அஇஅதிமுக-வின் எதிர்காலம் என்ன? ரகசியமாய் விவாதிக்கும் கட்சியினர்.

அஇஅதிமுக-வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சி உடையும் வாய்ப்புள்ளது

0
2034

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]செ[/dropcap]ப்டம்பர் 22ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல்  இன்று வரை தமிழகமும், அஇஅதிமுக-வும் ஒரு அரசியல் அசாதாரண சூழ்நிலையை சந்தித்துள்ளது. தமிழகத்தில் ஒரு பெரும் அரசியல் கட்சியாக இருக்கும் அஇஅதிமுக-வின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதே மக்களின் கேள்வியாகவும், விவாத தலைப்பாகவும் உள்ளது. ஆனால் இந்த விவாதங்கள் மிகவும் சத்தமின்றி நடக்கின்றன.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தலைமையில் செயல்படும் மன்னார்குடி கொள்ளை கூட்டத்திற்கும் அவர்களின் அடியாட்கள் கூட்டத்திற்கும் பயந்து  தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பத்திரிக்கையும் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக எந்த ஒரு சர்ச்சையான செய்தியையும் வெளியிட பயந்து தவிர்த்து வருகின்றனர்.

நவம்பர் 19-தேதி நடை பெற உள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் தாக்கல் செய்துள்ள உறுதி சான்றிதழ் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அன்று காய்ச்சல் மற்றும் நீர்போக்கு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நிலையில் இல்லை என்பதற்கு சான்றாகும். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் ஒரு அரசு ஆவணத்திலோ அல்லது தனிப்பட்ட விஷயம் சார்பாகவோ தனது  தனித்தன்மை வாய்ந்த கையெழுத்திற்கு பதிலாக தனது கை ரேகையை பதித்தது இதுவே முதல்முறையாக இருக்கும். உண்மை என்னவெனில், ஜெயலலிதா தனது கையால் பேனா பிடித்து கையெழுத்து போடும் நிலையில் இல்லை. மருத்துவமனை நிர்வாகம், அரசு அதிகாரிகள் மற்றும் மன்னார்குடி கும்பல் ஒன்றிணைந்து ஜெயலலிதாவை மருத்துவ மனைக்குள் சிறை வைத்து அங்கு என்ன நடக்கின்றது என்பது வெளியில் தெரியாதவாறு ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தலைமையில் செயல்படும் மன்னார்குடி கொள்ளை கூட்டத்திற்கும் அவர்களின் அடியாட்கள் கூட்டத்திற்கும் பயந்து  தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பத்திரிக்கையும் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக எந்த ஒரு சர்ச்சையான செய்தியையும் வெளியிட பயந்து தவிர்த்து வருகின்றனர். பொதுவாக ஜெயலலிதா ஒரு திறந்த மனப்பான்மை உடையவர் என்றும் அவர் மற்றவர்களத்து எதிர் கருத்துகளையும், தூற்றல்களையும் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் என்றும் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும். ஆனால் பொது மக்களிடையேயும், எதிர்த்து பேசுபவர்களிடையேயும் ஒரு பயத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் சசிகலா மற்றும் அவருக்கு துணையாக செயல்படும் கும்பலும் போலீஸ் துணையுடன் கைது மற்றும் குற்ற மான நஷ்ட வழக்கு போன்றவற்றை கட்டவிழ்த்து விடுகின்றனர் என்று கூறப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காவல் படை அணிவகுப்பை மரியாதையை பெற்றுக்கொண்டு பின்னர்  மக்களிடையே உரையாற்றிய போது அங்கிருந்தவர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலையை பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.  அவரால் ஒரு அடி  எடுத்து வைக்க கூட மிகவும் சிரமப் பட்டார். அவரது முகம் அவரது வலியினை எல்லோருக்கும் வெளிக்காட்டியது. பொதுவாக ஜெயலலிதா தனது மனக் கஷ்டங்களையும், உடல் உபாதைகளையும் தாங்கி கொண்டு சிறிதும் வெளியே காட்டிக்கொள்ளாதவர்.

