ஜெயலலிதா கவலைக்கிடமா? விரைவில் லண்டன் செல்வாரா?

ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் இல்லையா?

2
3328

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் இல்லையா? அவர் மேல் சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படுவாரா?

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]மிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டெம்பர் மாதம் 22ம் தேதி அன்று காய்ச்சல் மற்றும் நீர்ப்போக்கு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று வரை அவர் மருத்துவ மனையிலேயே இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

டிராக்கியோஸ்டமி (tracheostomy) என்பது ஒரு நோயாளி சுயமாக சுவாசிக்க முடியாதபோது  கழுத்தின் முன் பகுதியில் அறுவை சிகிச்சை மூலமாக மூச்சுக்குழாய் நோக்கி ஒரு துளை இட்டு  அதன் மூலம் சுவாசத்தை ஏற்படுத்துவதாகும்.

அவர் கோப்புகளை முறையாக அலசி ஆராய்ந்து கையெழுத்திடும் நிலையில் இல்லாதது 7.8 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலமான தமிழகத்தை நெருக்கடியான நிலைமைக்கு தள்ளியுள்ளது. ஜெ-விற்கு தொடர்ந்து சிகிச்சை  அளித்து வரும் அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் அவரது உடல்நிலை தொடர்பாக இதுவரை பத்திற்கும் மேற்பட்ட மேம்போக்கான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால் இன்று வரை அரசு நிர்வாகத்தின் தரப்பில் இருந்தோ அல்லது ஜெ -வின் தலைமையில் செயல்படும் அதிமுக கட்சியின் தரப்பில் இருந்தோ, இன்று வரை யாரும் இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை.

சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடைவதாகவும் அவர் வெகு விரைவில் பூரண குணமடைவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

டிராக்கியோஸ்டமி (tracheostomy) என்பது ஒரு நோயாளி சுயமாக சுவாசிக்க முடியாதபோது  கழுத்தின் முன் பகுதியில் அறுவை சிகிச்சை மூலமாக மூச்சுக்குழாய் நோக்கி ஒரு துளை இட்டு  அதன் மூலம் சுவாசத்தை ஏற்படுத்துவதாகும்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் ஒரு பத்திரிக்கை ஒன்று, வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைதேர்தலில் அஇஅதிமுக சார்பாக போட்டியிடவுள்ள  வேட்பாளர்களது பெயர்களை பரிந்துரைக்க தேர்தல் கமிஷனின் பி-படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திற்கு பதில் கைரேகை பதித்திருப்பதை பற்றி செய்தி வெளியிட்டிருந்தது.

கையில் பேனா பிடித்து எழுத முடியாத நிலையில் முதல்வர் ஜெயலலிதா பி-படிவத்தில் தனது கட்டை விரல் ரேகையை பதிந்துள்ளார்.  மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் மூத்த மருத்துவர் Dr. P.பாலாஜி என்பவர், முதல்வர் தனது முன்னிலையில்தான் இந்த கை ரேகையை பதிந்ததாக சான்று அளித்துள்ளார். அந்த சான்று அறிக்கையில், நோயாளி சமீபத்தில் டிராக்கியோஸ்டமி எனும் சிகிச்சைக்கு உட்பட்டதால் அவரது வலதுகையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தற்காலிகமாக அவரால் கையெழுத்திட இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]30[/dropcap] வருடங்களுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை பொது மக்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் “ஒரு முதல்வரோ அல்லது மந்திரியோ நீண்ட நாட்களுக்கு உடல்நிலை சரி இல்லாதபொழுது, அவர் பூரண உடல் நலம் பெரும் வரை திடமாக சிந்தனையும் சுயமாக செயல்படும் திறனும் உடைய இன்னொருவரை அந்த பதவியில் அமர்த்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் யாரும் அவருடன் மருத்துவமனையில் இல்லை. அவரது அண்ணன் மகளும் பத்திரிக்கையாளருமாகிய தீபாவை, முதல்வரை சூழ்ந்துள்ள ஒரு கும்பல், மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் காய்ச்சல் மற்றும் நீர்போக்கிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி புது தில்லி எய்ம்ஸ் மற்றும் லண்டனை சேர்ந்த தீவிர நோய் சிகிச்சை மருத்துவ நிபுணர்களால் பல வாரங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது மாபெரும் வினோதம். இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது என்பது தெளிவாகிறது. அனால் இன்று வரை ஜெயலலிதாவுடன் போயஸ் தோட்டத்தில் வாழ்ந்து வரும் நண்பர் சசிகலா நடராஜன் தவிர வேறு எவரும் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் யாரும் அவருடன் மருத்துவமனையில் இல்லை. அவரது அண்ணன் மகளும் பத்திரிக்கையாளருமாகிய தீபாவை, முதல்வரை சூழ்ந்துள்ள ஒரு கும்பல், மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இன்று வரை தமிழக அரசோ அல்லது முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் அடைந்து வருகிறார் என்று அறிக்கை அளிக்கும் அப்பல்லோ மருத்துவமனையோ இன்று வரை அவருடைய எந்த ஒரு புகைப்படமும் வெளியிடவில்லை. தமிழக அரசு பத்திரிக்கையாளர்கள் மேல் இதுவரை 60-ம் மேற்பட்ட குற்ற மான நஷ்ட வழக்குகளை தொடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பத்திரிக்கையும் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக ஏதேனும் சர்ச்சையான செய்தி வெளியிட்டால் அரசின் கோபத்தை சம்பாதிக்க வேண்டி வருமோ என பயந்து தவிர்த்து வருகின்றனர்.

