நிலக்கரி இறக்குமதி விலை மிகைப்படுத்தும் ஊழல் – SBI உடந்தை?

நிலக்கரி இறக்குமதியில் வங்கிகளின் பங்கு என்ன?

0
1832

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]நி[/dropcap]லக்கரி இறக்குமதி கார்ப்ரேட் கம்பெனிகள் பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் கிளைகளின் மூலமாக தங்கள் விலையை மிகைப்படுத்தும் உத்திகளால் பண மோசடி செய்துள்ளன. இந்த முறைகேட்டை வெளியில் கொண்டுவரத் தயங்கியதன் மூலம் அருந்ததி பட்டாச்சாரியா ஏறுமாறான வெளிச்சத்துக்கும் கண்டனத்துக்கும் வந்துள்ளார். இத்தனைக்கும் அவர் அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு போட்டியிடுபவருள் ஒருவர் ஆவார். பிரதம மந்திரி அலுவலகத்தின் கடுமையான உத்தரவின் பேரில், நிதித்துறை புலனாய்வுக் கழகம் (Directorate of Revenue Intelligence – DRI), இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூபாய் 30000 கோடிக்கும் அதிகமான (4.47 பில்லியன் டாலர்கள்) நிலக்கரி சம்பந்தமான ஊழலை விசாரிக்கக் கோரப்பட்து. இதில் சில நிலக்கரி இறக்குமதியாளர்கள் நிலக்கரி விலைகளை மிகைப்படுத்தி மெகா லாபங்களை மடக்கிக் கொண்டுவிட்டனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்கையில், மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக DRI உணர்ந்தது. சுருக்கமாகச் சொன்னால், இது நிலக்கரி விலையை மிகைப்படுத்திக் கூட்டிய செயல் (over invoicing – ஓவர் இன்வாய்சிங் எனப்படும்). நிலக்கரி என்னவோ இந்தோனேஷியாவிலிருந்து இந்தியாவிற்கு நேரடியாகவே இறக்குமதி செய்யப்பட்டது; ஆனால் நிலக்கரி பில்கள் (Bills)  மட்டும், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் துபாயில் உள்ள போலி மற்றும் பினாமி நிறுவனங்கள் மூலம் இந்தியா வந்தடைந்தன. பெரும்பாலான இந்திய கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களுக்குச் சொந்தமான இந்த பினாமி மோசடி கம்பெனிகளைப் பயன்படுத்திக் கொண்டு, நிலக்கரியை அதிக விலைக்கு விற்பதன் மூலம், அட்டகாசமான ஆதாயங்கள் பெற்றன; ஆனால், இத்தகைய செயல் சாதாரண மனிதன், தான் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மிக அதிக விலை கொடுக்கும்படி செய்துள்ளது.

2008லிருந்தே நிலக்கரி இறக்குமதி ஊழலில் இந்த விலை மிகைப்படுத்தும் (ஓவர் இன்வாய்சிங்) யுக்தி ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 90 விழுக்காடு இந்தோனேசியாவிலிருந்துதான் பெறப்படுகிறது, 5 விழுக்காடு மட்டுமே ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்படுகிறது. இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் 70 விழுக்காடு அதானி கம்பெனி குழுக்கள் (Adani Group of Companies) மூலமாக நடத்தப்படுகிறது; இரண்டாவது இடம் – அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்பெனிகள் குழு (Reliance Group Companies) – இதன் பங்கு 5 விழுக்காடுகள்;  குறிப்பிடத்தக்க மற்ற இறக்குமதியாளர்கள்  எஸ்ஸார் குழு (Essar Group), ஜெ எஸ் டாபில்யூ ஸ்டீல்ஸ் (JSW Steels) மற்றும் மாநில அரசுகளின் சம்பந்தம் பெற்ற தனியார் கம்பெனிகள் மற்றும் மின் சக்தி உற்பத்தி செய்யும் பொது நிறுவனங்கள் (PSUs).

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””][/dropcap]ந்த பணம் பரிமாற்றல் மற்றும் விலை மிகைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள வங்கிகள் – சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் துபாயில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI), பரோடா வங்கி (Bank of Baroda – BOB), ஐஸிஐஸிஐ (ICICI) வங்கிக் கிளைகள்.  வங்கிகளின்  மோசடிக் கூட்டு இல்லாமல், இந்தியாவில் மாபெரும் உழல்கள் நடைபெறுவதில்லை. மோசடித் தனமான விலை மிகைப்படுத்தல் என்பது SBIயின் அயல் நாட்டுக் கிளைகள் மூலம் 85 விழுக்காடுகளும், BOBயின் அயல் நாட்டுக் கிளைகள் மூலம் 10 விழுக்காடுகளும் ICICI வங்கியின் அயல் நாட்டுக் கிளைகள் மூலம் 5 விழுக்காடுகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த  மொத்த மோசடிப் பணம் பரிமாற்றங்களில் சம்பந்தப்பட்ட தொகையோ 30000 கோடி ரூபாய்களாகும் (4.47 பில்லியன் டாலர்கள்).