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]ந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவரான ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவரது உடல் நிலையின் உண்மை நிலவரம் குறித்து பொது மக்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் நலம் விரும்பிகள், ஒருவேளை ஆகஸ்ட் மாதம் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட போதே அவருக்கு முறையாக சிகிச்சை அளித்திருந்தால் இப்போதைய நிலையை தவிர்த்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஜெயலலிதாவுடன் உள்ள நெருக்கத்தால் சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் இன்று மிகப்பெரும் பணக்காரர்கள் வரிசையில் யிடம் பிடித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் அவர்கள் வைப்பதுதான் சட்டமாக உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏறத்தாழ 2 தலைமுறைகளாக சென்னையில் வசித்து வரும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் காலம் சென்ற திரு M.G. இராமச்சந்திரன் (எ) MGR அவர்கள் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அரசு மற்றும் கட்சி தரப்பில் இருந்து அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளும், சிகிச்சையில் இருந்த முதல்வரின் புகைப்படங்களையும் வெளியிட்டனர். ஆனால் அப்போது அவருடன் MGR -ன் துணைவியார் ஜானகி அவர்களும் மற்ற குடும்பத்தினரும் அவருடன் இருந்தனர். அவர்களுக்கு பொது மக்களிடம் இருந்த எதையும் மறைக்கும் நோக்கம் இல்லை.

ஜெயலலிதாவுடன் உள்ள நெருக்கத்தால் சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் இன்று மிகப்பெரும் பணக்காரர்கள் வரிசையில் யிடம் பிடித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் அவர்கள் வைப்பதுதான் சட்டமாக உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மூத்த அரசியல்வாதியும் பாஜக-வின் மூத்த தலைவருமான திரு சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு அதிகாரிகள்  நியமனம் சசிகலா மற்றும்  அவரது கணவர் நடராஜன் (இவர் ஒரு விடுதலைப்புலி மற்றும் பிற தேசத்திற்கு எதிராக செயல்படும் கும்பல்களின் கைக்கூலி  என்று கூறப்படுகின்றது)  ஆகியோரது விருப்பப் படியே நடக்கின்றது என  சாடியுள்ளார்.

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]செ[/dropcap]ன்னையை சேர்ந்த D. அன்பழகன் எனும் புலனாய்வுப் பத்திரிக்கையாளர் சுமார் 5 வருடங்களாக கஷ்டப்பட்டு திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரன்களாகிய மாறன் சகோதரர்களின் (கலாநிதி மற்றும் தயாநிதி) ஆகியோர் செய்த ஊழல்களைப்  பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.  ஒரு வேளை அவர் மன்னார்குடி கும்பல் செய்த ஊழல்கள் மற்றும் அடித்த கொள்ளைகள் பற்றி எழுத ஆரம்பித்தால் அவர் இன்னும் பெரிய புத்தகத்தை வெளியிடலாம். உதாரணமாக சசிகலாவிற்கு வேண்டப்பட்ட ஒரு இலை நிலை இந்திய நிர்வாக சேவை அதிகாரி (Jr. IAS officer) 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சுமார் ரூ.3,500 கோடி ($525 million) மதிப்பிற்கான சொத்து சேர்த்துள்ளார் என்கின்றனர்.

ஒரு விஷயம் என்னவென்றால் ஜெயலலிதா 2011-ம் ஆண்டிலேயே சசிகலா மற்றும் அவரது சுற்றத்தாரை போயஸ் தோட்டத்தில் இருந்து துரத்திவிட்டார்.

ஒரு விஷயம் என்னவென்றால் ஜெயலலிதா 2011-ம் ஆண்டிலேயே சசிகலா மற்றும் அவரது சுற்றத்தாரை போயஸ் தோட்டத்தில் இருந்து துரத்திவிட்டார். ஜெயலலிதா, இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், சசிகலா மற்றும் உறவினர்களை கட்சியில் இருந்த நீக்கிவிட்டதாகவும் அவர்களுடன் கட்சியை சேர்ந்த எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தார். இதனை கேள்விப்பட்ட கட்சியில் உள்ள ஜெயலலிதா நலம் விரும்பிகள் மாநிலம் முழுவதும் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஆனால், சிறிது காலத்திலேயே சசிகலாவும் அவரது சுற்றத்தாரும் மீண்டும் போயஸ் தோட்டத்திற்குள்  நுழைந்தனர்.  இதற்கு கர்நாடக நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்த வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு என கூறப்பட்டது. ஒரு ரகசிய கட்சிக் கூட்டத்தில் ஒரு அதிமுக தலைவர்,  சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவும் அவரது சுற்றத்தாரும் இந்த வழக்கில் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் இருப்பதற்காக அவர்கள் போயஸ் தோட்டத்தில் மறுபடியும் அனுமதிக்கப்பட்டதாக கூறினார்.

காவல்துறையின் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின் படி சசிகலாவின் கணவர் நடராஜன், ஒரு வேளை ஜெயலலிதா உடல் நிலை தேற்றம் அடையவில்லை என்றால் தனக்கு ஆதரவான சில அஇஅதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களோடு கை கோர்த்து தன்னை முதலமைச்சர் என பிரகடனப்படுத்திக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றார்.