கூடுதல் அரசியலமைப்பை சேர்ந்த சிலரிடம் மாநில அரசின் முக்கிய பொறுப்புகளும் நிர்வாக முடிவு எடுக்கும் அதிகாரமும் இருப்பது பொது மக்களிடையே மிகுந்த கவலையையம், பயத்தையும்   ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையில், அரசியல் பார்வையாளர்கள் “ஜெயலலிதாவிற்கு பின்” என்ன நிகழும் என்பது பற்றிய விவாதத்தை துவங்கியுள்ளனர். அஇஅதிமுக-வில் ஜெயலலிதாவிற்குப் பிறகு, அவர் இல்லாத நேரத்தில் கட்சியை நிர்வகிக்கும் அடுத்த நிலை தலைவர் என ஒருவர் கூட இல்லாதது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி, இங்கிலாந்தில் இருந்து சிகிச்சை அளிக்க வந்த  பிரிட்டிஷ் மருத்துவர் ரிச்சர்ட் பீல் அவரது ஆலோசனை படி முதல்வர் ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்கு லண்டன் கொண்டு செல்லலாம் என்ற தகவல் பரவியுள்ளது. நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் அவர் தனி விமானம் மூலம் லண்டன் செல்லலாம் என புலனாய்வு வட்டாரம் தெரிவிக்கின்றது.

எங்களது குழுவுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அரசியல் விமர்சகர், வர்ணனையாளர் மற்றும் ஆர்வலர் போன்றோர் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமுல் படுத்துவதே சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். எப்படியோ, இந்த சஸ்பென்ஸ் ஒரு முடிவிற்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

குறிப்பு:
1. இந்த கட்டுரை சம்பந்தமான கூடுதல் தகவல்கள் நீல நிறத்தில் பத்திகளுக்கு நடுவே குறிப்பிடப்பட்டுள்ளது.

2 COMMENTS

  1. As indicated by Deepa a CM has been kept under lock and key and the officials are dancing to the tunes of 1 person. The Government of India and the General Public of Tamil Nadu needs to take action by filing a case and getting the Governor to Visit inside the room of the CM. Sending false news about the CM to the media by the hospital authorities either to pacify the public or at the demand of this 1 person is totally un acceptable.

    The actual fact should be brought to the notice of the public. Since the poor public do not understand the meaning of high terms indicated in medical reports they are being fooled by the Hospital authorities saying she is fine and talking. How can a person who is having tube in the throat can talk.

  2. I am very happy that Jaya Lalitha is back to life. Also about the theft of a hotel by PC. Who else but pguru ill give these latest news of 1916 now! Thanks.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here