்படும்?

பழைய 500&1000 ரூபாய் பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தாமல், நேரடியாக வங்கியில் கொடுத்து சில்லறையாகவோ புதிய நோட்டாகவே பெறுவோருக்கு மட்டும் விரலில் மை வைக்கப்படும்.

ஏன்?

பிரதமரின் கருப்புப்பண ஒழிப்பு திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும் விதமாக பலர், கருப்புப்பணக்காரர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்று ஒரு முறை ரூபாய் 4500 ஐ மாற்றித்தர ரூ.500 கமிஷன் பெற்றுக்கொண்டு, வெவ்வேறு அடையாள அட்டைகளை பயன்படுத்தியும், வெவ்வேறு வங்கிகளில் வரிசையில் நின்றும் சட்டவிரோதமாக பணம் மாற்றுகின்றனர். இதை பலரும் தொழிலாகவே கடந்த 4 நாட்களாக செய்து வருகின்றனர்.

இதனால் வங்கியில் சில்லறைத்தட்டுப்பாடு ஏற்படுவதோடு, தம் தேவைக்கு பணம் மாற்ற வரும் அப்பாவி பொதுமக்களுக்கு நீண்ட க்யூ காரணமாக பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கவே விரலில் மை வைத்து ஏற்கனவே பணம் மாற்றியவர் மீண்டும் மாற்றாமல் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு யார் காரணம்?

நாட்டில் கருப்புப்பணத்தை ஒழித்து பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசு முயற்சிக்கும் போது, அதற்கு கைகொடுக்காமல் கருப்புப்பண முதலைகளுக்கு பணம் மாற்றிட உதவும் சிலரே காரணம்.

ஓட்டுக்கு பணம் வாங்குவதும் பிறகு அரசியல் வாதி சரியில்லை என்று புலம்புவதும் போல, இன்று அரசோடு ஒத்துழைக்காமல் பிறகு கருப்புப்பணம் ஒழியவில்லை என்று புலம்புவதும் ஒன்றுதான்.

கருப்புப்பண ஒழிப்பில் பிரதமருக்கு உறுதுணையாக நிற்போம்.

ஜெய்ஹிந்த்.
Country for the first time opposes a Bandh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here