நிதிப்புலனாய்வுக் கழகமான DRI, இந்த விலை மிகைப்படுத்தும் யுக்திகளால் மட்டுமே, நிலக்கரியின் விலை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் 250 விழுக்காடுகளுக்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளன என்று கண்டறிந்தது. பிரதம மந்திரியின் அலுவலகத்திலிருந்து சம்மதம் பெற்றபின், நிதிப்புலனாய்வுக் கழகம் (DRI) SBI, BOB மற்றும் ICICI வங்கிகளுக்கு தாக்கீதுகள் அனுப்பியது. இதில் ICICI வங்கி மட்டுமே புலனாய்வுக் குழுவுடன் ஒத்துழைத்தது. தங்கள் மூலம் கம்பெனிகள் விலை மிகைப்படுத்திய எல்லா விவரங்களையும் சமர்ப்பித்தது. நிலக்கரி விலை 250 விழுக்காடு மிகைப்படுத்தப்பட்டது இதன்  மூலம் வெளியாகியது. இது மின்சக்தியின் விலையை நேரடியாகவே பாதிப்பது வெளியாகியது.

ஆனால் அரசுடைமை வங்கிகளான SBI மற்றும் BOB வங்கிகள் கல்லுளி மங்கன்கள் போல் இந்த விவகாரத்தில் அமைதிகாத்தன. மே 20ல் நிதித்துறைச்செயலர் ஹஷ்முக் ஆதியா எழுதிய கடிதத்தில், DRI கோரும் தகவல்களைப் பகிர்ந்தளிக்கும்படி கேட்டிருந்தார். நிதிச் செயலரின் ஆணையை, அருந்ததி பட்டாச்சார்யா, சிங்கப்பூர் மற்றும் இதர அயல் நாடுகளின் ரகசியக்காப்புச் சட்டங்கள் படி ஏற்கமுடியாது என்று நிராகரித்து விட்டார். அரசுத்துறை வங்கிகள் தகவல்களை அளிக்க மறுத்ததால் DRI நிதித்துறை செயலரின் உதவியை மறுபடியும் நாடியது.

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]நி[/dropcap]தித்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியாவிற்கும் அருந்ததி பட்டாச்சாரியாவுக்கும் இடையே நடந்த உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணிபுரியும் நல் எண்ணம் கொண்ட நண்பர்கள் பீ- குருஸ் (pgurus.com) இணையதளத்திற்கு சொல்லும் தகவல் என்னவென்றால், DRI அலுவலர்கள், நிலக்கரி ஊழலில் நடந்துள்ள விலை மிகைப்படுத்துதல் யுக்தியைக் கண்டுபிடிக்க உதவுமாறு கோரியும், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும், சிறிதும் ஒத்துழைக்கவில்லை என்பதே.

ICICI வங்கி மட்டும் தன் அன்னிய நாட்டுக் கிளைகளின் தகவல்களைத் தரமுடியுமேயானால், அதே அன்னிய நாட்டில் கிளைகள் வைத்திருக்கும் SBI வங்கியும், BOB வங்கியும் – இத்தனைக்கும் அரசுத்துறை வங்கிகள் – ஏன் தகவல்கள் தர முடியவில்லை? அருந்ததிபட்டாசாரியா சில கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறாரா, நிதித்துறைச் செயலரைத் தடுக்கிறாரா? இந்த புலனாய்வு, பிரதம மந்திரி அலுவலகத்தின் மூலமாகவே ஆணையிடப்பட்டதால், இது எவ்வாறு அருந்ததி பட்டாசாரியாவின் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி நியமனத்தின் சாத்தியக் கூறுகளைப் பாதிக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி கொண்ட விவகாரம்.
DRI-SBI correspondence Page 1
DRI-SBI correspondence Page 2
DRI-SBI correspondence Page 3

திருமதி பட்டாச்சாரியாவிடம் கேட்டது:
சிங்கப்பூர் வங்கி ரகசியச்சட்டம் விதி  S47ஐக் கவனமாகப் படித்தோம். உங்கள் கடிதம் பக்கம் 2இல் உள்ள முதலாம் விதியை மேற்கோள் காட்டுகிறது. ஆனால், தகவலை அரசாங்கம் கேட்கும் போது, பக்கம் 3ல் உள்ள, சட்டத்தின் ஐந்தாவது விதியைத்தான் மேற்கோள் காட்ட வேண்டும் என்று உறுதிபடக் கூறுகிறோம். சிங்கப்பூர் வங்கிச் சட்டம் விதி S47 முழுதும் கீழே தரப்பட்டுள்ளது.

Singapore Mas Rules 47

குறிப்பு: ஒரு அமெரிக்க டாலர் 67.15 இந்திய ரூபாய்க்குச் சமம், என்ற விகிதம் மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here