உள்ள பணம் போகிறது
கள்ள பணம் தெரிகிறது
நல்ல பணம் வருகிறது ஐயா
நல்ல பணம் வருகிறது.
கோடிக் கைகள் இனணந்திடுவோம் பாடுபட
வாடிக்கையாக்கிடுவோம் உழைத்திட
வேட்டைதனைத் தொடங்கிடுவேம் நலம் காண
சாட்டையால் அடித்திடுவோம் கேடு மறைய
வரி கட்ட மறந்திட்டோர் கட்டிடுவீர்
சரியென்று சொல்லி சொல்லி நெறிப்படுவீர்
விதிகளை மாத்திட்டோர் வீதியிலே நிண்றிடுவார்
பாதியிலே வந்த பணம் பாதியிலே சென்றுவிடும்,
நல்ல உள்ளங்கள் சேர்ந்திடுவீர் நாட்டைக்காக்க
மீண்டும் மீண்டும் பொறுத்திடுவீர் சோதனை கடக்க
தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பணத்தை
நிறுத்துகிறது அரசாங்கம்.
கறுப்பு பணம் வைத்திருப்பவர்
மறுப்பின்றி விருப்புமின்றி வேறு விதமாய்க் கட்டுகிறார்.
உறுத்தலோடு இருப்பவரும் இருக்கிறார்கள்.
நறுக்கென்று பிரதமர் முடிவெடுத்துவிட்டார்
சறுக்கலின்றி அவர் திட்டம் நிறைவேற
மக்களாகிய உங்களைக் கேட்டுகின்றேன்.
இது ஒரு பொதுப்பிரச்சினை.
வீடு நன்றாக இருக்க வீட்டுத்தலைவர் செயல்படுவார். அதுபோல்
நாடு நன்றாக இருக்க நம் பிரதமர் பாடுபடுகிறார்.
நாமும் அவருக்கு உறுதுணையாய் பாடுபடுவோம்
ஊழலில்லாத சூழலை உருவாக்குவோம்
லஞ்சமும் வஞ்மும் ஒழிப்போம்.
கொஞ்சம் கொஞ்மாய் நல்ல நாட்டை மேலும் முன்னேற்றுவோம்.
கொஞ்சம் சிந்தியுங்களேன்.