தலைமை செயலகத்தில் இருந்த வந்த மற்றும் ஒரு செய்தியின் படி சசிகலா அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (எ) ஓபிஎஸ்-ஐ அழைத்து ஜெயலலிதா பயணிக்கும் கார் நிறுத்தும் இடத்தில் ஓபிஎஸ்  தனது காரை நிறுத்தக்கூடாது என கண்டிப்புடன் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த  ஓபிஎஸ் இன்று வரை தனது காரை அங்கு நிறுத்துவதில்லை.

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]ளுநர் வித்யாசாகர் ராவ் அவர்கள், முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பணிக்கு திரும்பும் வரை அரசவை கூட்டங்களுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை ஓபிஎஸ்-ஸிடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவிற்கும் ஓபிஎஸ்-ஸிற்கும் இடையே மனக்கசப்பு  இருப்பதால்   எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். இதனால் சசிகலா தனது ஆதரவாளராகிய எடப்பாடி பழனிசாமியை அரசவை கூட்டத்தை கூட்டவும், தலைமை வகிக்கவும்  அதிகாரம் வழங்க கூறியுள்ளார். இது எல்லாம் தெரிந்தும், பயந்தும் பணிந்தும் பழகிய பத்திரிக்கையாளர்கள் சசிகலா பற்றியோ அல்லது அவரை சூழ்ந்துள்ள கொள்ளை கூட்டத்தைப் பற்றியோ எழுதுவதில்லை.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை சம்பந்தமாக சந்தேகங்கள் எழுந்ததால், தில்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் இருந்து ஒரு மூத்த மருத்துவர் குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள முதுகெலும்பற்ற பத்திரிக்கைகள் ஹிந்துத்வா அமைப்புகள் பற்றியும், பாமக பற்றியும் உண்மைக்குப் புறம்பான மற்றும் அவதூறான விஷயங்களை  எழுதி வருகின்றன. ஏனென்றால் இந்த இரண்டு தரப்பும் ஒருபோதும் பத்திரிக்கைகளின் விஷ(ம)தத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படுவது இல்லை.

திமுக தலைவர் மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவியும் 2G வழக்கில் சிறை சென்று ஜாமினில் வெளி வந்துள்ள கனிமொழி-யின் தாயுமான ராஜாத்தி அம்மாள் (எ) தர்மா சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்றுள்ளார். இந்த நிகழ்வு வரும் காலத்தில் திராவிட அரசியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு கட்டியம் கூறுவதாக அரசியல் ஆர்வலர்கள்  கூறுகின்றனர். கருணாநிதியின் மிகவும் பிரியமான மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள் ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலா மற்றும் மன்னார்குடி கொள்ளை கூட்டத்திற்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்று கூறினார் என திமுக வட்டாரம் கூறுகின்றது .

கருணாநிதியின் இரண்டாவது மனைவி மற்றும் மு.க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் வயது காரணமாக நல்ல உடல் நிலையில் இல்லை என்பதும் அவர் எந்த அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு தமிழ் நாட்டின் அரசியல் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருகின்றது. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை சம்பந்தமாக சந்தேகங்கள் எழுந்ததால், தில்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் இருந்து ஒரு மூத்த மருத்துவர் குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அண்மையில் கிடைத்த செய்தியின் படி, ஜெயலலிதா உடல்நிலை சற்று தேறி மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு வரும் பட்சத்தில் தேவையான  மின்தூக்கி மற்றும் உயர் தொழில்நுட்ப மருத்துவக்  கருவிகள் ஆகியவை பொருத்தப்பட்டு அனைத்து மருத்துவ அவசர நிலைகளையும்  சமாளிக்கும் வகையில் போயஸ் தோட்ட இல்லம் ஒரு சிறிய மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழகம் ஒரு நீண்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மையை எதிர்நோக்கி உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இரண்டாம் நிலை தலைமை இல்லாத அஇஅதிமுக-வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சி உடையும் வாய்ப்புள்ளது. இதற்கிடையில் திமுக-வும் காங்கிரஸ்-உம் அஇஅதிமுக கட்சி தலைவர்களை தங்களது பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியலின் எதிகாலத்தை காலம் மட்டுமே தீர்மானிக்கும்.

குறிப்பு:
1. இந்த கட்டுரை சம்பந்தமான கூடுதல் தகவல்கள் நீல நிறத்தில் பத்திகளுக்கு நடுவே குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here