உங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கொடூரமான ஆபத்து…

0
1480

கிறிஸ்தவ பாதிரியார்கள் பல்லாயிரம் பேர் உலகெங்கும் குழந்தைகள் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்

இது 2000 வருடகாலமாக சர்ச்சுகளில் நடக்கும் கொடூரம் என்று தெரியவந்துள்ளது.

ஆங்கில மாதம் நவம்பர் 14 குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் பல இந்திய குழந்தைகளுக்கு அது மிகவும் கொடூரமான நாளாக இருக்க பெரும் வாய்ப்பு நிலவியுள்ளது. இதை தமிழக மற்றும் இந்திய “மதசார்பற்ற” ஊடகங்களும் மூடிமறைகின்றன.

அது என்ன?

அமெரிக்க முதல் ஆஸ்திரேலியா வரை ஒரு கிறிஸ்தவ வெள்ளைக்கார நாடுகள் கூட குறையாமல் அனைத்து நாடுகளிலும் அனைத்து வகை சர்ச்சுகளும் (கத்தோலிக்க [RC], ப்ராடஸ்டண்ட [CSI] முதலியவை) காவல் துறை மற்றும் நீதி துறை விசாரனையிலும் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டும் இருக்கின்றன. ஏன் ஐக்கிய நாடுகள் சபையே (United Nations, UN) சர்ச்சுகளை கண்காணித்து இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அறிக்கை வெளியிடுகிறது. இதெல்லாம் எதற்காக?

ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை ஆயிரம் ஆயிரம் கிறிஸ்தவ பாதிரியார்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் பல குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர், பல மன அழுத்ததில் சிக்கி வாடுகின்றனர். இது இன்று நேற்று நடக்கவில்லை என்றும் இது கிறிஸ்தவ சர்ச்சு தோன்றியதிலிருந்தே, அதாவது சுமார் கத்தோலிக்க  என்று மூன்று கிறிஸ்தவ பாதிரியார்களே (தாமஸ் பி. டாயில் மற்றும் இருவர்) ஒரு புத்தகம் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு ஆபத்து

இதானால் ஏன் இந்திய குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று நீங்கள் கேட்பீர்கள்.

இந்த கொடூரம் நிறைந்த பிரச்சனை நம் நாட்டிலும் நிகழ்கிறது. சில நூறு விசாரனைகளும் நடந்து தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள் பல பாதிரியார்கள். ஆனால் இதை சர்ச்சுகளும் மதசார்பற்ற ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து மூடி மறைத்துவிடுகின்றனர்.

இவை பெரும்பாலும் செய்தியாக வருவதில்லை. இதற்க்கு மேல் தெரிந்தும் தெரியாமலும் பல ஆயிரம் பலாத்கார நிகழ்வுகள் வெளியே வருவதே இல்லை. உதாரணமாக, உதகையில் அமெரிக்கவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு தமிழ் கிறிஸ்தவ பாதிரியார் இன்றும் பாதிரியாராக இருக்கிறார்.

அவர் ஏன் நாடு கடத்தப்பட்டார் தெரியுமா?

அந்த தமிழ் கிறிஸ்தவ பாதிரியார் அமெரிக்காவில் சிறையிலிடப்பட்டார்.

அவர் ஏன் அமெரிக்காவில் சிறை சென்றார் தெரியுமா?

அங்கு அவர் குழந்தை பலாத்காரத்தில் ஈடுபட்டு அது நீதிமன்ற வழக்காகி அவர் தண்டனைக்குள்ளானார். அமெரிக்காவில் அவருக்கு பாதிரியாராக தடை. ஏன் அந்த நாட்டுக்குள் நுழையவே அவருக்கு இப்பொழது தடை.

ஆனால் இன்றும் அவர் தமிழ் நாட்டில் கவலையே இல்லாமல் பாதிரியாரக உள்ளார். உங்கள் குழந்தைகளை அவர் இருக்கும் சர்ச்சுக்கோ பள்ளிக்கோ அனுப்பி வைப்பீர்களா? இது தெரிந்தும் அவரை பாதிரியாராகவே வைத்துள்ள கிறிஸ்தவ சர்ச்சுகள், உங்களை ஏளனம் செய்கிறது. இதற்கு உடந்தை யார்?

பாதிக்கப்படும் குழந்தைகள் அனைத்து மதங்களை சார்ந்தவர்கள். வேளாங்கண்ணி சர்ச்சுக்கும் மற்ற சர்ச்சுக்கும் இந்துக்களும் செல்கின்றனர், அதுவும் குழந்தைகளுடன் பல்லாயிரம் பல லட்சம் பேர் செல்கின்றனர்.

அது மட்டுமா. பெரும்பாலான பள்ளிகள் கிறிஸ்தவ சர்ச்சுகளாலும் கிறிஸ்தவ இயக்கங்களாலும் நடத்தப்பட்ட வருகின்றன. கிறிஸ்தவ வெள்ளையர்களின் நாடுகளில் இதைப்போன்ற கிறிஸ்தவ சர்ச்சு பள்ளிக்கூடங்களிலும் சர்ச்சுகளில் தான் குழந்தை பலாத்காரங்கள் பல லட்சம் நடந்துள்ளன.

இங்கு இது நடக்காமல் தடுக்க மதசார்பற்ற ஊடகமோ அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ உதவ மாட்டார்கள். இதற்கு மேலே கூறிய உதகை நிகழ்வு ஓர் ஆதாரம்.

இதற்கு ஒரே தீர்வு சர்ச்சுகளையும் சர்ச்சு பள்ளிக்கூடங்களையும் தேசிய மயமாக்குதலே. அது மற்றும் இன்றி இவை கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை இல்லாதவர்கள் கண்கானிப்பில் தொடர்ந்து இருக்க வேண்டியதும் மிக அவசியம். 2000 வருட கொடூரம் சில நூறாண்டுகளில் கூட தீர்ந்துவிடும் என்று எப்படி சொல்ல முடியும்?

இது மதசார்பின்மைப் பற்றிய விவாதம் இல்லை. இது நம் வருங்கால சந்ததியினரின் நம் குழந்தைகளின் அடிப்படை மனித உரிமை வாழ்வுரிமை. இது கிறிஸ்தவ குழந்தைகளையே அதிகமாக பாதிக்கிறது. ஏனெனில் அவர்கள் பள்ளிக்கூடம் செல்வது மட்டுமல்லாமல் சர்ச்சுக்கும் அதிகமாக செல்கிறார்கள்.

மக்களே விழித்திடுங்கள்… அல்லது கைநழுவி விடும் பிரச்சனை…

மேலும் விவரங்களுக்கு:

1. Royal Commission into Institutional Responses to Child Abuse
2. Catholic Sexual Abuse cases
3. Sex, Priests and Secret Codes

Note:
1. இது ஆசிரியரின் சொந்த கருத்து. இதனை PGurus கருத்துக்களாக எடுத்து கொள்ள கூடாது.
2. Proofread by Shri Krishnamoorthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here