அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய...

கடந்த செவ்வாய் கிழமை அன்று தனது வழக்கை ராஜேஷ்வர சிங் நடத்தக் கூடாது என்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்த உபேந்திரா ராய் தனது முயற்சியில் தோல்வியை தழுவினார். அமர்வு நீதி...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்ற  தமிழக அரசின் ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்தது. பசுமை தீர்ப்பாயம் இந்த பிரச்சினை  குறித்து ஆராய்ந்து அறிக்கை  சமர்பிக்க கோரி, ஒரு...

காங்கிரசுக்கு எனத் தனியாக  ஹார்வெஸ்ட் டிவி – விரைவில் அறிமுகம்

வரும் புத்தாண்டில் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு பெற்ற ஹார்வெஸ்ட் டிவி ஹெச் டிவி என்ற பெயரில் மக்களை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பிரச்சாரத்துக்கு  உதவியாக இந்த டிவி விளங்க வேண்டும்...

உலக முதலீட்டார் மாநாடு பலனளிக்குமா?

வரும்  2019  ஜனவரி மாதம் உலக முதலீட்டார் மாநாட்டை சென்னையில் நடத்த தமிழக அரசு தற்போது ஆயத்தப்பணிகள் செய்து வருகிறது. இந்த மாநாட்டிற்காக 75 கோடிரூபாய் செலவு செய்யவும் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2015ம் வருடம் 100 கோடி ரூபாய் செலவில் உலக முதலீட்டார் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. 2015ம் வருட உலக முதலீட்டார் மாநாட்டில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய முதலீட்டாளர்களுடன் தமிழக அரசு ஒப்பந்தக் கையெழுத்திட்டதாககூறப்பட்டது. தற்போது மூன்று வருடத்த்pற்கு மேலாக ஆகிவிட்ட நிலையில்  ஒப்பந்தம் செய்யப்பட்ட முதலீடுகள்  நடைமுறையில் அமல்படுத்தியிருக்க வேண்டும் அல்லது முடியும் தருவாயில் இருக்க வேண்டும். ஆனால் எந்த அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பதை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை  வெளியிடவில்லை. அவ்வப்போது சில அறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பினும் ஊர்ஜிதமான புள்ளிவிவரங்களுடன் கூடிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் 2015ம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டார் மாநாட்டினால் எந்தவிதமான பயன் ஏற்பட்டுள்ளது என்பது சந்தேகமாக உள்ளது. 2015ம்  ஆண்டு உலக முதலீட்டார் மாநாட்டில், கடலூரில்  10000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு வந்த நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் தொழில் அமைப்பு, அடிப்படை தொழில் திட்டமாக (anchor project) அறிவிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையை சார்ந்து பல சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் ஏற்படும் என்றுபெருமையாக பேசப்பட்டது. ஆனால், இன்று, இந்த தொழில் திட்டம் நலிவடைந்து, நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் திவாலா சட்டத்தின் கீழ் மூடப்படும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளது. தற்போது, அங்கு எந்தவிதமான கட்டுமான பணிகளும் நடக்கவில்லை. 2015ம் ஆண்டு உலக முதலீட்டார் மாநாட்டில், தூத்துக்குடியில் 15000 கோடி ரூபாய் முதலீட்டில், உரத்தொழிற்சாலையும், இயற்கை எரிவாயு இறக்குமதி மையமும்அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்த முன்வந்த மலேஷியா நாட்டின் தொழில் அதிபர் பாராட்டப்பட்டு, முக்கியத்துவம் கொடுத்துமாநாட்டில் பெருமைப்படுத்தப்பட்டார். ஆனால், இந்த மாபெரும் திட்டம் தற்போது என்னவாயிற்று என்றே யாருக்கும் தெரியவில்லை. அவ்வப்போது உலக முதலீட்டார்  மாநாட்டை நடத்துவது, ஒவ்வொரு மாநிலத்திலும், தற்போது ஒரு விளம்பர நிகழ்ச்சி போல் தான் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில்,முதலீட்டார்களுடன் கையெழுத்து இடப்படும் திட்டங்கள், தகுந்த ஆய்விற்கு பின் எடுக்கப்பட்ட முடிவல்ல. உத்தேச திட்டங்களாக தான் முன்மொழியப்படுகின்றன. இந்தமாநாடுகளுக்கு, முதலீட்டாளர்கள் சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கப்பட்டாலும், முதலீட்டாளர்கள் நிலைமையை தீர விசாரித்து தான் முடிவெடுப்பர். பல உலகமுதலீட்டார் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 40 சதவீதம் கூட நிறைவேறுவதில்லை. தமிழ்நாட்டிலும் இதே கதிதான். இத்தகைய மாநாடுகளில்பதவியிலிருக்கும் முதல்மந்திரிகளுக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதே முக்கியமான குறிக்கோளாக கருதப்படுகிறதா என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது பல தொழில் திட்டங்கள் தடைபடுத்தப்பட்டு முடங்கிய நிலையில் உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம், போராட்டக்காரர்களின் எதிர்ப்பால், பல வருடங்கள் தடைபட்டு, அதன் பின்தான்  தொடங்கியது. நெடுவாசலில் கச்சா எண்ணெய் எடுக்கும்திட்டம் எதிர்ப்பினால் கைவிடப்பட்டு விட்டது. விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும   உதவக்கூடிய நியூட்டிரினோ திட்டம் தீவிரமாக எதிர்க்கபடுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொளச்சல் துறைமுக திட்டமும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பால்  தடைபட்டுள்ளது. சேலம் - சென்னை நெடுஞ்சாலை திட்டமும் தற்போதுதீவிரமாக எதிர்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து கொண்டிருந்த, 3000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்ட தூத்துகுடியிலுள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுனமும், வன்முறை போராட்டத்தினால் மூடப்பட்டு உள்ளது. சுற்றுப்புற சூழலுக்கு ஸ்டெர்லைட்  ஆலை பாதகம் ஏற்படுத்தவில்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம்கூறினாலும,; போராட்டக்காரர்களின் கை ஓங்கி, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட ஆணையிட்டது. சமீபத்தில், பிலிப்ஸ் கார்பன் என்ற பிரபலமான நிறுவனம்,தமிழ்நாட்டில் அமைப்பதற்கு அறிவிக்கப்பட்ட கார்பன் பிளேக் (carbon black) தொழில் திட்டத்தை வேறுமாநிலத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் தொழிற்சாலை அமைக்க ஒவ்வாத நிலையே இத்தகையஎண்ணத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தங்களை சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்வோரும், சமூக ஆர்வலர்கள் என்று வர்ணித்துக்கொள்வோரும் தமிழ்நாட்டின் பல தொழில் மற்றும் வளர்ச்சிதிட்டங்களை எதிர்க்கின்றனர். இவர்களுக்குள் சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளதாக வலிமையான சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, நடந்த வன்முறை போராட்டத்தில் விஷமிகள், சமூக விரோதிகளின் பங்கு உள்ளது என்று தமிழக முதலமைச்சர்  கூறியுள்ளார். தற்போது, பிரதம மந்திரியே தமிழ்நாட்டில் தீவிரவாதிகளும், விஷமிகளும் தவறான பரப்புரை கூறி, மக்களை திசை திருப்பி ஆக்கபூர்வமான திட்டங்கள்  எதையும்செயல்படுத்தவிடாமல் தடுக்கின்றனர் என்று கூறியுள்ளார். தொழில் நிறுவனங்களின் எதிர்காலமும், விதியும், வீதிகளில் தீர்மானிக்கப்படும் என்ற நிலை இருப்பின.  தொழில் முனைவோருக்கு முதலீடு செய்வதற்குஆர்வமும்,துணிவும் எப்படி ஏற்படும் ? தொழில் நிறுவனங்கள் அமைதியானமுறையில் செயல்பட முடியும் என்ற நிலைமையை உறுதி செய்யாமல், உலக முதலீட்டார்மாநாட்டை  கூட்டுவது விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலை. இத்தகைய நடப்பு நிலையை கருத்தில் கொள்ளாமல், தமிழக அரசு உலக முதலீட்டார் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்கிறதோ என்று எண்ணவும் தோன்றுகிறது. தொழில் முனைவோர் முதலீடு செய்வதற்குள்ள வாய்ப்புகளை எப்போதும் கூர்ந்து நோக்கிக் கொண்டு தான் இருப்பர். ஆக்கபூர்வமான சூழ்நிலையும், தக்கமுறையில்சந்தை வாய்ப்புகளும் உள்ள நிலையில், தொழில் முனைவோர்  தாங்களாகவே தொழில் அமைக்கவும், முதலீடு செய்யவும் முன்வருவர். மாநில அரசு தொழில் திட்டங்களை ஊக்குவிப்பதில் தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழில்முனைவோர்களின்  கூட்டத்தை நடத்துவது சரியான அனுகுமுறைதான். ஆனால், தொழில் நடத்த ஏதுவான நிலைமையை ஏற்படுத்தாத நிலையில், தடியெடுத்தவன்தண்டல்காரன் என்ற சூழ்நிலையுள்ள போது, உலக முதலீட்டார் மாநாடு தேவையா என்று கேட்பதில் தவறில்லை.

நேஷனல் ஹெரால்டு வழக்கை விரைவுபடுத்திய சிறப்பு நீதிமன்றம்

சு ரு க் க ம் சு.சுவாமி ஆவணங்கள் அளிக்க அனுமதி அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப ஆணை காங்கிரஸ் தலைவருக்கு கிடுக்கி பிடி சோனியாவும் ராகுலும் இனி தப்பிக்க இயலாது ENGLISH VERSION பி. ஜே....

எடிட்டர் மற்றும் இடைத்தரகர் உபேந்திரா ராயின் சொத்துக்கள் முடக்கம்

இன்னும் எவ்வளவு காலம் உபேந்திரா ராய் மௌனம் காப்பார்? அமலாக்கத் துறையினர் நாடெங்கும் அவர் வாங்கி வைத்திருக்கும் அவரது மனையடி சொத்துக்கள் மற்றும் பங்களாக்களை முடக்கிவிட்டநனர். புதன்கிழமை அன்று அமலாக்கத் துறையினர் உபேந்திர ராய் முறைகேடான...

தென்னிந்திய அரசியலில் ஊழலை எதிர்த்து சுவாமி களம் இறங்கியதில் வெற்றி

தென்னிந்திய மாநிலங்களை ஊழலிலிருந்து விடுவிக்க சுவாமி எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்க தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டு அரசியலில் ஊழல் பெருச்சாளியான ப சிதம்பரத்தை நீக்கிவிட்டால் காங்கிரஸ் சுத்தமாகிவிடும். ப. சிதம்பரம் மற்றும் அவர் குடும்பத்தாரின் மீதான...

ஜெயராம் ரமேஷுக்கும் அவர் காங்கிரஸ் சகாக்களுக்கும்  நேரடி வேண்டுகோள்

16ஆம் தேதி வெளியான கேரவன் என்ற பத்திரிக்கை The D-Companies.  இவை அனைத்தும் ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்து "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற பாரதியாரின் வாக்கின்படி அக்கிரமங்கள் நடந்த...

ராகுல் காந்தி ஓர் அதிசயம்!

இப்போது கர்னாடகா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுதும் வெளியாகிவிட்டன. நாம் இப்பொது ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்வோம் ராகுல் காந்தியின் மந்திரம் இன்னும் பலிக்கிறது.  அவர் பி.சி சர்க்கார் போல மாயாஜால வித்தைகள் செய்யலாம்....

குஜராத் பணிப்பிரிவு அதிகாரிகளுக்குள் நடக்கும் விநோத விபரீத விளையாட்டு

இந்திய அரசின் நிர்வாகத்தை உலுப்பும்  வகையில் குஜராத் பணிப்பிரிவை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த பிரிவினைச் செயற்பாடு  பற்றிய சிந்தனை  டில்லி மாநகரில் உள்ள மத்திய...

LATEST NEWS

MUST READ